Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.கவிற்கு எதிராக மாறும் தேர்தல் களம் - கலக்கத்தில் ஸ்டாலின்!

தி.மு.கவிற்கு எதிராக   மாறும் தேர்தல் களம் - கலக்கத்தில் ஸ்டாலின்!

Mohan RajBy : Mohan Raj

  |  28 March 2021 9:30 AM GMT

தேர்தல் பரப்புரைகளின் போது கட்சிகளை கையில் எடுக்கும் பிரச்சார ஆயுதமே அந்தந்த கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கின்றன. அதுபோல தேர்தல் அறிவிப்பு காலத்தில் இருக்கும் அலை கூட பிரச்சாரம் துவங்கியவுடன் மாறுவது அரசியல் அரங்கில் இயல்பானது. அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிக்கும் நேரத்தில் தி.மு.கவிற்கு இருந்து குறிப்பிட்ட சில சதவிகித ஆதரவு இன்று அப்படியே மாறி அ.தி.மு.க பக்கம் வீசுவதை கண்கூடாக பாக்க முடிகிறது. மேலும் இந்த தகவலை தொடர்ந்து தி.மு.க'வின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை தி.மு.க தலைமை "இறங்கி வேலை செய்யாவிடில் நடப்பதே வேறு" என்கிற ரீதியில் மிரட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 2021'ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டன. அப்பொழுது மக்கள் மத்தியில் குறிப்பாக அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்கள், மற்றும் சில அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்தியில் தி.மு.க ஆதரவு அலை வீசி வந்தது. அதற்கு காரணம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு போன்ற அதிருப்திகள் மக்களிடையே நிலவி வந்தன.

இந்த நிலையில் தி.மு.க'வினரும் அடுத்த ஆட்சி நமதே என்ற மமதையில் வலம் வரத்துவங்கினர். அந்த மமதையின் காரணமாக தி.மு.க'வின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்வதில் திமிர் பேச்சும், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தேர்தல் வேலைகளில் சற்று மிதப்பும் இருந்தன.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இரு முக்கிய நிகழ்வுகள் தி.மு.க பக்கமிருந்த ஆதரவு அலையை அப்படியே அ.தி.மு.க பக்கம் சற்று அதிகமாகவே திருப்பிவிட்டன. அந்த இரு முக்கிய நிகழ்வுகள், 1) அ.தி.மு.க தேர்தல் அறிக்கை, 2) தி.மு.க'வினரின் திமிரான, மிதப்பான தேர்தல் பிரச்சாரம்.

இந்த இரு குறிப்பிட்ட நிகழ்வுகளும் மக்களிடையே குறிப்பாக ஆட்சியை கைப்பற்ற முக்கிய காரணியான பெண் வாக்காளர்களிடையே பெருவாரியான மாற்றத்தை ஏற்படுத்தி விட்டன.

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஆறு சிலிண்டர்கள் ஆண்டுக்கு இலவசம், 1500 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு மாத ஊதியம், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின் என அ.தி.மு.க'வின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகவே வலம் வருகிறது. மேலும் அ.தி.மு.க சொன்னால் செய்யும் என்ற உறுதி கூட மக்களுக்கு இருந்து வருவதே இந்த மாற்றத்திற்கு காரணம்.

மேலும் இரண்டாவது காரணமாக தி.மு.க'வின் தரம்கெட்ட பிரச்சாரம். ஏற்கனவே தி.மு.க என்றால் ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு, மின் வெட்டு கொடுமை, ஊழல், பெண்களை கொடுமை படுத்தி இழிவுபடுத்துவது என்று மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெயர் உண்டு ஆனால் தற்பொழுது தி.மு.க பத்து வருடம் ஆட்சியில் இல்லை ஆகையினால் மாறியிருப்பார்கள் என மக்கள் நினைத்து வந்த நிலையில், நாங்களாவது? மாறுவதாவது? என தி.மு.க'வினரின் செயல்பாடுகள் இருப்பதால் மக்களிடையே வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக செந்தில் பாலாஜி 11 மணிக்கு ஆட்சி ஏற்ற உடன் 11.05'க்கு மணல் திருடலாம் என கூறியது, தி.மு.க தேர்தல் வேலையில் ஈடுபடும் உடன்பிறப்புகள் "அடுத்து எங்க ஆட்சிதான் தெரியும்ல" என வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு காசு குடுக்காமல் திரிவது, உதயநிதி, ஆ.ராசா, ஐ.லியோனி போன்றோர் பிரச்சாரம் என்று கூட நாகரீகம் பார்க்காமல் மூன்றாம் தரமாக பேசுவது போன்ற நிகழ்வுகள் "தி.மு.க'வினரின் ரவுடியிசம் பத்து ஆண்டுகள் இல்லை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் மாறாது" என்பதை மக்களிடையே பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டது.

இந்ந காரணிகளால் தி.மு.க'வின் கோட்டை என கூறப்படும் சென்னை, டெல்டா போன்ற பகுதிகளில் கூட மக்களின் குறிப்பாக பெண்களின் போக்கு தி.மு.க'வின் எதிர் திசையில் பயணிப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.

கோடிகளில் பணத்தை இறைத்து வியூகம் வகுத்தாலும் மக்கள் மனங்களை வெல்லும் சக்தி சிலருக்கே வரும் என்பதை தி.மு.க உணர சில காலமே உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News