Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க பயன்படுத்தி தூக்கியெறிந்த திரையுலக நடிகர்கள் - ஓர் வரலாற்று பார்வை!

தி.மு.க பயன்படுத்தி தூக்கியெறிந்த திரையுலக நடிகர்கள் - ஓர் வரலாற்று பார்வை!

Mohan RajBy : Mohan Raj

  |  4 April 2021 5:15 AM GMT

தமிழக அரசியலையும் தமிழ் திரையுலகத்தையும் பிரித்து வரலாற்றை எழுத முடியாது அந்தளவிற்கு இரண்டும் ஒன்றானவை. தமிழக அரசியல் வரலாற்றில் 5 முதல்வர்களை தமிழ் திரையுலகமே தந்திருக்கிறது. சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன், ஜானகி, ஜெ.ஜெயலலிதா இப்படி தமிழக வரலாற்றில் முதல்வர் இருக்கையில் அமர்ந்த ஐவருமே திரையுலகத்தில் இருந்து வந்தவர்கள்தான்.

ஏன் இன்றும் கூட அடுத்த முதல்வர் இவர்தான் என்று இன்றைய சமுதாயம் கூட தமிழ் திரயுலகத்தை சேர்ந்தவரைதான் எதிர்பார்த்து காத்திருக்கிறது அப்படி தமிழ் மக்களுக்கு திரையுலகத்தில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர், நடிகைகள் மீது அவ்வளவு மோகம். என்னதான் அரசியல் அனுபவம், போராட்ட கள அனுபவம், மக்களின் உரிமைகளை மீட்டுதர குரல்கள், நிறைய தலைவர்களுடன் வேலை பார்த்த அனுபவம், ஏன் மெத்த படித்தவர்கள் கூட அரசியலில் பிரவேசித்தாலும் இவர்கள் அனைவரையும் விட சினிமாவில் நடித்து அதன் மூலம் அரசியல் பிரவேசம் செய்யும் நடிகர்களின் மீது மக்களுக்கு மோகம் சற்று கூடுதலாகவே இருக்கும்.

அவர்களின் அரசியல் கூட்டங்கள், திறப்புவிழா வருகைகள் ஏன் அவர்களுடன் புகைப்படம் எடுப்பதை ஏதோ வாழ்நாள் சாதனையாக பார்க்கும் தமிழக மக்கள் இன்றும் உண்டு. இப்படி தமிழ் சினிமாவில் அரசியல் தலைவனை தேடும் மக்களின் நாடியை சரியாக புரிந்துகொண்டு அதனை தன் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திய ஒரே கட்சி தமிழகத்தில் தி.மு.க மட்டுமே!


இதுவரை திராவிட முன்னேற்ற கழகம் தன் வளர்ச்சிக்காக பயன்படுத்தி பின் தூக்கி எறிந்த நடிகர்களும், தானாக தி.மு.க எண்ணத்தை புரிந்துகொண்டு விலகிய நடிகர்களும் உண்டு. என்னதான் தி.மு.க'வின் மேல் பாசம் கொண்டு அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஒரு சினிமா நடிகர் வந்தாலும் அவரை வைத்து தன் கட்சியை தி.மு.க வளர்த்து வந்ததே தவிர தி.மு.க'வை நம்பி வந்த நடிகரையும் தி.மு.க வளர்த்ததே இல்லை.

முடிந்தவரை கருவேப்பிலை போல் தி.மு.க'வை நம்பி வரும் நடிகரை பயன்படுத்தி பின் அதை அவர் உணரும் தருணத்தில் அவரை தி.மு.க நீக்கிவிடும் அல்லது அவரே உணர்ந்து கொண்டு நீங்கிவிடுவார். இதுவரை தி.மு.க'வை நம்பி சென்ற நடிகர்களின் வரலாற்றை பார்த்தால் இதன் உண்மைதன்மை புரியும்.

இப்படி தி.மு.க'வை நம்பி அதன் போக்கில் கலந்து, அதன் வளர்ச்சிக்கு தன் படங்களிலும், தான் தோன்றும் மேடை மற்றும் அரசியல் பிரச்சாரங்களிலும் தி.மு.க!

தி.மு.க!!

தி.மு.க!!

என்று முழங்கி கடைசியில் அதே தி.மு.க'வின் பகட்டும், கபடதாரி வேஷமும் புரியும் போது தி.மு.க'வால் துரத்தப்பட்டும், அலைக்கழிக்கப்பட்டும், பழிவாங்கப்பட்டும், தன் பட வாய்ப்புகள் பறிபோயும் தன் வாழ்க்கையை தொலைத்து தன் உச்சம் இழந்த நடிகர்கள் உண்டு.

அப்படி தி.மு.க'விற்காக உழைத்து பின்னால் தி.மு.க தூக்கியெறிந்த நடிகர்கள் எஸ்.எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் 'லட்சிய நடிகர்' எஸ்.எஸ்.ராஜேந்திரன், 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், சரத்குமார், தியாகு, பாக்கியராஜ், நெப்போலியன் போன்றோர் ஆவார். தி.மு.க'வில் ஐக்கியமாகி பின் அதன் சுயரூபமும், கபடமான உள் அர்த்தமும் புரிந்துகொண்டு விலகி பிற கட்சிகளில் கலந்தனர் அல்லது தனி கட்சி ஆரமித்து அரசியல் உலகில் வலம் வந்தனர்.

இவர்களை போல் தி.மு.க'வை நம்பி அதனை வளர்த்து, அதன் பிரச்சாரங்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவே கலந்து பின் அதன் சுயரூபம் புரிந்துகொண்டு விலகிய இரு முக்கியமான நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் வடிவேலு ஆகியோர். ஏன் இன்று கட்சி இப்பொழுது துவங்குவாரா அல்லது எப்பொழுது துவங்குவார் என தமிழக மக்களாலும், ரசிகர்களாலும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்க்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூட 1996 தேர்தலில் தி.மு.க'வின் வெற்றிக்கு அஸ்திவாரமாக விளங்கினார்.

இப்படி தி.மு.க'வை நம்பி சென்று பின் அதன் கபடநாடகம் புரிந்த நடிகர்களின் வரலாற்றை சுருக்கமாக பார்க்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கும், அதனை நம்பி செல்லும் இன்றைய நடிகர்களுக்கும் அது கட்டாய தேவை.

1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் - லட்சிய நடிகர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், இந்தியாவிலேயே அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ ஆன முதல் நடிகர் என்ற பெருமையோடு வாழ்ந்தவர். ஒருமுறை கருணாநிதி போக்கு பிடிக்காமல் அவரை பொதுக்குழுவில் கேள்வி கேட்க போக உடனே எஸ்.எஸ்.ராஜேந்திரனை தி.மு.க உடன்பிறப்புகள் உடனே அடிக்க பாய்ந்தனர். பின் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக அரசியலை விட்டு விலகினார்.

2) 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் - மக்களால் நடிப்பு சக்கரவர்த்தி என கொண்டாடப்படும் சிவாஜி கணேசனும் கூட தி.மு.க'வின் மாய பேச்சின் மயக்கத்தில் இணைந்தார்.இதன் காரணமா சாமி கும்பிடுவதை கூட தவிர்த்தார். ஆனால் பக்தி அவரை இருக்க விடவில்லை ஒருமுறை இயக்குனர் பந்தலு அழைப்பின் பெயரில் திருப்பதி ஏழுமலையானை சென்று தரிசித்தார். அவர் திருப்பதி சென்று திரும்பும் முன்னரே "திருப்பதி கணேசா கோவிந்தா" என பகட்டு பகுத்தறிவு பேசி திரிந்த தி.மு.க கூட்டம் சுவற்றில் எல்லாம் எழுதி நடிகர் திலகம் என்றும் பாராமல் அசிங்கப்படுத்தியது. பின் வெறுத்து விலகினார் நடிகர் திலகம்.

3) டி.ராஜேந்தர் - எந்த ஒரு உதவியும் இல்லாமல் திறமையில் வந்த டி.ஆர் ஆரம்பகாலத்தில் கஷ்டபட்டாலும் பின் திரையுலகத்தில் ஜம்பமாக வலம் வந்தார். பெண்கள் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக திரையரங்கத்தினுள் வரவழைத்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலகட்டதிலேயே தி.மு.க'விற்கு ஆதரவாக எம்.ஜி.ஆரை எதிர்த்து பிரச்சாரம் செய்த துணிச்சலான ஆள். ஆனால் தி.மு.க இவரிடமும் விளையாடியது. தி.மு.க'வின் உள் அர்த்தம் புரிந்து விலகினார் இந்த பேச்சுப்புலி.

4) ராதாரவி - பழம்பெரும் நடிகர் மற்றும் திராவிடர் கழகத்தின் கண்மூடித்தனமான வெறியனாக விளங்கிய எம்.ஆர்.ராதா'வின் மகன். தி.மு.க'வில் பற்றுடன் இருந்தார் இருப்பினும் தி.மு.க வழக்கம்போல் இவரிடமும் தனது அதிகார முகத்தை காண்பித்தது விளைவு உதயநிதியை 'ஆட்டுப்புழுக்கை' என விமர்சிக்கும் அளவிற்கு வெறுத்து விலகினார்.

5) எஸ்.எஸ்.சந்திரன் - தி.மு.க கூட்டம் என்றால் இவர் இல்லாமல் இல்லை அந்தளவிற்கு இவர் தி.மு.க'வின் பிரச்சார பீரங்கி. தம்பி! தம்பி!! என்பார் கருணாநிதி அதில் மயங்கி தி.மு.க'வில் வலம் வந்தார் பின் சுயரூபம் புரிந்து விலகி அ.தி.மு.க'வில் இணைந்து எம்.பியாக டெல்லி வரை சென்றார்.

7) சரத்குமார் - "நான் இறந்தால் என் மீது தி.மு.க கொடி போர்த்தி செல்ல வேண்டும்" என கூறினார் சரத்குமார் ஒருமுறை அந்தளவிற்கு தி.மு.க பற்றாளர். ஆனால் பின்னர் அதன் சுயரூபம் தெரியவர வேண்டாம் இந்த தி.மு.க சகவாசம் என மரியாதையாக வெளியேறினார்.

8) தியாகு - ஆரம்பகாலம் முதல் இவர் தி.மு.க'தான் பின்னர் தன்னை தி.மு.க வெறும் மேடைகளுக்குதான் உபயோகபடுத்துகிறது என உணர்ந்து அ.தி.மு.க'வில் இணைந்தார்.

9) பாக்கியராஜ் - எம்.ஜி.ஆரால் கலை உலக வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர், அந்தளவிற்கு எம்.ஜி.ஆர் வெறியர். காலங்கள் கடந்த பின் 2006'ல் தி.மு.க'விற்காக பிரச்சாரம் செய்தார் விளைவு தி.மு.க ஜெயித்தது இவரை புறக்கணித்தது. தி.மு.க'வின் முகம் தெரிந்து வெளியேறினார்.

10) நெப்போலியன் - முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர். தி.மு.க மேடைகளில் பிரச்சார பீரங்கி. அறிவாலயத்தில் இவரை பார்க்காத நாட்கள் இருக்கமுடியாது அந்தளவிற்கு தி.மு.க விசுவாசி விளைவு! தி.மு.க தன் கோரமுகம் காண்பிக்க இது நமக்கானது அல்ல என ஒதுங்கி கொண்டார்.


இவர்கள் கட்சியில் இணைந்து உழைத்தனர் ஆனால் கட்சியில் இணையாமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார் கேப்டன் விஜயகாந்த். கருணாநிதி'க்கு விழா எடுத்து 'தங்க பேனா' வழங்கினார். தன் பட வெற்றிவிழாவை தி.மு.க விழாவாக மாற்றினார். வானத்தைபோல பட விழாவிற்கு கருணாநிதி'யும், 'வல்லரசு' பட விழாவிற்கு ஸ்டாலினும் சிறப்பு விருந்தினர்கள் அவர்களை சுற்றிதான் விழாவே நடந்தது அந்தளவிற்கு கேப்டன் கருணாநிதி அபிமானி. ஆனால் அவரையே ஆட்டி பார்த்தது தி.மு.க! வெறுத்தார் விளைவாக தேசிய 'திராவிடர் முற்போக்கு கழகம்' உருவானது இன்று தி.மு.க'வே கூட்டணிக்காக விஜயகாந்தின் வீட்டை சுற்றி வருகிறது.

இதுபோல் 'வைகை புயல்' வடிவேலு, இவரை போல் தமிழ் சினிமா வேறு ஒரு நகைச்சுவை கலைஞனை பார்த்ததில்லை அப்படி ஒரு கலைஞன். ஆனால் தி.மு.க'விற்காக கடந்த 2011 தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்தார் பின் வழக்கம்போல் தி.மு.க தன் வேலையை காண்பிக்க ஏன் பிரச்சாரம் செய்தோம் என இன்றுவரை மனதிற்குள் புழுங்கும் ஓர் மகத்தான கலைஞன் இந்த 'வைகை புயல்'.

இதுபோக இன்றைய தலைமுறையின் 'தல' மற்றும் 'தளபதி' ஆகிய இருவரும் கூட தி.மு.க'வின் அரசியலில் தப்பவில்லை!

அஜித்'தை மிரட்டி விழாவிற்கு வரவழைத்ததை அவரே கருணாநிதி முன் மேடையில் கூறினார் அது உலகறியும், 'காவலன்' பட சமயத்தில் என்ன பிரச்சனை என தெரியாத அளவு விஜய் நெருக்கடியில் தள்ளப்பட்டார். இப்படி அரசியலில் மாட்டி அதுவும் தி.மு.க அரசியலில் தல-தளபதி கூட தப்பவில்லை.

இப்படி திமுக சினிமா நடிகர், நடிகைகளை பயன்படுத்தி தங்கள் கட்சியை விளம்பரபடுத்த தி.மு.க உபயோகித்துகொண்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News