Kathir News
Begin typing your search above and press return to search.

'அதான் ஜெயிச்சாச்சுல்ல அப்புறம் என்ன குடும்பத்தலைவிக்கு மாசம் 1000 ரூபாய்?' - திமுக அரசின் 'பிம்பிளிக்கு பிளாப்பி'

அதான் ஜெயிச்சாச்சுல்ல அப்புறம் என்ன குடும்பத்தலைவிக்கு மாசம் 1000 ரூபாய்? - திமுக அரசின் பிம்பிளிக்கு பிளாப்பி
X

Mohan RajBy : Mohan Raj

  |  4 March 2023 8:50 AM GMT

ஜெயிச்சாச்சு இல்ல அப்புறம் என்ன மாசம் ஆயிரம் ரூபாய் என குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் விவகாரத்தில் திமுக அரசு பல்டி இருப்பதாக தெரிகிறது.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டணி பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது! குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், பட்டியில் அடைத்து வைத்து எதிர்க்கட்சிகளை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்தது என்பது போன்ற தேர்தல் விதிமுறைகளை மீறி தான் திமுக என்ற வெற்றியை பெற்றது என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவின் 20 மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு என இடைத்தேர்தல் வெற்றியை குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அரசியல் வல்லுனர்கள் இது குறித்து குறிப்பிடும் பொழுது, 'திமுக தேர்தல் முறைகேடு செய்து இந்த வெற்றியை பெற்றது ஆனாலும் இறுதியில் திமுகவிற்கு ஏற்பட்ட தோல்வி பயத்தின் காரணமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்தது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது அப்டின்னு சொல்றாங்க. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாக்குறுதி குறித்து எதையாவது அறிவிப்பை வெளியிடுவோம் என தேர்தல் நடப்பதற்கு நான்கு நாளைக்கு முன்னர் அமைச்சர் உதயநிதி அங்கு சென்று, 'நீங்கள் எதிர்பார்ப்பது எங்களுக்கு புரிகிறது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீங்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் நீங்கள் எதிர்பார்ப்பது போல் மாதம் ஆயிரம் ரூபாய் பற்றி அறிவிப்பை தலைவர் விரைவில் வெளியிடுவார்' எனக் கூறினார்.

அமைச்சர் உதயநிதி இதனை கூறிய இரண்டு தினங்களில் முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய சென்றார். அப்பொழுது மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் அவர், 'மாத ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே முடிவு எடுக்கப்படும் அதற்காக நீங்கள் திமுக கூட்டணி வாக்குறுதியை நிறைவேற்றாது என நினைத்து விட வேண்டாம் என்கிற ரீதியில் எப்படியாவது ஓட்டு போடுங்கம்மா' என கூறிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது, நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். தற்பொழுது திமுக தேர்தல் முன்பு வரை அறிவித்தது என்னவென்றால் ஜூன் மூன்றாம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் அன்று மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக திட்டமிட்டிருந்ததாக பேச்சு அடிபட்டு வந்தது.

ஆனால் இந்த திட்டத்தை அப்படியே அறிவித்தது போல் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க இயலாது இதில் சில விதிமுறைகளை வைக்க வேண்டும் என நிபந்தனைகள் என்ற பெயரில் திமுக அரசு அங்கேதான் வைக்கப் போகிறது மக்களுக்கு சுழி! எப்படி என்றால் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை அரசு ஊழியர்களுக்கு கிடையாது! மாதம் 10 ஆயிரத்திக்கும் மேல் வருமானம் இருக்கும் குடும்பத்திற்கு கிடையாது! கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைத்தால் கிடையாது! சொந்த வீடு இருந்தால் கிடையாது! சொத்து இருந்தால் கிடையாது! விளைநிலம் இருந்தால் கிடையாது! என திமுக அரசு 10க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை போடும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் இரண்டு கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன, இந்த இரண்டு கோடி ரேஷன் அட்டைகளுக்கும் கிடைக்குமா என்றால் கிடைக்காது அதில் 25 லட்சம் பேருக்கு கிடைத்தாலே பெரிய விஷயமாக இருக்கும்! ஏற்கனவே திமுக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் முதியோர்களுக்கு கொடுத்து வந்த தொகையை வழங்காமல் நிபந்தனைகளை போட்டு அதனை நிறுத்திவிட்டது, இந்த நிலையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை பற்றி ஈரோடு கிழக்குத் தேர்தல் வந்தவுடன் தான் திமுக அரசு யோசித்தது, தற்பொழுது ஈரோடு கிழக்குத் தேர்தலில் வெற்றியை பெற்றவுடன் திமுக அரசு இதனை அமல்படுத்துவதில் சற்று சுணக்கம் காட்டும் என்று தெரிகிறது! மேலும் அடுத்த தேர்தலில் ஏதாவது வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப் போடவும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News