Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவி தற்கொலை விவகாரத்தில் "டைம்ஸ் ஆப் இந்தியா" கையாண்ட போலி நடுநிலை ஊடக தர்மம்!

மாணவி தற்கொலை விவகாரத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா கையாண்ட போலி நடுநிலை ஊடக தர்மம்!

DhivakarBy : Dhivakar

  |  21 Jan 2022 6:45 AM GMT

திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் புனித இருதய மேல்நிலைப்பள்ளி என்ற கிறிஸ்தவ பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியை, பள்ளி நிர்வாகம் மதம் மாற வற்புறுத்தியதால் அம்மாணவி தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம், தமிழகத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.


தமிழக கல்வி நிலையங்களில் சட்டவிரோத மதமாற்றம் ஏகபோகமாக மாணவர்கள் மத்தியில் நடைபெறுவதாக இந்து அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில், லாவண்யா மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி, அக் குற்றச்சாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.


கிறிஸ்துவ பள்ளிகள் இந்து மாணவர்களை மதமாற்றம் செய்வது என்பது அவர்களின் மறைமுக நோக்கம் என்றாலும், இந்தியாவில் இயங்கி வரும் பல முக்கிய ஊடகங்கள் சட்டவிரோத மதமாற்ற செயல்களை அம்பலப்படுத்தாமல் போலியாக "நடுநிலை ஊடகம்" என்ற பிம்பத்தை எழுப்பி வந்துள்ளது. ஆனால் கடந்த சில காகாலமாக அப் பிம்பங்களை உடைத்தெறியும் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது என்பதை நாம் அறிவோம்.


அதே போன்று பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஆங்கில நாளேடான டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு கையாண்ட போலி ஊடக தர்மம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா, இச்சம்பவத்தை ஒரு சாதாரண சம்பவம் போல் அழகாக பூசி மொழுகி உள்ளது. அதாவது அந்த நாளேட்டில் வெளியான செய்தியில், தூய இருதய மேல்நிலைப்பள்ளி என்ற அப்பள்ளியின் பெயரை கூறாமல் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அச்செய்தியின் தலைப்பில் ஏதோ அம்மாணவி "தன் அறையை சுத்தம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டார்" என்பது போல் அச்செய்தியை சித்தரித்துள்ளது.




வீடியோ ஒன்றில் அம்மாணவி கூறும் இறுதி வார்த்தைகள் பதிவாகி, சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அம்மமாணவி கூறும் வார்த்தைகள் "என் பெயர் .......... பள்ளி நிர்வாகம் என் பெற்றோர்களிடம் உங்கள் மகளை மதம் மாற சொல்லுங்கள், அப்படி ஆனால் அவளது பள்ளிப்படிப்பு மென்மையாக்க நாங்கள் உதவுவோம் என்று கூறினர். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இதனால் என்னை கடுமையாக திட்டினர்.

இந்த வார்த்தைகள் ஓட்டுமொத்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை விவரிக்கும் வகையில் இருந்துள்ளது.

இதனால் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியின் உள்நோக்கம் அறிந்தாகிவிட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News