"பாத்தீங்களா சார் 'ஜெய்பீம்' ஆஸ்கர் சேனல் வரைக்கும் போய்ருக்கு" - ஜெய்பீம் ஆஸ்கர் உருட்டுக்கள்
By : Mohan Raj
ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விழுதுகள் தொடர்பான யூ ட்யூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது என்ற விளம்பரத்தின் பிண்ணனியில் உள்ள பொய்கள் தற்பொழுது வெளிவந்துள்ளன.
'ஜெய்பீம் திரைப்படம் வெளிவந்ததில் இருந்து சர்ச்சைகளுக்கு குறைவில்லை, பாதி அளவிலான சர்ச்சைகள் உள்ளார்ந்த காரணத்தினாலும், பாதி சர்ச்சைகள் நடிகர் சூர்யாவிற்கு மார்கெட் காலி என்பதால் அதனை மறைத்து விளம்பரப்படுத்தி படத்தை வெற்றி என காட்டுவதன் உள்நோக்கமும் கொண்டதாக இருந்தன. முதலில் உண்மைக்கு புறம்பாக படத்தின் காட்சிகளை அமைத்து அதனை வைத்து விளம்பரம் தேடிப்பார்த்தனர். அதாவது அந்தோணிசாமி கதாபாத்திரத்தை மாற்றி குருவாக சித்தரித்து வட தமிழகத்தில் வாழும் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்த முயற்சித்தனர். இதில் தோல்வியடையவே படக்குழுவினர் பலிகடாவாக இயக்குனரை முன் அனுப்பி மன்னிப்பு கோர வைத்தனர். பின்பு அதனை தொடர்ந்து IMDB தரவரிசையில் திரைப்படத்தை முன்னுக்கு கொண்டு வர போலி ரசிகர்மன்ற கணக்குகளில் இருந்து ஸ்டார் ரேட்டிங் கொடுத்தது போன்ற சிலபல பித்தலாட்ட வேளைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் பின்னர் படக்குழு அமைதியானது.
அந்த வகையில் தற்பொழுது ஆஸ்கர் விருது விளையாட்டை படக்குழு துவங்கியுள்ளது. அதாவது ஆஸ்கர் விருதுகள் சர்வேத அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் வேளையில் அந்த விருதின் பெயரை கொண்ட யூ ட்யூப் சேனலில் 'ஜெய்பீம்' படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என விளம்பரப்படுத்தி, "ஆஹா பார்த்தீர்களா நம்ம 'ஜெய்பீம்' படம் ஆஸ்கர் வரைக்கும் போய்ருக்கு" என பிதாமகன் சூர்யா ஸ்டைலில் விளம்பரப்படுத்த முயற்சித்துள்ளனர் 'ஜெய்பீம்' படக்குழுவினர்.
அதாவது ஆஸ்கர் யூ ட்யூப் பக்கத்தில் 'ஜெய்பீம்' திரைப்படத்தின் காட்சிகள் தானாக இடம்பெறவில்லை மாறாக 5000 டாலர்களை கட்டணமாக செலுத்தி படத்தின் காட்சிகளை அந்த யூ ட்யூப் சேனலில் பதிவேற்றியுள்ளனர் படக்குழுவினர். அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த யூ ட்யூப் சேனலுக்கு கட்டணம் செலுத்திய பிறகு தங்கள் படத்தை காட்சியிட வைத்துள்ளனர் 'ஜெய்பீம்' படக்குழுவினர்.
ஆனால் இங்கோ விளம்பரங்களில் 'ஜெய்பீம்' திரைப்படத்தை ஆஸ்கர் குழுவினரே தேர்வு செய்து தங்கள் தளத்தில் இடம்பெற செய்தது போல பிம்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
உண்மையில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் படங்களின் தரத்திற்கு என சில வழிமுறைகள் உள்ளன. ஆனால் இது போன்ற பணம் கட்டி காட்சிப்படுத்த எந்த நிபந்தனையும் இல்லை என்பதே உண்மை.