'பா.ஜ.க'வா இது? பிரம்மிக்க வைத்த அண்ணாமலையின் போராட்டம்!
By : Mohan Raj
மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சிறுமிக்கு ஆதரவாக மற்ற கட்சிகள் வாய்மூடி நிற்கும் நிலையில் ஒத்தை ஆளாக களமிறங்கி சம்பவம் செய்து வருகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
தமிழக அரசியல் வரலாற்றில் பத்து வருடங்களுக்கு முன் பார்த்தால் பா.ஜ.க'வினர் பேசும் அரசியல் எட்டாம் பக்கத்தில் பெட்டி செய்தியாக வரும். அதிலும் பா.ஜ.க'வினர் பேசும் கருத்துக்கள் மக்கள் நலனுக்காக இருந்தாலும் அதனை மக்கள் பார்வையில் படாமல் சில கட்சிகள் தங்கள் லாபத்திற்காக பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு சிறுமி மத மாற்ற கொடுமையால் தற்கொலை செய்துகொண்டு இறந்ததற்கு கிட்டதட்ட ஒரு வாரமாக தமிழகத்தில் இதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் ஒரே கட்சியாக தமிழக பா.ஜ.க திகழ்கிறது. இதனை அண்ணாமலை ஒற்றை ஆளாக முன் நின்று நடத்திவருகிறார்.
அரசியல் லாபத்திற்காக இல்லை ஆனாலும் வரு சிறுமி மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்று உயிரை மாய்த்திருக்கிறாள். ஆனால் தமிழகமே நாங்கள்தான் என மார்தட்டிக்கொள்ளும் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை ஆனால் இதனை ஒற்றை ஆளாக நின்று அண்ணாமலை போராட்டமாக நடத்தி வருவது பல 'so called' நடுநிலைவாதிகளின் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியுள்ளது.
அண்ணாமலை நினைத்திருந்தால் உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனுக்களை வாங்குவதில் தன் கவனத்தை செலுத்தியிருக்கலாம், பூத் வாரியாக ஆட்களை நியமனம் செய்து வாக்குகளை பெறுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம், இல்லை இறந்த சிறுமிக்காக ஒரே நாளில் அடையாள போராட்டம் நடத்திவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றிருக்கலாம், ஆனால் 17 வயது சிறுமியின் தற்கொலைக்கு நீதி வேண்டும், அந்த பிஞ்சு மனது தவித்த தவிப்பிற்கு நியாயம் வேண்டும், தங்கள் வீட்டு செல்வத்தை பறிகொடுத்த பெற்றோர்களுக்கு உரிய நியாயம் வேண்டும் என இன்றளவும் களத்தில் நிற்பதால் தான் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் தினமும் அண்ணாமலையை நோக்கி திரும்புகின்றனர்.
இதுபோன்ற போராட்ட குணமே 'இவர் சொல்றதுலையும் நியாயம் இருக்குப்பா' என ஒவ்வோர் மகளிரையும், இளைஞர்களையும் அண்ணாமலையின் பக்கம் ஈர்க்கிறது.