Kathir News
Begin typing your search above and press return to search.

"இந்திய தேசிய கொடிக்கு உக்ரைனில் மரியாதை" - நாடு திரும்பிய திமுக கவுன்சிலர் மகன் சையத் பெருமிதம்! மூக்குடைப்படும் பொய் பிரச்சாரம்!

இந்திய தேசிய கொடிக்கு உக்ரைனில் மரியாதை - நாடு திரும்பிய திமுக கவுன்சிலர் மகன் சையத் பெருமிதம்! மூக்குடைப்படும்  பொய் பிரச்சாரம்!

DhivakarBy : Dhivakar

  |  14 March 2022 5:11 AM GMT

"போர் நிலவும் உக்ரைனில் இருந்து பத்திரமாக நாடு திரும்பியதற்கு இந்திய நாட்டின் கொடியும், இந்தியன் என்ற அடையாளமும் தான் காரணம்" என்று நாடு திரும்பிய தமிழக மாணவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


ரஷ்யா உக்ரைன் இடையே பயங்கர போர் நிலவி வருகிறது. இதனால் உக்ரைனில் அமைதி சீர்குலைந்து, அந்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தையும் நிம்மதியும் இழந்து தவித்து வருகின்றனர். அந்நாட்டு மக்கள் மட்டும் இல்லாமல், உக்ரைனில் கல்வி பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் இந்த போரில் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து தவித்து வருகின்றனர்.

சீனா தற்போது தான் தன் நாட்டு மாணவர்களை உக்ரைனிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் இந்தியாவை ஆட்சி புரியும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, உக்ரைனில் போர் பதற்றம் தொடங்கியது முதலே நம்நாட்டு மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது.

அந்த நடவடிக்கைக்கு இந்தியாவின் புனித நதியான கங்கை நதியின் பெயர் சூட்டி ஆபரேஷன் கங்கா என்ற ஒரு மகத்தான நடவடிக்கையை தொடங்கி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக தன் தாய்நாடு மாணவர்களை இந்திய நாட்டிற்கு மீட்டு அழைத்து வரத் தொடங்கியது.

இதன் விளைவாக இந்திய நாட்டிற்கு தற்போது பெரும்பாலான மாணவர்கள் பத்திரமாக நாடுதிரும்பியுள்ளனர்.


மாணவர்களை மீட்கும் நடவடிக்கை மூலம், தமிழக மக்களிடம் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க அரசு நற்பெயரை பெற்று விடுமோ? என்ற அச்சத்தில் தமிழகத்தில் தி.மு.க அரசு அதை மறைக்கும் விதமாக பல பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களை ஏதோ தி.மு.க அரசின் முழு முயற்சியால் மீட்டு விட்டது போல, பொய் காட்சிகளை தங்களின் செய்தி ஊடகங்கள் மூலம் தமிழக மக்களிடம் காட்டிவருகிறது.


ஆனால் இதற்கு தக்க பதிலடியாக நாடு திரும்பிய அனைத்து மாணவர்களும், "எங்களை பத்திரமாக மீட்ட மத்திய அரசுக்கு நன்றி" என்று கன்னத்தில் பளாரென்று அடித்தார் போல் இங்குள்ள செய்தி ஊடகங்களும் தி.மு.க'வினருக்கும் உண்மையை உரக்க கூறி வருகின்றனர்.

இதன் வரிசையில்,


திருப்பத்தூர் மாவட்டத்தில், பர்ஹூம் பானு. என்ற தி.மு.க. கவுன்சிலரின் மகன் முகமதுசையத் அஸ்ராரி, உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளார். இவர் உக்ரைனில் யுவோனோ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.


உக்ரேனில் என்ன நடக்கிறது? மற்றும் இந்திய மாணவர்கள் உக்ரைனில் எவ்வாறு நடத்தப்படுகின்றனர். போன்றவற்றை, அம் மாணவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


போரின் காரணமாக யுவோனோ பிராங்களின் விமான நிலையம் குண்டு போட்டு தகர்க்கப்பட்டது. இந்தியா வரமுடியாத காரணத்தால் பலபேர் எல்லையை நோக்கி நடந்து செல்வதாக கூறியபோது ராணுவத்தினர் தடுத்தனர். இதனால் மீண்டும் இந்தியா செல்ல முடியாமல் யுவோனோ திரும்பிவந்து பல்கலைகழகத்தில் தங்கினோம்.


கேரள மாணவி ஒருவர் மூலம் போலந்து நாட்டின் எல்லைக்கு சென்று அங்கு 3 நாட்கள் தங்கினோம். பிறகு இந்திய தூதரகம் மூலம் டெல்லி வந்தடைந்தோம்.


இந்திய தேசியக் கொடிக்கு அங்கு மிகவும் மரியாதை உள்ளது. நாங்கள் நம் தேசியக் கொடியுடன் வந்ததால் அனைவரும் எங்களுக்கு பாதுகாப்பாக அளித்தனர். தமிழ்நாடுக்கு வந்தது எங்களுக்கு கனவு நிறைவேறியது போல் உள்ளது.


நாடு திரும்பிய மாணவர்களின் கருத்துக்களை கேட்கும் தமிழக மக்கள், பொய்களை களைத்து உண்மைகளை அறிந்து வருகின்றனர்.

Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News