Kathir News
Begin typing your search above and press return to search.

"வாழ்வாதாரம் பொருளாதாரம் இரண்டுமே போச்சு" - ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள்!

வாழ்வாதாரம்  பொருளாதாரம் இரண்டுமே போச்சு - ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள்!

DhivakarBy : Dhivakar

  |  20 April 2022 10:29 AM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நான்கு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையால் பயன்பெற்று வந்த ஏராளமான மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலை, அப்பகுதி சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம வாசிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி வந்தது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் உள்நாட்டு காப்பர் உற்பத்தியில் ஸ்டெர்லைட் ஆலையின் பங்கு இன்றியமையாததாக இருந்தது.

ஆனால் 2018ஆம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் போராளிகள் என்று சொல்லிக்கொண்டு, பல சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டனர்.


இறுதியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இழுத்து மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை நான்கு ஆண்டுகளாக இயங்காததால் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

முக்கியமாக ஆலையால் வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்வாதாரத்தை நடத்திவந்த தூத்துக்குடி மாவட்ட கிராமவாசிகள் பலர், தற்போது வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.


அதற்குச் சான்றாக, கடந்த 18ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மடத்தூர், அய்யனடைப்பு, சோரீஸ்புரம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் : ஸ்டெர்லைட் ஆலை இயங்கியபோது நாங்கள் பல்வேறு வகையில் வேலை வாய்ப்பு பெற்று வந்தோம். ஆலை மூடப்பட்டதால் தற்போது எங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் வெளியூர் சென்று வேலை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் வேலை பெற்று வந்த நாங்கள், தற்போது வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். எனவே ஆலையை திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. (மாலைமலர்)


ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டதால், அப்பகுதி கிராமவாசிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகிவிட்டது.


இது ஒருபுறமிருக்க, ஸ்டெர்லைட் ஆலையின் மூடல், நம் நாட்டின் காப்பர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பாதகங்களை ஏற்படுத்தி, நம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கிவருகிறது .


ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இயங்கிய போது, இந்தியாவின் காப்பர் ஏற்றுமதி அதிகரித்தும், காப்பர் இறக்குமதி குறைந்தும் காணப்படும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.


2017-18ல் 44,245 டன்னாக இருந்த காப்பர் இறக்குமதி, 2018-19ல் 92,990 டன்னாகவும், 2019-20ல் 152,000 டன்னாகவும் அதிகரித்துள்ளது. 2017-18ல் 378,000 டன்னாக இருந்த காப்பர் ஏற்றுமதி 2018-19ல் 47,917 டன்னாகவும், 2019-20ல் 36,959 டன்னாகவும் குறைந்துள்ளது.இன்னொரு விளைவாக, நாட்டின் காப்பர் உற்பத்தி 2017-18ல் 830,000 டன்னிலிருந்து 2019-20இல் 410,000 டன்னாகக் குறைந்தது. இந்த சூழ்நிலை தற்போதும் தொடர வாய்ய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கருதி வருகின்றனர்.


2034'ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் காப்பர் உற்பத்தி 20 மில்லியன் டன்னிலிருந்து 12 மில்லியன் டன்னாகக் குறையும் என்று ஒரு அமைப்பு கணித்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட காப்பர் சுரங்கங்களில் 2035'ஆம் ஆண்டுக்குள் காப்பர் தீர்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. "ஸ்டெர்லைட் ஆலையின் மூடல்" தொடருமானால், வரும் காலங்களில் இந்தியாவின் காப்பர் தேவையை பூர்த்தி செய்வது மிகக் கடினமாகும் Money Control


சூழ்நிலைகளை உணர்ந்து, ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை தமிழக அரசு மீண்டும் திறக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News