Kathir News
Begin typing your search above and press return to search.

"தி கேரளா ஸ்டோரி" - உண்மையும், காங்கிரஸ் இடதுசாரிகளின் கபட நாடகமும் !

தி கேரளா ஸ்டோரி - உண்மையும், காங்கிரஸ் இடதுசாரிகளின் கபட நாடகமும் !

G PradeepBy : G Pradeep

  |  7 May 2023 8:00 AM GMT

"தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் இப்போது நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் திரையிடப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை மக்கள் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து காங்கிரஸ், இடதுசாரிகள், இஸ்லாமிய அமைப்புகள் இனைந்து இதற்கு எதிராக குரல் குடுத்து வருகின்றனர். இதை ஒரு Propaganda படமாக சித்தரிக்க முயற்சித்தனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் எதுவும் மாநிலத்தில் பதிவாகவில்லை என்று கூறி வருகின்றனர்.

சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைக்க / பெறுவதற்காக இடதுசாரிகளும் காங்கிரஸும் சமயத்திற்கு தகுந்தவாறு தங்கள் நிலைப்பாட்டை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கேரளா ஸ்டோரி விசயத்திலும் இதை செய்துள்ளனர். காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இந்த படத்தில் வருவது உண்மையல்ல எனவும், இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்றும் குரல் கொடுக்கின்றனர். ஆனால், இந்த கட்சிகளின் முதல்வர்கள் பல சந்தர்ப்பங்களில் PFI மற்றும் ISIS போன்று அமைப்புகள் எப்படி மதம் மாற்றம் செய்தன என்பதை பதிவுசெய்துள்ளார்.

உதாரணம் 1 : ஜூலை 24, 2010 அன்று செய்தியாளர் சந்திப்பில், அப்போதைய கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI), தடை செய்யப்பட்ட அமைப்பான நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்டின் (பிஎஃப்ஐக்கு முன்னோடி) என்ற அமைப்பை போன்று கேரளாவை முஸ்லீம் மாநிலமாக்க மாற்ற முயற்சிக்கிறது. 20 ஆண்டுகளுக்குள் கேரளாவை முஸ்லீம் மாநிலமாக்குவதுதான் அவர்களின் திட்டம்" என்று கூறினார்


உதாரணம் 2 : கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு 2011ல் ஆட்சியைப் பிடித்தது. அடுத்த ஆண்டில், ஜூன் 25, 2012 அன்று, காங்கிரஸ் அரசு ஒரு அறிக்கையை கேரள சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், 2006-12 காலகட்டத்தில் மொத்தம் 7713 நபர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சட்டசபையில் அரசு தெரிவித்தது. இதில் 2667 பேர் இளம் பெண்கள், 2195 பேர் இந்துக்கள், மீதமுள்ளவர்கள் கிறிஸ்தவர்கள்.


உதாரணம் 3 : இப்போதைய முதல்வர் பினராய் விஜயன். தி கேரளா ஸ்டோரி படத்திற்கு முன்னும் பின்னும் முரண்பட்ட கருத்துகளால் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளார். 2022 செப்டம்பர் 22 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், "100 மலையாளிகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.


'தி கேரளா ஸ்டோரி' விஷயத்தில், இடதுசாரிகளும், காங்கிரஸ் காரர்களுள் எந்த நாடகத்தை அரங்கேற்றினாலும் உண்மையை மறைக்க முடியாது. படத்திற்கு பெரும் வரவேற்பு இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன. மக்களிடம், முதல் நாளில் சுமார் ₹8 கோடி வசூலித்து வெற்றிகரமாக ஓடியது, ஆனால் கேரளாவில் இஸ்லாமிய மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகளின் அச்சுறுத்தல் காரணமாக சில திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News