தமிழகத்தில் இருந்து தூரத்தப்பட்ட ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு குஜராத் சென்றது - பின்னணியில் நடந்தது என்ன?
By : Kathir Webdesk
செமிகண்டக்டர் மற்றும் தொடுதிரை உற்பத்திக்கு வேதாந்தா – ஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசு கையெழுத்திட்டது.
இந்த முதலீடு பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, துணைத் தொழில்கள் உருவாக உதவி செய்வதோடு எம்எஸ்எம்இ-க்களுக்கும் உதவும் என்றார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் செமிகண்டக்டர்கள் உற்பத்தி நோக்கத்தை விரைவுபடுத்துவதில் முக்கியமான ஒன்றாகும். ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு என்பது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும். துணைத் தொழில்கள் உருவாக உதவி செய்வதோடு எம்எஸ்எம்இ-க்களுக்கும் உதவும் என குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்தர் படேல் கூறினார்.
மும்பையை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா நிறுவனம் அலுமினியம், தாமிரம், இரும்பு தாது, கண்ணாடி இழை மற்றும் செமிகண்டக்டர்கள் உற்பத்தியில் ஈடுபடுகிறது. உலகளவில் இந்நிறுவனத்திற்கு ஆலைகள் உள்ளன. தூத்துக்குடியில் இருந்த இதன் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரும் போராட்டம் மற்றும் கலவரத்தால் 2018ல் மூடப்பட்டது.
தற்போது குஜராத் மாநிலத்தில் அமைய உள்ள ஆலையால் மின்னணு பொறியியல் முடித்தவர்கள் உட்பட 2 லட்சம் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
Input From: Dinamalar