Kathir News
Begin typing your search above and press return to search.

கவுண்டவுன் ஸ்டார்ட்.. 168 நாட்கள்.. தமிழக அரசியலை புரட்டிப்போட போகும் அண்ணாமலை..

கவுண்டவுன் ஸ்டார்ட்.. 168 நாட்கள்.. தமிழக அரசியலை புரட்டிப்போட போகும் அண்ணாமலை..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 July 2023 10:21 AM IST

‘என் மண், என் மக்கள்' என்ற பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பாத யாத்திரை 168 நாட்கள் நடைபெற இருக்கிறது. குறிப்பாக இந்த ஒரு பாத யாத்திரை ராமநாதபுரத்தில் தொடங்கி சென்னையில் நிறைவடைய இருக்கிறது. வருகின்ற ஜூலை 28ஆம் தேதி இந்த பாத யாத்திரையானது தொடங்க இருக்கிறது. ஜூலை 28ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த பாதயாத்திரை ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.தொடர்ந்து 6 மாதங்கள் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ள அண்ணாமலை, சென்னையில் ஜன. 11-ம் தேதி பாதயாத்திரையை முடிவு செய்கிறார்.


சுமார் 168 நாட்கள் என் மண், என் மக்கள் என்ற தலைப்பின் கீழ் மக்களை சந்திக்கும் மிகப்பெரிய பாத யாத்திரையாக இது அமைய இருக்கிறது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாத ஜூலை 28ஆம் தேதி அண்ணாமலை அவர்கள் தொடங்க இருக்கும் இந்த ஒரு பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.


ஆரம்பத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் 200 நாட்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களுடைய குறைகளை கேட்கும் ஒரு பாத யாத்திரையாக இது அமைந்திருக்கும் என்று முன்பு பாஜக தலைப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை தற்போது பாஜக மாற்றியமைத்து 168 நாட்கள் அது மட்டுமல்லாது அனைத்து பகுதிகளையும் சென்றடையும் வண்ணம் பாத யாத்திரை செய்யும் வண்ணம் இந்த ஒரு நிகழ்வு அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரத்தில் ஜூலை 28 மற்றும் 29ம் தேதிகளில் இரண்டு நாட்கள் பாது யாத்தரை தொடங்கி, அடுத்தடுத்த நாட்கள் அடுத்தடுத்த இடங்களில் பாதயாத்திரை சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக 168 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை 225 இடங்களை உள்ளடக்கியதாகவும் சட்டமன்ற தொகுதி பகுதிகளை உள்ளடக்கியதாகவும் அண்ணாமலை பாதயாத்திரை பயணத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட ஜூலையில் தொடங்கும் இந்த பாத யாத்திரையானது நிறைவு பகுதியாக சென்னையில் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 5ஆம் தேதி ஆவடி பகுதிகளில் சென்னையை பாதயாத்திரை குழு வந்தடைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


ஆகஸ்ட் 7-ம் தேதி மதுரையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகிறார். 50-வது நாள் நடைபயணம் பரமத்தி வேலூரிலும், 100-வது நாள் நடைபயணம் வந்தவாசி மற்றும் உத்திரமேரூரிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாதயாத்திரைக்கு பாதுகாப்பு கோரி, டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் பால் கனகராஜ், சக்கரவத்தி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர். இதனைத்தொடந்து பால்கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.


அவர் கூறுகையில், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் வரும் 28 ஆம் தேதி பாதயாத்திரை தொடங்குகிறார். “எம் மண் எம் மக்கள்” என்ற பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார். பாதயாத்திரை 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி சென்னையில் பாதயாத்திரை நிறைவடைகிறது. தொடக்க நாளின் போது சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பாதயாத்திரையில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். ஊழலுக்கு எதிராகவும், நாடாளுமன்ற தேர்தலை முன்னோட்டமாக பாதயாத்திரை அமையும் என பால்கனகராஜ் குறிப்பிட்டார்.

தமிழக அரசியல் வரலாற்றில் இந்த பாதயாத்திரை முக்கியமானது என்றும், இந்த பாதயாத்திரை கண்டிப்பாக தமிழக அரசியலை புரட்டிப்போடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News