அதானி,மோடி அரசை இணைக்கும் இடதுசாரிகளின் முயற்சி முறியடிப்பு.. 17 நாள் போராட்டம்.. மீட்கப்பட்ட சுரங்க தொழிலாளர்கள்.. முழு விவரம்..
By : Bharathi Latha
உத்தரகாண்ட் சுரங்க பாதையில் தீபாவளி தினத்தன்று காலையில் 41 தொழிலாளர்கள் இடிபாடுகள் காரணமாக சுரங்கத்தில் சிக்கிக் கொண்டார்கள். அவர்களை மீட்கும் பணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கடந்த 17 நாட்களாக மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொண்டது. அதன் விளைவாக 17 நாள் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த 17 நாட்கள் போராட்டத்தையும் அவர்களுக்காக வெளியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் எடுத்த மிகப்பெரிய முயற்சிகளையும் தற்போது விரிவாக பார்ப்போம்.
17 நாட்கள் கடந்து வந்த பாதை:
நவம்பர் 12:
தீபாவளி தினம் காலை 5:30 மணிக்கு சுரங்க பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கி தவித்தார்கள் அவர்களுக்கு குழாய் மூலமாக ஆக்ஸிஜன் உணவு அளிக்கும் பணி துவக்கம்.
நவம்பர் 13:
ஆக்ஸிஜன் சப்ளை வழங்கும் குழாய் வழியாக தொழிலாளர்களுடன் தொடர்பு.
நவம்பர் 14:
நீல வாக்கில் ஒரு குழி தோண்டி ஆகர் இயந்திரத்தின் உதவியுடன் இடிப்பாடுகள் வழியாக நுழைய இரும்பு குழாய்கள் கொண்டுவரப்பட்டன.
நவம்பர் 15:
முதலில் பயன்படுத்தப்பட்ட துளையிடும் எந்திரத்தின் கோளாறு காரணமாக அதிநவீன வசதி கொண்ட எந்திரம் டெல்லியில் இருந்து விமான மூலம் வருகை.
நவம்பர் 16:
துளையிடும் எந்திரம் ஒருங்கிணைக்கப்பட்டு நள்ளிரவில் பணி துவக்கம் நவம்பர் 17 24 மீட்டர் தூரத்திற்கு துளையிடப்பட்டு இருந்த நிலையில் 4 குழாய்கள் நுழைக்கப்பட்டன.
நவம்பர் 18:
நிபுணர்கள் அச்சம் தெரிவித்ததால் துளையிடும் பணி நடைபெறவில்லை பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் மாற்று வழி குறித்த ஆலோசனை.
நவம்பர் 19:
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீட்ப பணிகளை ஆய்வு செய்தார்
நவம்பர் 20:
பாறை இடையூறாக இருந்தால் துளையிடும் பணி நிறுத்தம் நவம்பர் 21 சிக்கியுள்ள தொழிலாளர்களின் முதலாவது வீடியோ வெளியானது.
நவம்பர் 22:
43 மீட்டர் தூரம் வரை துளி விடப்பட்டு இரும்பு குழாய் நுழைக்கப்பட்டது இரும்பு கட்டுமானங்கள் இருந்ததால் பணி நிறுத்தம்.
நவம்பர் 23:
இரும்பு கட்டுமானங்கள் அகற்றப்பட்டன. 48 மீட்டர் தூரத்தை எட்டிய நிலையில் மீண்டும் பணி நிறுத்தம்.
நவம்பர் 24:
துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது மீண்டும் மற்றொரு இடையூறு.
நவம்பர் 25:
ஆகர் எந்திரத்தின் பிளேடு இடிப்பாடுகளில் சிக்கிக்கொண்டது. மாற்று வழி குறித்த ஆலோசனை.
நவம்பர் 26:
ஆட்கள் மூலமாக துளையிடும் பணி தொடங்கியது, அந்த வழியில் குழாய் துவக்கப்பட்டது.
நவம்பர் 27:
நீளவாக்கில் மீதம் உள்ள தூரத்திற்கு தூண்ட எலி வலை சுரங்க தொழிலாளர்கள் எனப்படும் சுரங்கப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதே நேரத்தில் செங்குத்தாக தொண்டும் பணி 36 மீட்டர் ஆழத்தை எட்டியது.
நவம்பர் 28:
தொழிலாளர்கள் சிக்கி இருந்த பகுதி வரை வெற்றிகரமாக தொண்டப்பட்டது. உள்ளே சென்று மீட்ப படையினர் ஒவ்வொரு தொழிலாளராக வெளிய வரவழைத்தனர்.
இப்படி 17 நாட்கள் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு கடுமையான இடையூறுகளைத் தாண்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டு அவர்களிடம் குடும்பத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். இது பற்றி பல்வேறு சமூக வலைத்தளங்களில் இடதுசாரிகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை குறை கூறி வருகிறார்கள்.
குறிப்பாக இந்த சுரங்க பகுதியில் வேலை செய்வதற்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் தான் கையில் எடுத்தது. அவர்களுடைய அலட்சியம் காரணமாக தற்பொழுது இந்த ஒரு செயல் அரங்கேறி இருப்பதாகவும், அதற்கு பிரதமர் மோடி அரசாங்கம் ஒத்துழைப்பதாகவும் பல்வேறு விதமான தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக மத்திய சார்தாம் திட்டத்தின் ஒரு பகுதியான சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிய துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தமிழகத்தில் போலி செய்தி பரப்புபவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். சமூகம் வலைத்தளத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்னும் இயற்கை ஆர்வலருமான மற்றும் தி.மு.க. பிரச்சாரகராகவும் அறியப்பட்டவர், 26 நவம்பர் 2023 அன்று போலிச் செய்திகளைப் பகிர்ந்துள்ளார். இந்த போலி செய்தியை பற்றி பாஜக மாநில செயலாளர் SG சூர்யா அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
பரப்பப்பட்ட பொய்யான தகவல்:
இந்த ஒரு சம்பவம் பற்றி பூவுலக நண்பர்கள் இயக்கத்தின் ஒருவரான சுந்தர்ராஜன் அவர்கள் கூறும் பொழுது, "உத்தரகாண்டில் சார்தாம் திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 41 பேர் சிக்கியதையும், அந்த சுரங்கப்பாதையை நவயுகா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் உருவாக்குகிறது என்பதையும் மோடியின் "தத்தெடுக்கப்பட்ட ஊடகங்கள்" நமக்குச் சொல்லவில்லை.
2020 இல் கௌதம் அதானியால் உத்தரகாண்டில் சார்தாம் திட்டத்திற்காக கட்டப்பட்டுவரும் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 41 பேர் உள்ளே சிக்கியுள்ளனர், இந்த சுரங்கப்பாதையை, 2020ல் கௌதம் அதானி மிரட்டி வாங்கிய நவயுகா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது என்பதை மோடியின் “வளர்ப்பு மீடியா” சொல்லாது. மோடி அரசால் அதானி கோடிகளில் வாழ வைக்கப்படுகிறார், நாட்டு மக்கள் வறுமையின் புதை குழியில் தள்ளப்பட்டுள்ளனர்" என்று கருத்தை பதிவிட்டு இருந்தார். இந்த ஒரு கருத்திற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பலரும் தன்னுடைய குரலை பதிவு செய்து இருக்கிறார்கள்.
அதிகாரப்பூர்வமான அதானி குடும்பம் தெரிவித்த கருத்து:
இதைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் இந்த ஒரு கருத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் அதிகாரப்பூர்வமாகவே ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். குறிப்பாக அந்த ஒரு அறிவிப்பில், “உத்தரகாண்டில் ஒரு சுரங்கப்பாதை துரதிர்ஷ்டவசமாக சரிந்ததில் எங்களை இணைக்க சில கூறுகள் மோசமான முயற்சிகளை மேற்கொள்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த முயற்சிகளையும் அதன் பின்னணியில் இருப்பவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதானி குழுமத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மிக அழுத்தமாக தெளிவு படுத்துகிறோம். சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் எங்களிடம் எந்தப் பங்குகளும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். இந்த நேரத்தில், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன" என்று அதானி குழுமம் தெளிவாக தன்னுடைய விளக்கத்தை அளித்தது.
பா.ஜ.க மாநில செயலாளர் SG.சூர்யாவின் பதிவு:
அதன் பிறகு இதை மேற்கோள் காட்டி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, சுந்தர்ராஜனின் இந்த போலிச் செய்திகளுக்கு பதிலளித்தார். "பொய்யே பிரதானம். பொய்யே வாழ்க்கை. பொய்களை மட்டுமே பரப்பி அரசியல் செய்வது. ஆனால் வெளியில் இயற்கை ஆர்வலர் - ஊடக நண்பர்களை வைத்துக்கொண்டு கட்டமைப்பதோ உத்தமர் பிம்பம். குறைந்தபட்ச நேர்மை இல்லாதவர்களை தமிழர்கள் முதலில் ஏமாந்து ஆதரித்தாலும் பின்னாட்களில் உண்மையறிந்து விரட்டியடிப்பர்" என்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கருத்தை தெரிவித்து இருந்தார்.
இறுதியான விளக்கம்:
அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் அநியாயமாக இணைக்கும் பழக்கத்தை சில இடதுசாரிகள், குறிப்பாக திராவிடவாதிகள், அவர்களின் உண்மையான ஈடுபாட்டைப் பொருட்படுத்தாமல், பல்வேறு அவலங்கள் மற்றும் மோசடிகளுடன் இணைக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் போக்கை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளத்தில் போலியான கருத்துக்களை பதிவிடும் எண்ணங்களை இடதுசாரிகள் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
Input & Image courtesy: News