Kathir News
Begin typing your search above and press return to search.

எப்பா சூர்யா, கார்த்தி 20 உயிர் போயிருக்கு? எங்கப்பா வாயே தொறக்காம இருக்கீங்க? - தேடும் மக்கள்!

எப்பா சூர்யா, கார்த்தி 20 உயிர் போயிருக்கு? எங்கப்பா வாயே தொறக்காம இருக்கீங்க? - தேடும் மக்கள்!

Mohan RajBy : Mohan Raj

  |  18 May 2023 6:33 AM GMT

கிட்டத்தட்ட 20 உயிர்கள் பலியாகியும் திரையுலக போராளிகள் இதுவரை வாய் திறக்காமல் உள்ளது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திரையுலகத்தினர் கடந்த அதிமுக ஆட்சிக்கு காலத்தில் அதிகமாக அரசை விமர்சித்தும், கருத்து கூறுவதும், அவ்வப்போது பொங்கி எழுவதுமாக இருந்து வந்தனர் குறிப்பாக நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, நடிகர் சத்யராஜ், ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த், சமுத்திரகனி இது போன்ற பல திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது ஆளும் அரசை எதிர்த்து இது இப்படி நடக்கக்கூடாது, அது அப்படி நடக்கக்கூடாது, என்றெல்லாம் கருத்து பேசி வந்தார்கள். அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு முந்திக்கொண்டு வந்து கருத்து கூறுவது, விமர்சிப்பது, இது எப்படி நடக்கலாம் என கொந்தளிப்பது என பெரும் போராளிகளாக இருந்துவந்தனர்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை - மகன் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இது சமூகத்தை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் ஜீவா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, பாடகி சுசித்ரா என சமூகத்தில் பல தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து தெரிவித்தனர்.

குறிப்பாக நடிகர் சூர்யா தான் நடித்த சிங்கம் படத்தில் பொங்கி பிரகாஷ்ராஜிடம் எம்பி, எம்பி பேசிய ல்டாலயக்கை விட அதிக ஆவேசமாக அறிக்கையெல்லாம் விட்டார். சூர்யா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்! மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குக்கூட மரண தண்டனைகூடாது' என்று மனித உரிமை அமைப்புகள் வலியுத்துகின்றன.’’ இத்தகைய 'கடமை மீறல்' செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம்'அதிகார அமைப்புகள்' காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற 'துயர மரணங்கள்' ஒரு வகையான organised crime மாக நடக்கிறது.’’ என மிகவும் ஆவேசமாக அறிக்கையை வெளியிட்டார்.

இப்படி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் திரையுலக பிரபலங்கள் நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு கண்டு படத்தில் பொங்குவதை போன்று நரம்பு துடிக்க கருத்துக்களை கூறி வந்தனர் ஆனால் தற்பொழுது சமீப காலமாக இவர்கள் எதற்கும் வாய் திறக்காமல் இருப்பது பொதுமக்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த ஆட்சி காலத்தில் பேசிய இவர்கள் இந்த ஆட்சி காலத்தில் ஏன் பேசாமல் இருக்கிறார்கள் எனவும் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆட்சி காலத்தில் அரசியல் விவகாரங்களுக்கு எல்லாம் பேசிய சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர்கள் தற்பொழுது வாய் பேசாமல் மௌனமாக அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. நீங்கள் உண்மையில் போராளிகள் தானா இல்லை அரசியல் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி போராளி வேஷம் போடுவார்களா என்றெல்லாம் மக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு என்பது இப்பொழுது விழுப்புரம், செங்கல்பட்டு பகுதிகளில் நடந்தது போன்று அதிக அளவில் நடக்கவில்லை ஆனால் இப்பொழுது 20 உயிர்கள் பறிபோயுள்ளன, இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அனைவரும் அச்சப்படும் வேளையில் இப்படி நடிகர்கள் ரத்தம் கொதிக்காமல், நரம்பு புடைக்காமல் இருப்பது ஏன் என மக்கள் மத்தியில் கேள்வி எழுவது மட்டுமல்லாமல் இனி இப்படித்தான் இவர்கள் இருப்பார்களா அல்லது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவார்களா என்ற சந்தேகத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News