டெல்லி மேலிடம் வீசப்போகும் பிரம்மாஸ்திரம்.... 2024 வெற்றியை உறுதி செய்த முக்கிய முடிவு....

மோடி கையில் எடுக்க போகும் பிரம்மாஸ்திரம்..... 2024 ஆட்டத்தை ஆரம்பித்த டெல்லி....
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் என்பது அனைத்து கட்சிகள் தரப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டது! ஏனென்றால் 2014 இல் இருந்து 2023 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சி அமைத்து இந்தியாவை வேறு விதமான நிலையில் நிறுத்தி உள்ளது. எப்படி என்றால் உலக நாடுகளின் பொருளாதாரப் பட்டியலில் பின்தங்கி இருந்த இந்தியா தற்பொழுது உலக நாடுகளில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் பிரதமர் செயல்படுத்தும் அவரது தொலைநோக்கு திட்டங்களே! அதுமட்டுமின்றி உலக நாடுகள் தரப்பிலும் இந்தியாவின் மதிப்பானது உயர்ந்துள்ளது என்றும் செல்லும் இடங்கள் எல்லாம் பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை கூற மறந்ததும் இல்லை!
இப்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்ததற்கு முக்கிய காரணமாக பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சி புரிந்தது என கூறப்படுகிறது.
இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பாஜக ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி அவர்களையே ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற முனைப்பு மாநிலங்கள் தோறும் சிறப்பாக பணியாற்றி வருகிறது பாஜக. இதற்கிடையில் சமீபத்தில் வெளியான அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படி சுற்றிலும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை தக்கவைத்து வரும் பாஜகவை எதிர்க்க 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I என்ற பெயரில் ஒரு கூட்டணி அமைத்து பாஜகவை தோற்கடிக்கும் வேளையில் இறங்கியுள்ளது. எனினும் கடந்த மாதம் நடைபெற்ற ஐந்து மாநிலங்கள் தேர்தலில் மூன்று மாநிலங்களில் தனது வெற்றியை பதிவு செய்தது பாஜக. இதனால் பாஜக நிர்வாகிகள் பெரும் மகிழ்ச்சியில் இந்த வெற்றியைக் கொண்டாடினர் மேலும் 3 மாநிலங்களின் வெற்றி பாஜகவிற்கு ஆதரவாக இருப்பதைக் கண்டு டெல்லி மேலிடம் குஷியாக உள்ளது.
இந்த நிலையில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையைப் படைத்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டும் நேருவின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதற்காக டெல்லி மேலிடம் தற்போது தீவிரமான திட்டங்களில் இறங்கி உள்ளது. அதில் ஒன்றாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு என்ற பிரம்மாஸ்திரத்தை டெல்லி மேலிடம் கையில் எடுத்துள்ளது.
அதாவது கடந்த 500 நாட்களாக பெட்ரோல் டீசல்லின் விலை ரூபாய் 100 தாண்டி வந்த நிலையில் சர்வதேச கச்சா எண்ணையின் விலையை பொறுத்து இங்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது எனினும் கடந்த காலாண்டில் மட்டும் இந்தியன் ஆயில் எச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் ஆகிய மூன்று நிறுவனங்களின் லாபம் ஆனது ரூபாய் 28 கோடியாக உள்ளது என்றும் இதனால் இதுவரை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வந்த இழப்பீடு இதன் மூலம் ஈடு செய்யப்பட்டு விட்டதாகவும், அதனால் அதன் பலனை நுகர்வோர்கள் அடைய வேண்டும் என்ற அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான ஆலோசனையை டெல்லி மேலிடம் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி 2024 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் இன் விலைகள் குறைக்கப்பட்டால் அது பாஜகவிற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும்.
இதன் மூலம் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் பெருமளவிலான வாக்குகளை அள்ள முடியும் என பாஜக திட்டமிட்டு வருவதாகவும் இந்த தகவல் தெரிந்து திமுக காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளிடையே, ஏற்கனவே பின்னடைவில் இருக்கிறோம் இந்த நிலையில் மோடி மட்டும் இதனை செய்து விட்டால் வேறு வழியே இல்லை நமக்கு தோல்வி உறுதியென அச்சத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.