Kathir News
Begin typing your search above and press return to search.

பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்: 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் அபார திட்டம் - ஓர் அலசல்!

பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்: 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் அபார திட்டம் - ஓர் அலசல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Oct 2023 12:50 AM GMT

பொருளாதார மேம்பாட்டுக்காக நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி, பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடங்களை அமைத்து, நேரத்தை மீதப்படுத்தவும், செலவைக் குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, 9 மாநிலங்கள் வழியாக 3,381 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக வழித்தடம் அமைக்கும் பணிகள் 8 ஆண்டுகளுக்கு முன்தொடங்கின. இதற்காக 11,827 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 125 ரயில் நிலையங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.



திட்டத்தின் தாக்கம்

பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் சரக்கு போக்குவரத்தின் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அதிக திறன் கொண்ட நீண்ட ரயில்களை இயக்க முடியும். இதனால் இந்திய தொழில்கள் உலக ஏற்றுமதி சந்தையில் போட்டியிட உதவுகிறது. டீசல் மூலம் இயக்கப்படும் சரக்கு ரயில்கள் மற்றும் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான சாலைப் போக்குவரத்திலிருந்து மின்சாரம் சார்ந்த ரயில் என்ஜின்களுக்கு மாறுவதன் மூலம், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உறுதியளித்த இலக்குகளை அடைய இந்த வழித்தடங்கள் உதவும் . புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா வளர்ந்து வருகிறது.

WAG-12 இன்ஜின் என்பது இந்திய மின்சார இன்ஜினின் ஒரு வகையாகும், இது 2017 இல் அல்ஸ்டாம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது . 12,000 ஹெச்பி குதிரைத்திறன் கொண்ட இது உலகின் மிக சக்திவாய்ந்த என்ஜின்களில் ஒன்றாகும். தற்போதுள்ள பிரத்யேக சரக்கு வழித்தடங்களில் இந்த இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஃபிளாஷ் பட் வெல்டிங் இயந்திரங்களைப் பயன்படுத்தி வெல்டிங் செய்யப்பட்ட 250மீ நீளமுள்ள கடினப்படுத்தப்பட்ட (HH) தண்டவாளங்கள் இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படும். இந்திய இரயில் பாதைகளில் பயன்படுத்தப்படும் தற்போதைய 25டன் அச்சு சுமையுடன் ஒப்பிடும்போது, இந்த பாதையின் அச்சு சுமை 32.5டன்னாக ஆக இருக்கும்.

கிடைக்கும் நன்மைகள்

இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் 70% சரக்கு போக்குவரத்து பிரத்யேக சரக்கு வழித்தடங்களுக்கு மாறும். இதனால் 75 மில்லியன் லிட்டர் டீசல் எரிபொருள் மற்றும் அது தொடர்பான அந்நிய செலாவணியை நாட்டுக்கு சேமிக்க முடியும். இப்போது அமேசான் இந்தியா , இந்திய சந்தையில் தனது முதலீட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, செலவைக் குறைக்கவும், விநியோக நேரத்தை அதிகரிக்கவும் பிரத்யேக சரக்கு வழிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. சரக்கு வழித்தடம் கட்டுமானத் துறையில் மட்டும் வேலைவாய்ப்பை உருவாக்காமல், சிமென்ட், எஃகு, போக்குவரத்து துறையிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்த வழித்தடம் 9 மாநிலங்கஙளில் 133 ரயில்வே நிலையங்களைக் கடந்து செல்கிறது. இந்த ரயில் நிலையங்களில், பன்நோக்கு தளவாட மையம், சரக்கு முனையம், கன்டெய்னர் கிடங்கு, கன்டெய்னர் முனையம், பார்சல் மையம் ஆகியவை இருக்கும். இவை அனைத்தும், விவசாயிகள், சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், மிகப் பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்குப் பயன் அளிக்கும்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News