நேரு சாதனையை தட்டி தூக்க போறாரு மோடி...! 3 வாட்டியும் அவரேதானம்..! வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு..!
By : Mohan Raj
வெளிவந்த அதிரடியான கருத்து கணிப்புகள்! துள்ளலில் பாஜக! அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி!
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்டு வருகிறது மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தீவிர வேலைகளில் எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் இறங்கி உள்ளனர் இந்த தேர்தலில் யார் பிரதமராக வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அடுத்த ஆட்சியைப் பிடிக்கப் போவது பாஜகவா? அல்லது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியா? என்பதுதான் இப்படி ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்களும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சலிக்காமல் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரங்கள் விவாதங்கள் மேடைப் பேச்சுகள் என பல செயல்களில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
மேலும் இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்தியா என்ற கூட்டணியில் ஒருங்கிணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தேர்தல் களத்தில் சந்திக்கவிருக்கும் நிலையில் ஒரு பக்கம் திமுக ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி முதலிய கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடி வருகின்றனர் இந்த நிலையில் பாஜக அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் மோடியை மறுபடியும் பிரதமராக வேண்டும் என்று இப்பொழுதே கள வேலைகளின் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வரப்போகிறார் என்ற கருத்துக்கணிப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது அதாவது டைம்ஸ் நவ் மற்றும் இ டி ஜி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி 296 முதல் 326 இடங்களை கைப்பற்றும் என்ற கருத்து கணிப்பு வெளிவந்த நிலையில் பாரத பிரதமர் மூன்றாவது முறையாக வெற்றியை தழுவுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது மேலும் எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணிக்கு 160 முதல் 190 வரை இடங்களை கைப்பற்றும் என்ற கருத்து வெளியான நிலையில் பாரத ஜனதா கட்சியை விட இந்தியா கூட்டணி கட்சிக்கு குறைந்த கருத்து கணிப்பு வந்துள்ளதால் எதிர்க்கட்சிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கின்றனர்.
மேலும் காங்கிரஸ் தற்போது ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 19 முதல் 22 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அதாவது ராஜஸ்தானில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டத்திற்கு 9 முதல் 12 இடங்கள் கிடைக்கும் நிலையில் பாஜகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது தற்போது பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டைம்ஸ் இ டி ஜி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் பாஜகவிற்கு வெற்றி பெறுவதற்கு சாதகமான கருத்து கணிப்பு வெளிவந்துள்ளதால் பாஜகவினர் குஷியில் இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் மிகுந்த கடுப்பில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது
அதாவது இந்திய அளவில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமர்ந்தால் முன்னாள் பிரதமர் நேருவின் சாதனை முறியடிக்கப்படும் என தெரிகிறது இதனால் பாஜகவினர் குஷியில் இருக்கும் நிலையில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது