இந்திய வரலாற்றில் ஒரு வரலாற்று சாதனை.. மீண்டும் அமையப்போகும் மோடி 3.0 அரசு..
By : Bharathi Latha
மீண்டும் மோடி 3.0 அரசு:
டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்கும். "மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியில் நம்பிக்கை வைத்துள்ளனர். இது இந்திய வரலாற்றில் ஒரு வரலாற்று சாதனையாகும். இந்த பாசத்திற்கு நான் ஜனதா ஜனார்தனுக்கு தலைவணங்குகிறேன். கடந்த பத்தாண்டுகளில் செய்த நல்ல பணிகளை தொடர்ந்து செய்வோம் என்று உறுதியளிக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுகிறேன்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய பா.ஜ.க.:
ஒவ்வொரு தேர்தலைப் போலவே, பா.ஜ.க அதன் வலிமையான தேர்தல் அஸ்திரங்களை முன்கூட்டியே முயற்சி எடுத்து, வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் சுதந்திரத்தின் 100 ஆண்டு நிறைவைக் குறித்த தொலைநோக்குப் பார்வையை மையமாகக் கொண்ட ஒரு நட்சத்திரப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. 370வது சட்டப்பிரிவை நீக்குவது மற்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் பா.ஜ.க இரண்டாவது முன்னிலை:
2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதல் கட்டத்திலேயே தேர்தலைச் சந்தித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து தேர்தலைச் சந்தித்தன. தமிழகத்தில் பாஜகவின் நம்பிக்கையாக கருதப்பட்ட அக்கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை 38,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். குறிப்பாக அவர் இரண்டாம் இடத்தில் இருந்தார்.
அதுபோல தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 46,272 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தார். விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 4,162 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். குறிப்பாக அவரும் இரண்டாம் இடத்தில் இருந்தார். பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில் தற்போது இரண்டாவது முன்னிலை கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. வரும் தேர்தல்களில் இந்த நிலைமை நிச்சயம் மாறும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்ட வருகிறது.
Input & Image courtesy:News