Kathir News
Begin typing your search above and press return to search.

பஸ் கண்டக்டருக்கு 5000 கோடி சொத்து எப்படி? அன்றே சொன்ன அண்ணாமலை! எ.வ.வேலு ரெய்டில் சிக்கிய பின்னணி!

பஸ் கண்டக்டருக்கு 5000 கோடி சொத்து எப்படி? அன்றே சொன்ன அண்ணாமலை! எ.வ.வேலு ரெய்டில் சிக்கிய பின்னணி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  4 Nov 2023 7:08 AM GMT

அன்றே சொன்ன அண்ணாமலை.. எ.வ.வேலுவுக்கு ஐயாயிரம் கோடி சொத்து வந்தது எப்படி?

திமுகவின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு அதிரடியாக நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை வெள்ளிக்கிழமை காலை முதல் நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் திருவண்ணாமலை என நீளும் இந்த சோதனையில் சிக்கும் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைகளை அமைச்சர் எ.வ.வேலு கவனித்து வருகிறார், இதன் காரணமாக பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சிலர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்ற பிரிவுகளையும் அமைச்சராக எ.வ.வேலு கவனித்து வருவதால் அது சார்ந்த ஒப்பந்தக்காரர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது மேலும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறுப்பினர்கள் தலைமையை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை அதிரடியாக இறங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை ஆரம்பிக்கும் முன்பு டிஎம்கே பைல்ஸ் முதல் பாக வீடியோவை வெளியிட்டார், அந்த வீடியோவில் கிட்டத்தட்ட திமுகவில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டு இருந்தார்.

அதில் எ.வ.வேலுவிற்கு உள்ளே சொத்து பட்டியலையும் வெளியிட்டு இருந்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அந்த வீடியோவில் அமைச்சர் எ.வ.வேலு சொத்து மதிப்பு 5442 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.


இவ்வளவுக்கும் எ.வ.வேலு பரம்பரை பணக்காரர் கிடையாது, ஆனால் இந்த சொத்துக்கள் எப்படி வந்தது என அப்பொழுதே பல கேள்விகள் எழுந்தது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சே.கூடலூர் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட எ.வ.வேலு ஆரம்ப காலங்களில் பம்பு செட்டு மெக்கானிக்காக இருந்து வந்துள்ளார் அடுத்தபடியாக பேருந்து நடத்துனராக வேலைக்கு சேர்ந்த இவருக்கு என்று 5000 கோடி ரூபாய்க்கு சொத்து வந்தது எப்படி? எப்படி இவ்வளவு கோடி ரூபாய் சொத்துக்கள் கிடைக்கும் என தற்பொழுது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த ரெய்டு முடியும் போது தான் தெரியும் எவ்வளவு கோடி வரியை இப்ப நடந்துள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News