Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை கெடுத்த 7 கிறிஸ்தவ மிஷனரிகள்?

இந்தியாவை கெடுத்த 7 கிறிஸ்தவ மிஷனரிகள்?

ShivaBy : Shiva

  |  6 Jan 2022 6:00 AM GMT

மிஷனரிகளின் வருகையால் தான் இந்தியாவிற்கு கல்வியும் நாகரிகமும் வந்தன என்று இடதுசாரிகளும் சில அறிவுஜீவிகளும் கூறுவது வழக்கம். இந்தியாவை அடிமைப்படுத்தியவர்களே எப்படி இந்தியர்களுக்கு உரிமைகளை அளித்திருக்கக் கூடும் என்று பலருக்கும் சந்தேகம் எழுவது சகஜம். இந்த பிம்பத்தை உடைக்க அதிகம் முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால் அதுவே உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. ஆனால் உண்மை என்ன?

இந்தியர்களாகிய நாம் செய்ததைப் போல, இந்த கிரகத்தில் வேறு எந்த நாடும் அதன் சொந்த கலாச்சாரத்தை அழிக்கவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட கலாச்சாரப் புரட்சியின் காரணமாக சீனர்கள் கூட தங்கள் கலாச்சாரத்தை இந்தியாவை போல அழிக்கவில்லை. இங்கிலாந்து சர்ச், ஸ்காட்லாந்து சர்ச், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகலை சேர்ந்த கத்தோலிக்க திருச்சபைகள் இந்தியாவில் பல பில்லியன்களை நன்கொடையாக ஏமாற்றி பெற்று அவற்றை தங்கள் மதத்தைப் பரப்புவதற்கு செலவழித்துள்ளன.

அவர்கள் இந்தியர்களை ஏழைகளாகக் காட்டினர், சதி என்ற பழக்கத்தின் மூலம் கணவனை இழந்த பெண்களை கொத்துக்கொத்தாக கொளுத்துபவர்களாக காட்டினர், இந்தியர்கள் தங்கள் மகள்களை விபச்சாரத்தில் தள்ளுபவர்களாக காட்டினர், நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமாகாமல் மடிந்து போவதாக காட்டினர், இந்தியர்களை படிப்பறிவு இல்லாதவர்களாகக் காட்டினர். இதன் காரணமாக இயேசுவைப் பின்பற்றும் ஐரோப்பியர்கள் இந்தியாவில் உள்ள மக்களை ஏமாற்றி தங்கள் மதத்தை பரப்புவதற்காக பணத்தை வாரி இறைத்தனர்.

இதனிடையில், இது போன்ற கிறிஸ்தவ திருச்சபைகள் இந்திய அரசர்களிடையே பகையை ஊக்குவித்து அழிவுக்கு வழிவகுத்தன. இது போக, அவர்கள் போர்த்துகீசியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இந்தியாவில் உள்ள வளங்களை கொள்ளையடிப்பதற்கும் சூறையாடுவதற்கும் உதவி செய்தனர்.

இந்தக் கட்டுரையில், பாரதத்தை அழிக்கும் பணியில் திருச்சபைக்கு உடந்தையாக இருந்த "புகழ்பெற்ற" ஏழு மிஷனரிகளைப் பற்றி பார்ப்போம்.

1.ஏமி கார்மைக்கேல்இந்தியர்களின் வறுமையைக் காட்டி கல்லா கட்டிய அன்னை தெரேசாவுக்கு பல தசாப்தங்கள் முன்னரே இந்துக்கள் என்றால் பெண்களை விற்பவர்கள் என்றும் விபச்சாரத்தை நடத்தி தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்றும் மேற்கத்திய உலகிடம் பொய்யுரைத்தவர் தான் ஆமி கார்மைக்கேல். இவர் 1894ஆம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள சர்ச் ஆப் இங்கிலாந்து ஜெனானா மிஷனில் சேர்ந்த பின்னர் 1896 ஆம் ஆண்டில் சி.எம்.எஸ் மிஷனரிகளாக இருந்த தாமஸ் வாக்கர் மற்றும் அவரது மனைவியுடன் திருநெல்வேலி மாவட்டத்திற்குச் சென்றார். அங்கு அவர் தமிழ் கற்றுக் கொண்டு, புடவை அணிந்து இந்துப் பெண்களுடன் பழக ஆரம்பித்தார். பின்னர் மெதுவாக அவர்களை மதமாற்றம் செய்யத் தொடங்கினார்.

தெய்வ சேவையில் ஆர்வம் கொண்ட குழந்தைகளை கோவிலுக்கு அற்பணிக்கும் தேவதாசி நடைமுறையை தவறாக சித்தரித்து குழந்தைகள் கோவில்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாக பொய் பரப்பினார் ஏமி. பெற்றோருக்கும் கோவிலில் இருப்பவர்களுக்கும் தெரியாமல் குழந்தைகளைத் தூக்கி வந்து மலைப்பகுதியில் தனியாக ஒரு வீட்டில் வைத்து கிறிஸ்தவ மத போதனைகளை மட்டுமே ஊட்டி வளர்த்துள்ளார்.

அவரது "பாதுகாப்பில்" இருந்த குழந்தைகளை வெளியுலகே தெரியாமல் வளர்த்ததாகவும், அவரது கட்டுப்பாடுகள் மிகக் கொடூரமானவை என்றும், கைக்குழந்தைகள் அழுது கொண்டிருந்தால் அவர்களை சமாதானப்படுத்தக் கூட மாட்டார் என்றும் அவருடன் பணிபுரிந்த சக மிஷனரிகளே தெரிவித்துள்ளனர்.

இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

எமி, தான் ஒரு இந்துக்களுடன் பழக வேண்டும் என்றால் கோவில்களுக்கு தான் செல்ல வேண்டும் என்று உணர்ந்து காபி அல்லது டீ டிக்காஷன் மூலம் தனது வெளிர் தோலை பழுப்பு நிறத்தில் சாயமிடுவார். மேலும் அவளது பழுப்பு நிற கண்கள் அவர் ஒரு இந்தியராக சக இந்துவாக நடிப்பதற்கு சரியாகப் பொருந்தியது. வெளிர் நீல நிற புடவை அணிந்து, சாயம் பூசிக் கொண்ட இவரை அயர்லாந்து பெண் என்று யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இவர் காப்பாற்றியதாகக் கூறப்படும் சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

2.டொனால்ட் மெக்கவர்ன்

இவர் "சர்ச் வளர்ச்சி இயக்கத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். இவர் மூன்றாம் தலைமுறை மிஷனரி என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரையும் "கிறிஸ்துவின் பாதைக்கு" அழைத்துச் செல்லும் முறைக்கு மாறாக மதமாற்றம் ஒரு மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார் மெக்கவர்ன்.

தற்போது குறிப்பிட்ட இனக்குழுக்கள் குறிவைக்கப்பட்டு மதம் மாற்றப்படுவது பற்றி 1950களிலேயே பேசியவர் இவர். மதமாற்றம் மக்கள் இயக்கமாக மாறுவதற்கு அவர் சில கொள்கைகளை வகுத்தார்.

1) ஒரு சாதி/பழங்குடி/சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவு என்ற ரீதியில் மதமாற்றத்துக்கு குறி வைக்க வேண்டும், மதம் மாறியவர்கள் தங்களது உறவினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும்

2) ஒரு சாதி/பழங்குடியினருக்கு மட்டுமே நிதி, மனிதவள ஆதாரங்களை பயன்படுத்துவது. சட்டீஸ்கர் மாநிலத்தில் (பிற சமூகத்தினர் இருந்த போதும்) சத்நாமி என்ற தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டவர்களை மட்டுமே மெக்கவர்ன் குறிவைத்தார்.

3) மதம் மாறியவர்கள் தொடர்ந்து தங்களது குடும்பத்தினருடன் அவர்களுள் ஒருவராக பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் வாழ வேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிறரையும் எளிதாக மதம் மாற்ற முடியும்

4) மதம் மாறியவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவதைத் தவிர்க்க புதிதாக மதம் மாற்றுபவர்களுக்கு கூட்டமாக ஞானஸ்நானம் வழங்கப்பட வேண்டும்.

மதம் மாற்றி அவர்களை சிறந்த கிறிஸ்தவர்களாக உருவாக்க மிஷனரிகள் முயலக் கூடாது என்றும் அதற்கு பதிலாக தொடர்ந்து புதிய சமூகங்கள்/சாதிகளை மத மாற்றத்துக்கு குறிவைக்க வேண்டும் என்றும் மெக்கவர்ன் கருதினார்.

3) ஹென்றி கெய்க்வாட் (எ) பிரேம் பாய்

லட்சக்கணக்கில் இந்துக்களை மதம்‌மாற்றி நூற்றுக்கணக்கில் சர்ச்சுகளைக் கட்டியவர் இந்த மிஷனரி. ஹென்றியாக இருந்த இவர் 1981ல் "பிரேம் பாய்"ஆக அருணாச்சல பிரதேசத்தில் நுழைந்தார். அந்த சமயத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் மீது கடுமையான தடை விதிக்கப்பட்டு இருந்ததால் தச்சர், கசாப்பு கடைக்காரர் என்று பல்வேறு விதமாக வேடமணிந்து மலைக் கிராமங்களில் ஊடுருவி கிராமம் கிராமமாக மக்களை மதம் மாற்றி மாநிலத்தில் கிறிஸ்தவ மதம் காட்டுத் தீயாகப் பரவ முக்கியக் காரணமானவர் இந்த ஹென்றி

4) ஹென்றி ஹெராஸ்
முதன்முதலில் இந்தியக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டு மிஷனரிகளுள் முக்கியமானவர் ரெவரண்ட் ஹென்றி ஜெராக்ஸ். இவர் "இந்திய கிறிஸ்தவ கலையின் தந்தை"யாக கருதப்படுகிறார். கோவாவில் "புனிதர்" சேவியரின் வழிகாட்டுதலில் நடந்த படுகொலைகளை நியாயப்படுத்தி பேசிய இவர், "சில தனிநபர்கள் ஒரு ஆர்வக்கோளாளால் வன்முறை மூலம் கட்டாயப்படுத்தி இருக்கலாம்" என்று கூறினார்.

தனது "The Conversion Policies of the Jesuits in India" என்ற புத்தகத்தில் "ஜெசூயிட் பாதிரிகளை ஆதரித்த போர்த்துக்கீசிய அரசு மத மாற்றத்தில் ஈடுபட்டது என்பதில் சந்தேகமே இல்லை. அது கோவில்களையும் சிலைகளையும் அழிக்கும் பணியை மேற்கொண்டது. கிறிஸ்தவத்தைப் பரப்ப கொடுக்கப்பட்ட இடையூறுகளை மிகக்கடுமையாக தண்டித்தது. அந்த வகையில் அந்த அரசின் முயற்சிகள் கட்டாயப்படுத்தும் விதமாக இருந்ததோடு மிகத் தீவிரமாக பின்பற்றவும் பட்டன." என்று எழுதியுள்ளார். இந்த உண்மைகளை அறிந்தவராக இருந்தும் "ஆர்வக்கோளாறு" என்று அவற்றை நியாயப்படுத்தியதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

5) ஜேம்ஸ் மில்ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு மிஷனரி தான் ஜேம்ஸ் மில். இந்தியாவை கண்ணால் கூட பார்க்காத‌ போதே இந்தியாவைப் பற்றி பல புத்தகங்கள் எழுதியவர் இந்த ஜேம்ஸ் மில். ஒரு ஆண்டு இந்தியாவில் கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் கற்றுக் கொள்வதை விட அதிகமாக இங்கிலாந்தில் ஒரு மூலையில் உட்க்கார்ந்து கொண்டு ஒரே வாரத்தில் கற்றுக் கொள்ளலாம் என்று எகத்தாளமாக பேசியவர் இவர்.

தனது புத்தகங்களில், "இந்துக்கள் ஏமாற்றுக்காரர்கள், துரோகிகள்" என்றும் "அடிமைத்தனத்தில் சிறந்து விளங்குபவர்கள்" என்றும் "நாகரீகமற்ற சமூகங்கறிலேயே கீழ்த்தரமானவர்கள்" என்றும் வர்ணித்தார். மேலும் இந்துக்களும் முஸ்லிம்களும் "கோழைகள், உணர்வற்றவர்கள், தலைக்கனம் பிடித்தவர்கள்" என்றெல்லாம் கரித்துக் கொட்டியதோடு தனிப்பட்ட சுகாதாரம் என்று வரும் போது "வீடுகளானாலும் தனிமனிதன் ஆனாலும் சகிக்க முடியாத அளவுக்கு அழுக்குப் பிடித்தவர்கள்" என்றெல்லாம் கூறியுள்ளார்.

இவரது புத்தகங்கள் இந்தியாவில் குடிமைப் பணிகளுக்கு தயார் செய்தவர்களுக்கு பாடப்புத்தகமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6) அன்னை தெரசாஇவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தாலும் இவரது உண்மையான முகம் வெகு சிலருக்கே தெரியும். கல்கத்தா நகரத்தை தொழுநோயாளிகளின் நகரமாகக் காட்டி நிதி திரட்டியவர் தான் தெரசா. அந்த நிதியில் வாட்டிகனுக்கு அனுப்பப்பட இருந்த 5 பில்லியன் என்ன ஆனது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. 1979ஆம் ஆண்டு‌ நோபல் பரிசைப் பெற்றுக் கொண்ட போது தான் உண்மையில் உதவி செய்ததை விட நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி பேசியதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கல்கத்தாவில் இருந்த வணிகர்கள் தெரசாவுக்கு நன்கொடையாக அளித்த அவசர ஊர்திகள் தொழு நோயாளிகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதை விட மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் கன்னியாஸ்திரிகளுக்கு டாக்சிகளாகவே அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆசிரமத்தின் அருகில் இருந்த நோயாளிகளை தொட்டுக் கூட பார்க்காத தெரசாவும் அவரது கன்னியாஸ்திரிகளும் ஆயிரக்கணக்கானோரை தாங்கள் காப்பாற்றியதாக மேற்கத்திய முதலாளிகளுக்கு புருடா விட்டுக் கொண்டிருந்தனர்.

7) பிஷப் வேதநாயகம் சாமுவேல் அசாரியா

மகாத்மா காந்தியையே அச்சப்பட வைத்த மிஷனரி இவர். விடுதலைக்குப் பிந்தைய "இந்தியாவின் முதல் எதிரி" என்று காந்தி இவரை வர்ணித்தார். தனது வாழ்வில் 40 ஆண்டுகளில் இவர் 5 லட்சம் பேரை மதம் மாற்றியதாக கூறப்படுகிறது. மிஷனரி பள்ளியில் படித்து மதம் மாறி பாதிரியாரான தாமஸ் வேதநாமகத்துக்கு மகனாகப் பிறந்தார்.தேவாலயத்திற்குள் வளர்ந்த இவரது லட்சியம் அதிகபட்ச மதமாற்றம் செய்ய வேண்டும் என்பதே. இதற்காக அவர் திருநெல்வேலியில் இந்திய மிஷன் சொசைட்டியை நிறுவினார். மேலும் சக தமிழ் கிறிஸ்தவர்கள் தங்கள் சகோதரர்களிடையே சுவிசேஷம் செய்ய முடியும் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். மகாத்மா காந்தி இவரைக் கண்டு அஞ்சியதற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. இவர் ஆசியா முழுவதும் பயணம் செய்து பல முக்கிய கிறிஸ்தவ தலைவர்களை சந்தித்தார். அதன்பிறகு இந்தியாவில் உள்ள இந்துக்களை தனியாகவும், குழுக்களாகவும் மதமாற்ற தொடங்கினார்.

இதுபோன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் சுயலாபத்திற்காக அப்பாவி இந்துக்களை மதம் மாற்ற கற்றுக்கொடுத்த யுத்திகளை தற்போதுவரை வியாபார நோக்கத்திற்காக பல கிறிஸ்தவ மிஷனரிகள் கையாண்டு வருகிறது. இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு அநீதிகள் இழைக்கப்படுவதாக இவர்களின் பொய்களை நம்பி மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கிறிஸ்தவர்களால் எவ்வாறு கையாளபடுகிறார்கள் என்பதை நாம் பல்வேறு செய்திகள் மூலம் அறிந்து கொண்டுதான் உள்ளோம்.

Source : Missionkaali

Next Story
கதிர் தொகுப்பு
Trending News