Kathir News
Begin typing your search above and press return to search.

தொடரும் கொலைகள்..! 8 வருடங்கள் காத்திருந்து திமுக ஆட்சியில் தொடர்ந்த பழிவாங்கும் படலம்!

தொடரும் கொலைகள்..! 8 வருடங்கள் காத்திருந்து திமுக ஆட்சியில் தொடர்ந்த பழிவாங்கும் படலம்!

SushmithaBy : Sushmitha

  |  7 July 2024 4:43 PM GMT

ஆம்ஸ்ட்ராங் இறப்பு:

பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 அன்று மாலை சென்னை பெரம்பூர் அருகே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு அருகில் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட, தாக்குதலை தடுக்க முயன்ற ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களையும் வெட்டியுள்ளது.இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் பதில் தாக்குதல் செய்வதற்குள் தப்பிச் சென்றுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த அவரது குடும்பத்தினர், அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காவல்துறை வட்டாரங்களின்படி, மாலை 7 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், தாக்குதலை நடத்தியதுடன், ஆதரவாளர்கள் பதிலளிப்பதற்குள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து துணை கமிஷனர் ஐ.ஈஸ்வரன், உதவி கமிஷனர் பிரவீன்குமார் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சந்தேக நபர்களைப் பிடிக்க செம்பியம் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் வன்முறையைத் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திமுகவை கண்டித்து வெடிக்கும் கோஷம்:

தொழிலில் ஒரு வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், முந்தைய கிரிமினல் வழக்குகளுடன் சிக்கலான கடந்த காலத்தைக் கொண்டிருந்தார், இருப்பினும் அவரது சட்ட சிக்கல்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பி.எஸ்.பியின் செல்வாக்கு குறைவாக இருந்தபோதிலும் ஒரு முக்கிய தலித் தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதன் மூலம் அவர் பிரபலமடைந்தார். தற்போது அவர் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் தெருக்களில் திரண்டு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கண்டித்து கோஷமிட்டு வருகின்றனர்.

சீரழிந்து போனது காவல்துறை, உளவுத்துறை:

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள், இன்று சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் தமிழக பாஜக ஆறுதலாகத் துணை நிற்கிறோம்.

நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று திமுக ஆட்சியில் தொடர்ந்து நடக்கும் வன்முறைகளை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

போலி திராவிட மாடலின் செயலற்ற தன்மை:

மேலும், மத்திய அமைச்சர் எல்.முருகன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூகவிரோத கும்பல்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது சமூக விரோத கூலிப்படை கும்பல் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்துள்ளார்கள். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் போலி திராவிட மாடல் ஆட்சியில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கும் மற்றும் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவருக்கும் பாதுகாப்பில்லை. அதுவும் சென்னை பெரம்பூர் போன்ற முக்கிய நகர்ப்புறத்தில் சமூக விரோத கும்பல் படுகொலை செய்து தப்பி ஓடுவது போலி திராவிட மாடல் திமுக அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும் காவல் துறையும், உளவுத் துறையும் முற்றிலும் சீரழிந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதையே இந்த படுகொலை நிரூபித்துள்ளது.

வேங்கை வயல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் ஆகிய சம்பவத்தில் ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், செயலற்று நடவடிக்கை எடுக்காமல் நின்ற திமுக அரசின் மெத்தனத்தின் தொடர்ச்சியே சகோதரர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வந்து நிற்கிறது. போலி திராவிட மாடல் அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சுடுகாடாய் மாறும் தலைநகர்:

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் நண்பரும், பாம் சரவணனின் தம்பியான தென்னரசு 2015 பிப்ரவரியில் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு பழிவாங்கும் வகையில் 2023 ஆகஸ்ட்டில், ஆற்காடு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2024 ஜனவரி மாதத்தில் ஆற்காடு சுரேஷ் கொலையின் தொடர்ச்சியாக, அவரது நண்பர் பாஸ்கர் மாதவன் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளன்று ஆம்ஸ்ட்ராங் மாநிலத்தின் தலைநகரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. அதிலும் குறிப்பாக பாம் சரவணன் தம்பி தென்னரசு படுகொலை செய்யப்பட்டதற்கு, கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் காத்திருந்து 2023 திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு பழிவாங்கும் சம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மற்றொரு படுகொலை, தற்போது ஆம்ஸ்ட்ராங்! இதே நிலை தொடர்ந்தால் மாநிலத்தின் தலைநகர் கொலைகளின் தலைநகராக மாறிவிடும் என சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்து வருகிறது.

Source : The Commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News