Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை : தமிழக மருத்துவ இடங்கள் வட மாநிலத்தவர்களுக்கா? AK ராஜன் அறிக்கையில் உள்ள ஓட்டை!

சிறப்பு கட்டுரை : தமிழக மருத்துவ இடங்கள் வட மாநிலத்தவர்களுக்கா? AK ராஜன் அறிக்கையில் உள்ள ஓட்டை!
X

Yuvaraj RamalingamBy : Yuvaraj Ramalingam

  |  11 Feb 2022 1:30 AM GMT

2017 ல் தமிழகத்தில் நீட் அறிமுகப்படுத்தியபோது உருவாக்கப்பட்ட மாயபிம்பம் "NEET தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ இடங்கள் வட இந்திய மாணவர்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது" என்பது.

1986 உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டு அப்பொழுது இருந்தே பிற மாநிலங்களுக்கு (All India Quota(AIQ) விற்கு) ஒவ்வொரு மாநிலமும் ஒதுக்கும் 15% சீட்டுகளை காண்பித்து இது நீட் தேர்விற்கு பின்னர்தான் நடப்பதாக கூறி உருவாக்கப்பட்ட "மாயபிம்பத்திற்க்கு" உருவம் கொடுத்தார்கள் நீட் எதிர்ப்பு போராளிகள்.

இன்னும் கூட அந்த பொய் பிம்பம் தமிழக மக்கள் மனதில் இருந்து அகலவில்லை என்றாலும் இனியும் அந்த பொய் குற்றச்சாட்டை தொடர்ந்து கூறினால் அம்பலப்பட்டுவிடுவோம் என்பதால் பேசாமல் இருக்கின்றனர் நீட் எதிர்ப்பு போராளிகள். ஆனால் NEET தேர்வை ரத்து செய்ய பரிந்துரைத்த AK Rajan குழு நயவஞ்சகமாக தமிழக மாணவர்கள் இடங்களை வேற்று மாநிலத்தவர் எடுத்துக்கொள்கின்றனர் என்ற குற்றசாட்டை வேறு விதமாக வைக்கின்றனர்.

AK ராஜன் கமிட்டி ரிப்போர்ட்டில் பக்கம்84 7.5.10. Admissions Based on டொமிஸிலே



இதில் பொதுப்படையாக ஒரு குற்றசாட்டு, NEET வந்தவுடன் வேறு மாநிலத்து மாணவர்கள் அதிகமாக (Domicile அடிப்படையில்) விண்ணப்பம் செய்கிறார்கள். அதிகமாக மருத்துவ சீட்டுக்களை பெறுகிறார்கள். எனவே அதற்கு கரணம் நீட் என்று சுருக்கமாக கூறி ஒரு விஷத்தை விதைக்கிறது.

ஆனால் உண்மை என்ன?

Domicile Certificate என்றால் குடியிருப்பு சான்றிதழ். தமிழக அரசாங்கம் கவுன்சிலிங் மூலம் நிரப்பும் மருத்துவ சீட்டுகளில் யாரெல்லாம் பங்கேற்கலாம் என்று தமிழக அரசே நிர்ணயம் செய்யும். இதை தமிழக அரசு வழங்கியுள்ள PROSPECTUS FOR ADMISSION TO MBBS 2022 பக்கம் 10 இல் காணலாம்.


அதில் தமிழக அரசு நிர்ணயித்தது தான் "வேறு மாநிலத்தில் 6 to 12 படிக்கும் தமிழகத்தை சார்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம்" அதற்கான முறையான Certficate களோடு வேற்றுமாநிலத்தில் பயின்றவர்கள் பங்கேற்கலாம் என்று கூறுகிறது தமிழக அரசு. அதை நிர்ணயம் செய்து Certificate தரப்போவதும் தமிழக அரசு

ஆக தமிழக அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாட்டை, வேறுமாநிலத்தை சேர்ந்தவர்களையும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தும் பித்தலாட்டத்தை மறைத்து, அதற்கும் NEET காரணம் என்று வரையறுக்கிறதா AK ராஜன் குழு என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில் இதை எப்படி ஒப்பீடு செய்திருக்க வேண்டும்?

NEET தேர்வுக்கு முன்னர் தமிழக மாணவர்கள் All India Quota வில் (நீட் தேர்வுக்கு முன்னர் இதற்கென தனியாக ஒரு தேர்வு உண்டு AIPMT அந்த தேர்வின் அடிப்படையில் சீட்டுக்கள் ஒதுக்கப்படும்) எத்தனை பேர் மருத்துவ சீட்டுக்களை பெற்றார்கள்? என்பதுடன் NEET தேர்விற்கு பின்னர் இப்பொழுது எத்தனை தமிழக மாணவர்கள் AIQ வில் எத்தனை பேர் மருத்துவ சீட்டுக்களை பெற்றார்கள்? என்று ஒப்பீடு செய்துருக்க வேண்டும்.

காரணம் AIQ விற்கு தமிழகம் இடம் கொடுக்கிறது. அதில் தமிழக மாணவர்கள் எத்தனை இடங்களை பெறுகிறார்கள் என்று ஆராய்வது முக்கியம் அல்லவா? மிக நிச்சயமாக தமிழக அரசு இதை செய்யாது. காரணம் NEET ற்கு முன்னர் ஒரு மாணவன் தமிழக மெடிக்கல் கவுன்சிலிங்கிற்காக தன்னுடைய +2 மதிப்பெண்களை அதிகமாக பெறவேண்டும். AIPMT தேர்விற்காக தனியாக படிக்க வேண்டும் All India Quota(AIQ) வில் தேர்வாக.

ஆனால் தற்பொழுது இவை இரண்டுக்கு மட்டும் இல்லை AIIMS JIPMER உள்ளிட்ட அணைத்து மருத்துவ இடங்களுக்கும் ஒரே தேர்வு NEET. ஆக மாணவர்கள் சேற்றில் ஒருகால் சோற்றில் ஒருகால் என்றில்லமால் ஒரே தேர்வுக்கு தயாராக முடிகிறது!

இது இயல்பாக தமிழக மாணவர்கள் AIQ வில் அதிக சீட்டுக்களை பெறுவதை உறுதி செய்யும். எனவே அந்த உண்மையை மறைக்க விரும்பிய AK ராஜன் குழு, தமிழக மாணவர்களின் இடங்கள் வட இந்திய மாணவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்ற திராவிட அரசியலுக்கு ஏற்றவாறு AK ராஜன் குழு இவ்வாறு கூறியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News