சி.ஏ பவுண்டேஷன் தேர்வு வைத்து பாஜகவை விமர்சிக்க நினைத்த திமுக:அவர்கள் முயற்சியை தோற்கடித்த Dr.SG சூர்யா!
By : Sushmitha
தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சேட்டட் அக்கவுண்டன்ஸ் ஆஃப் இந்தியா அதன் பவுண்டேஷன் தேர்வுக்கான தேதிகளை அறிவித்தது. இதற்கு திமுகவின் மாணவர் அணி தலைவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழர் விரோத ஒன்றிய பாஜக அரசுதமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை நடத்துகிறது ஒன்றிய அரசு தீபாவளி அன்று தேர்வு நடத்துவீர்களா என்று கேள்வி எழுப்பி பாஜகவை விமர்சிக்கலாம் என நினைத்தார்
ஆனால் இவரின் இந்த கேள்விக்கு பாஜக பொதுச்செயலாளர் SG சூர்யா சிஏ பவுண்டேஷன் தேர்வு நடைபெறும் நாளில் தமிழகத்தில் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாள் மகர சங்கராந்தி வடக்கில் லோஹ்ரி உ.பி.யில் கிச்சடி குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி மற்றும் ஹரியானா மற்றும் பஞ்சாபில் வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என கொண்டாடப்படுகிறது எனவே பொங்கல் என்பது தமிழ்நாட்டு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகையாகும் உங்கள் வேடிக்கையான கோட்பாட்டின்படி பாஜக அனைத்து மாநிலங்களுக்கும் எதிரானதா
இரண்டாவதாக சி.ஏ தேர்வுகளுக்கான தேதிகள் ஒரு சுயாதீனமான சட்டப்பூர்வ அமைப்பான தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சேர்ட்டட் அக்கவுண்டென்ஸ் ஆப் இந்தியா மூலம் தீர்மானிக்கப்படுகின்றன நிதி அமைச்சகத்தால் அல்ல
மூன்றாவதாக தொழில்முறை பாடத் தேர்வுகளுக்கு ஏன் இத்தகைய விடுமுறைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது தொழில் வல்லுநர்களுக்கு மட்டுமே தெரியும் எடுத்துக்காட்டாக நான் ஒரு பயிற்சி நிறுவன செயலாளராக இருக்கிறேன் மற்றும் எனது மாணவர் நாட்களில் எனது அனைத்து சி.எஸ் தேர்வுகளும் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு விடுமுறை வரை நடந்தன இதனால் ஐ.சி.எஸ்.ஐ புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸுக்கு எதிரானது என்று அர்த்தமா வேடிக்கை திமுக தோழர்களே என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார்
மேலும் சூர்யா அவர்களின் பதிவை மறு பதிவிட்டு சரியாகவும் விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா அவர்களேஎதில பார்த்தாலும் எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி ப்ரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
ஏற்கனவே நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ படிப்பை கலைக்கிறது அதுவும் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பை நீட் தேர்வு தடுக்கிறது என தொடர்ச்சியான கருத்துக்களை கூறி வருகிறது திமுக ஆனால் சமீப காலமாக நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண்களை பெற்ற தேர்ச்சி பெறுகின்றனர் அதிலும் திமுக யாருக்கு இந்த தேர்வு மிகவும் கடினம் மருத்துவக் கனவிற்கு தடையை போடுகிறது என்று கூறியதோ அவர்கள் தான் நீட் தேர்வு மூலம் மருத்துவ கனவை நிறைவேற்றி வருகின்றனர்
அதன்படி நீட் தேர்வு குறித்து மாணவர்களின் கருத்து எவ்வளவு முக்கியமோ அதே போன்று தான் பொங்கல் பண்டிகையில் வருகின்ற சி.ஏ பவுண்டேஷன் தேர்வும் மாணவர்களுக்கு உரியது அதனால் மாணவர்கள் இது குறித்த கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கூறியுள்ளார்