Kathir News
Begin typing your search above and press return to search.

ரெடியாகும் அந்த முக்கிய ஆவணம்.... செந்தில்பாலாஜிக்கு அடுத்த இடமா பொன்முடிக்கு...? நெருங்கிய ED

ரெடியாகும் அந்த முக்கிய ஆவணம்.... செந்தில்பாலாஜிக்கு அடுத்த இடமா பொன்முடிக்கு...? நெருங்கிய ED

Mohan RajBy : Mohan Raj

  |  3 Dec 2023 6:40 AM GMT

விரைவில் குற்ற பத்திரிக்கை.... பொன்முடி விவகாரத்தில் வேகம் எடுக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கை...

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொழுது விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடியின் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தை நாடியது அமைச்சர் பொன்முடி தரப்பு. ஆனால் செம்மண் வெட்டி எடுக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்பாராத விதமாக சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை அந்த வழக்கில் நுழைந்தது.

அப்படி அமலாக்கத்துறை நுழைந்ததன் காரணமாக கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி 9 இடங்களில் அதிரடியாக ரெய்டில் இறங்கியது, அமலாக்கத்துறை விழுப்புரம் மற்றும் சென்னையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு உட்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தியதை தொடர்ந்து கணக்கில் வராத 81 லட்சமும், 10 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டு கரன்சிகள், அயல்நாட்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது மட்டுமல்லாமல் 41 கோடி ரூபாய் பொன்முடியின் வங்கி கணக்கில் இருந்து அமலாக்கத்துறை முடக்கியது, அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை பொன்முடியையும் அவரது மகன் கௌதம சிகாமணியை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. ஜூலை 17, 18 தேதிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை.

இது மட்டுமல்லாமல் முதற்கட்ட விசாரணை முடிந்து பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை சேகரித்து வைத்துக்கொண்டு அந்த தகவல்களை பற்றி எல்லாம் விசாரிக்க கடந்த நவம்பர் 30ம் தேதி மீண்டும் அமைச்சர் பொன்முடிக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதன் காரணமாக அமைச்சர் பொன்முடி கடந்த 30ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் 4 மணி நேரம் அமைச்சர் பொன்முடியிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விசாரணை முடிந்து தற்போது இரு தினங்கள் ஆன நிலையில் இது குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன, அதாவது பொன்முடி விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் காலம் நெருங்கி விட்டது எனவும் இனி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் அது அடுத்தபடியாக பொன்முடி மீதான கைது நடவடிக்கை, வழக்கு போன்ற விவகாரத்துக்கு சென்று விடும் எனவும் இதன்காரணமாக பொன்முடி தரப்பு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று யோசித்து வருகின்றனர் என்ற தகவலையும் சில கூறுகின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்.

எப்படியோ இந்த டிசம்பருக்குள் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து பொன்முடி மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் கசிகிறது குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே அமலாக்க துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு எப்போது ஜாமீன் கிடைக்கும் என்று தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அடுத்தபடியாக அமைச்சர் பொன்முடி மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை வேகம் காட்டி வருவது நிச்சயம் செந்தில் பாலாஜிக்கு நடந்தது போன்று பொன்முடிக்கும் ஏதாவது நடக்கும் என்ற விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படியும் இந்த செம்மண் வெட்டி எடுக்கப்பட்ட வழக்கில் நிச்சயம் அமலாக்கத்துறை பொன்முடிக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை தாக்கல் செய்யும், அதன் காரணமாக நடவடிக்கைகள் அதிக வீரியத்துடன் இருக்கிறது என்றும் வேறு சில தகவல்கள் கசிகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News