Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவின் திட்டத்தை சுக்குநூறாக உடைத்த டெல்லி G20: ஆசிய நாடுகளை ஆக்கிரமிக்க பார்த்த சீனாவுக்கு வேட்டு - ஓர் அலசல்!

சீனாவின் திட்டத்தை சுக்குநூறாக உடைத்த டெல்லி G20: ஆசிய நாடுகளை ஆக்கிரமிக்க பார்த்த சீனாவுக்கு வேட்டு - ஓர் அலசல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Sep 2023 3:54 AM GMT

The Belt and Road Initiative என்ற தந்திரமான திட்டத்தை சீனா செயல்படுத்தி வந்தது. ஒரு தனி நாடு செயல்படுத்த போகும் மிகப்பெரிய திட்டமாக இந்த The Belt and Road Initiative கருதப்படுகிறது. இதனை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக இந்தியாவின் நடந்த ஜி20 மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கு முன் திட்டத்தின் பிண்ணணி பற்றி பார்ப்போம்.

அப்படி என்ன இருக்கிறது இந்த திட்டத்தில்?

உலகம் முழுக்க இருக்கும் நாடுகளை சீனாவுடன் இணைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். 2013ல் அறிவிக்கப்பட்டது. 160 நாடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் கனவு திட்டம் என அந்நாட்டு மக்கள் சொல்கின்றனர். இதுவாகும். The Belt and Road Initiative என்ற பெயரில் இருக்கும் தி பெல்ட் என்பது உலகம் முழுக்க சீனா அமைக்க உள்ள சாலைகளை குறிக்கிறது. ரோட் என்பது உலகம் முழுக்க சீனா கடல் வழியாக ஏற்படுத்த உள்ள கடல் போக்குவரத்தை குறிக்கிறது. இந்த திட்டம் சீனா அரசியலமைப்பில் ஒரு அங்கமாக 2017ல் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் உலகில் இருக்கும் நாடுகளின் பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சாலைகள் அமைத்து சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும்.

மறைந்து இருக்கும் உள்நோக்கம்

இந்தியா உலகம் முழுவதையும் தனது குடும்பமாக பார்க்கிறது என பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் சீனா பிற நாடுகளுடனான உறவையும் தந்திரமாக பார்க்கிறது. முதலில் The Belt and Road Initiative திட்டத்திற்கு One Belt One Road Strategy என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இதில் இருக்கும் ஸ்டிரேட்டஜி என்ற வார்த்தை பல நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதேபோல் ஒன் என்ற வார்த்தையும் பல நாடுகளுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதனை கண்டு பயந்த சீனா The Belt and Road Initiative என திட்டத்தின் பெயரை மாற்றி உள்ளது.

சீனாவுக்கு கிடைக்கப்போகும் ஆதாயம்

உலக நாடுகள் அனைத்தையும் சீனாவோடு இணைப்பது திட்டத்தின் முதன்மை நோக்கம் என்றாலும், பின்னால் பல காரணங்கள் மறைந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக உலகம் முழுக்க இருக்கும் சந்தையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர சீனா நினைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் போக்குவரத்து தடத்தை கொண்டு சீன பொருட்களை உலகம் முழுக்க தடையின்றி ஏற்றுமதி செய்யும். பொருளாதார தேவை மூலம் உலகை சீனாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவது முக்கிய நோக்கமாகும். இந்த திட்டம் மூலம் உலகின் 60 சதவிகித மக்கள் இணைக்கப்படுவார்கள். உலகின் மொத்த பொருளாதாரத்தில் 35 சீனா கட்டுப்பாட்டின் கீழ் வரும். 75 சதவிகித கடல் ஏற்றுமதி இறக்குமதி போக்குவரத்து சீனாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும். இதனை மனத்தில் வைத்தே காய் நகர்த்தி வருகிறது. 2049 ஆம் ஆண்டில் இந்த திட்டம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நூற்றாண்டை சீனாவின் பிடியில் இருக்க வைக்க கணக்கு போட்டு எல்லாம் நடக்கிறது.

எல்லா வழியிலும் சுற்றி வளைக்கும்

The Belt and Road Initiative திட்டத்தை சீனா மொத்தமாக மூன்று விதமாக பிரிக்கிறது.

Silk Road Economic Belt - இது சீனா சார்பாக உலகில் சாலை வழியாக போடப்பட உள்ள போக்குவரத்து பாதைகள் ஆகும். இதன் மூலம் ஆசியாவில் உள்ள முக்கால்வாசி நாடுகளை இணைக்கும்.

Maritime Silk Road - ஆசியா மட்டுமின்றி மற்ற கண்டங்களில் உள்ள நாடுகளை சீனாவுடன் கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம்

Ice Silk Road - இது சீனாவையும் ஆர்டிக் கடல் பகுதியில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் திட்டம். ரஷ்யா - சீனா இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்தியா கொடுத்த டிவிஸ்ட்

சீனாவின் The Belt and Road Initiative திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சி மாநாட்டில் உள்கட்டமைப்பு ஒப்பந்தம் போட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வளைகுடா மற்றும் அரபு நாடுகளை ரயில்வே மூலம் இணைக்கும் விதமாகவும், ஜி 20 கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளை ரயில் மூலம் இணைக்கும் விதமாகவும், மற்ற நாடுகளை கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் விதமாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது. னாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக இந்தியா புதிய கட்டமைப்பு திட்டம் ஒன்றை ஜி 20 மாநாட்டில் உருவாக்கி உள்ளது. இதனை தொடர்ந்து சீனாவின் திட்டத்தில் இருந்து வெளியேற இத்தாலி திட்டமிட்டுள்ளது. இவ்வளவு நாள் உலகை அடக்கி ஆள சீனா எடுத்து வந்த முயற்சிகளை ஒரே ஒரு ஜி20 மாநாடு மூலம் இந்தியா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இனி வேறு விதமாக அந்த திட்டத்தை சீனா செயல்படுத்த நினைத்தாலும், இந்தியாவை எதிர்த்து எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து இருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News