Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க பரப்பும் பொய்யுரையும்! RSS உண்மை முகமும்! வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்ட ரகசியம்!

தி.மு.க பரப்பும் பொய்யுரையும்! RSS உண்மை முகமும்! வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்ட ரகசியம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Sep 2023 1:00 AM GMT

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் எனப்படும் RSS இயக்கம் இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு ஆகும். இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கே. பி. ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ஆகியோரால் நிறுவப்பட்டது. சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதாகும்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும், மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம், மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம், மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம்சேவாக் சங்கம் என்ற பெயரில் இயங்குகின்றது.

முக்கியக் கொள்கை கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற முழு மனிதப்பற்றைக் கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளிப்பது தேசத்துக்கு சேவை செய்வதை பாரத மாதா சேவை செய்வதாகக் கொண்டு இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பது. ஆர்.எஸ்.எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை. அதன் கொள்கையை ஒற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும்.

எந்த கட்டுப்பாடும் இல்லை

ஆர் எஸ் எஸ் அமைப்பில் உறுப்பினரான சேர எவ்வித நடைமுறையும் இல்லை. உறுப்பினர் கட்டணம், அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. தன்னார்வலர்கள் அருகில் உள்ள ஆர்எஸ்எஸ் கிளைக்குசென்று தானாக உறுப்பினராக இணைந்து கொள்ள வேண்டியது தான். இவ்வமைப்பில் உறுப்பினர்களின் விவரங்கள் குறித்துக் கொள்ளப்படுவதில்லை. ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் பயிற்சியின் போது வெள்ளை நிற சட்டை, காக்கி நிற அரைக்கால் டவுசர் அணிந்து இருப்பர். தற்போது காக்கி நிற அரைக்கால் டவுசருக்கு பதிலாக பழுப்பு நிற முழுக்கால் டவுசர் அணிய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் சர்சங்கசாலக் என்ற பெயரில் தேசியத் தலைவரும் மற்றும் பொதுச் செயலாளர் தலைமையில் அமைப்பு நிர்வாகிக்கப்படுகிறது. மாநில, மாவட்ட மற்றும் கிளைகள் அளவில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் தலைமையில் அமைப்பு செயல்படுகிறது.

குரு பூர்ணிமா அன்று மட்டும் உறுப்பினர்கள் தரும் குரு காணிக்கையை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியா முழுவதும் இவ்வமைப்பில் 25 இலட்சம் முதல் 60 இலட்சம் உறுப்பினர்களும், 51,688 கிளைகளும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

பொது பணியில் RSS

சீனா, பாகிஸ்தான் நாடுகள் நம் மீது படையெடுத்த போது ராணுவ வீரர்களுக்கு துணை நின்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களை 1963 ம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் ராணுவத்தினருடன் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களையும் பங்கேற்கச் செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு முதற்கொண்டு சுனாமி தாக்குதல் வரை மக்கள் உயிர், உடமைகளை இழந்த போது அவர்களை காப்பாற்ற ஓடி சென்றவர்களும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களே.

கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்ட போது தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் மக்களின் மருத்துவம், உணவு தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன் களத்தில் நின்று பணியாற்றியதை நாடறியும். இதை தவிர நாடு முழுவதும் 1.50 லட்சம் நிரந்தர சேவைப் பணிகளை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சுய விளம்பரமின்றி தாய்நாட்டு சேவை என கடமையாற்றி வருகின்றனர்.

வெறுப்பு அரசியல் செய்யும் திமுக

திமுக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு குறிக்க உள்நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் கலவரத்தையும், அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலை செய்தவன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே. இதன் மூலம் புல்புல் சாவர்க்கரின் சதித்திட்டத்தை செயல்படுத்தி அமைதியின் வடிவமான மகாத்மா காந்தியை படுகொலை செய்து நாட்டின் அமைதியை சீர்குலைக்க தொடங்கியது பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் என்ற தலைப்பில் ஆதாரமற்ற குறிப்புகளோடு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

1948 ல் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட போது அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் மகாத்மா காந்தியடிகள் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு தடை விலக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க 1966 ல் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜே.எல். கபூர் கமிஷன், 407 ஆவணங்கள் 101 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை, இந்த கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தொடர்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதை மறைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2014ல் மும்பை தானேவில் நடந்த கூட்டத்தில் இதே குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 25.8.2016ல் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தி பேசவில்லை என்று கூறி பின்வாங்கினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி, அர்ஜீன்சிங் ஆகியோரும் இதே போல பேசி, பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். ஆனால் திமுக தொடர்ந்து இதை தவறை செய்து வருகிறது.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நம்பும் திமுகவின் ஐடி விங்க் தற்போது விஷமத்தனத்தோடு மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர் எஸ் எஸ் அமைப்பை தொடர்புபடுத்தியுள்ளதோடு, ஜனநாயக முறையில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஆர் எஸ் எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News