பொறுக்கிகளின் கூடாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி..! SG சூர்யா கடும் தாக்கு....!

தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரின் டார்ச்சர் காரணமாக திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதும் தெரியவந்து இருக்கிறது. அதன் காரணமாக தற்பொழுது அவருடைய குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து இருக்கிறது. திருமணம் ஆனவர் என்று உண்மை தெரிந்த பிறக்கும் காதல் வலை வீசி பணத்திற்காக அவருடன் நெருக்கமாக பழகி பின்னர் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அந்த பெண்ணை திசை திருப்பி இறுதியில் தற்கொலை வரை தூண்டி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். அது மட்டும் கிடையாது.
இதைப்பற்றி பெண் தரப்பில் உள்ள பெற்றோர் கூறும் பொழுது, தன்னுடைய பெண் இப்படி ஆனதற்கு முக்கிய காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்தான் என்று அவருடைய பெற்றோரும் கதறல்களையும், குமரல்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஒரு செய்தி தான் தற்போது தமிழகத்தில் பெரும் பேச்சு பொருளாக இருக்கிறது. அதிகமாக திருமணமான பெண்களை குறி வைத்து பணத்திற்காக அவர்களுடன் பழகி பின்னர் அவர்களை தற்கொலைக்கு தூண்டுவது சகஜமாகி வருகிறது என செய்திகள் அடிபடுகின்றன.
மலை நகர் பகுதியில் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் பவித்ரா. இவர்தான் தற்போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கோவிந்தராஜ் கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்து வந்திருக்கிறார். இவருடைய நிறுவனத்தில் வேலை செய்தவர் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர். இவர் தன்னுடைய மகளுடன் நெருக்கமாக பழகுவதை அறிந்து கோவிந்தராஜ் 2016 ஆம் ஆண்டு தன்னுடைய மகளுக்கு நெருங்கி சொந்தகார மாப்பிள்ளை ஒருவரை திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
இவருக்குத் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தையின் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் இவருடன் நெருங்கி பழகி பணத்திற்காக இவரை எப்படியாவது தன் பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழ்வாணன் தீவிரமாக முயற்சி செய்து வந்தார்.
பின்னர் இறுதியாக குடும்பத்தை விட்டு அந்தப் பெண் தன்னுடைய காதலரான விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருடன் நான்கு மாதங்களாக தனியாக வசித்து வந்தார். தன்னுடைய காதலர் தன் காதலுக்காக தான் தன்னை வர சொல்லி இருக்கிறார் என்று நம்பிய பவித்ரா. பிறகுதான் உண்மையை அறிந்து கொண்டு இருந்தார். பத்து லட்சம் பணம் கேட்டு அவரை மிரட்டி இருக்கிறார் காதலர்.
இதன் காரணமாக இவர் தன்னுடைய தந்தையை தொடர்பு கொண்டு நான் வீட்டிற்கு திரும்ப வந்து விடுகிறேன். ஒரு வாரம் டைம் கொடுக்க சொல்லி கேட்டிருக்கிறார். இந்நிலையில் திடீர் அவர் தூக்கில் போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இது கொடுத்து பெண்ணின் தந்தை கூறும் பொழுது தமிழ்வாணன் பின்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அவருக்கு உதவி செய்வதாகவும் அதன் காரணமாக தான் அவர் இந்த அளவிற்கு தைரியமாக சமூகத்தில் செயல்படுவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுபற்றி பாஜக மாநில செயலாளர் SG சூர்யா அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து ஒன்று தெரிவித்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, "பொறுக்கிகளின் கூடாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பொம்மை முதல்வரின் நீதியும் கிடைக்க வாய்ப்பில்லை. தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஏமாந்து மீண்டும் வாக்களித்து தங்கள் தலைகளில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்ட தமிழர்கள்" என்று தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்து இருக்கிறார்.