Kathir News
Begin typing your search above and press return to search.

தெரியவில்லை என்றால் நாங்கள் வந்து காத்துக்கொடுக்கிறோம்...! முதல்வருக்கு SG சூர்யா கொடுத்த தரமான பதிலடி...!

தெரியவில்லை என்றால் நாங்கள் வந்து காத்துக்கொடுக்கிறோம்...! முதல்வருக்கு SG சூர்யா கொடுத்த தரமான பதிலடி...!
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 Sept 2023 8:38 PM IST

இப்படி பொய் சொல்ல உங்களுக்கே கூச்சமா இல்லையா முதல்வர்? எஸ் ஜி சூர்யாவின் தரமான பதிலடி!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று வருடங்கள் ஆகின்றன ஆனால் 2021 தேர்தல் நடக்கும் சமயத்தில் திமுக தரப்பில் தேர்தல் வாக்குறுதிகளாக மொத்தம் 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது, இந்த 505 வாக்குறுதிகள் அவ்வப்போது சில நிறைவேற்றப்பட்டாலும் பல நிறைவேற்றப்படவில்லை என்ற குறை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டுவிட்டது எனக் கூறினார். இது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, மேலும் பல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

505 வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் எப்படி முதல்வர் 99 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார் என கூறலாம்? ஒருவேளை முதல்வர் பொய்க் கூறுகிறாரா? அல்லது முதல்வருக்கே தெரியவில்லையா! என்பது போன்ற பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் பாஜகவின் மாநில செயலாளர். எஸ்.ஜி சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் சூர்யா குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழக முதல்வர் ஐயா திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். “தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டுள்ளது!” என நீங்கள் அறிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, மக்களை ஏமாற்றும் வேலையை முதலில் தாங்கள் நிறுத்த வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அப்பட்ட பொய்யை மக்களுக்கு வெட்டவெளிச்சமாக்க நீங்கள் அறிவித்து நிறைவேற்றப்படாத சில வாக்குறுதிகளை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

- வேலையில்லா பட்டதாரிகள் குறு தொழில் தொடங்க ₹20 லட்சம் வரை கடன்

- சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும்

- பெட்ரோல் ₹5, டீசல் ₹4 குறைக்கப்படும்.

- தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்

- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 உரிமைத் தொகை

- பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்கு தீர்வு.

- மகளிர் பேறுகால உதவித்தொகை ₹24,000-ஆக உயர்வு

- பள்ளியில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

- மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள்

- பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்குப் பால் வழங்கப்படும்

- கூட்டுறவு நகைக் கடன் 5 பவுன் வரை தள்ளுபடி; மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி

- வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம்

- தி.மு.க தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற தனி அமைச்சகம்

- நீட் தேர்வு ரத்து

- தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு

- நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள்

- சிறு, குறு விசாயிகளின் மின்மோட்டார் வாங்க ₹10,000 மானியம்

- கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்

- ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை, உளுந்தம் பருப்பு கூடுதலாக வழங்கப்படும்

- பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்திரம் செய்யப்படுவார்கள்

- மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி

- சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக நியமனம்

- அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லெட்

- நெல் குவிண்டால் ஒன்றுக்கு ₹2,500 என உயர்த்தி வழங்கப்படும்

- மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படும்

இவை எல்லாம் மக்கள் நேரடியாக பயன்பெறும் திட்டங்கள் என தேர்தல் சமயத்தில் உங்கள் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டது. உங்கள் 99% என்ற கணக்குப்படி வைத்துக்கொண்டால் 505 வாக்குறுதிகளில் 499 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு மீதம் 6 வாக்குறுதிகள் மட்டுமே மீதம் இருக்கும். ஆனால் மேலே குறிப்பிட்டவைகள் அனைத்துமே நிறைவேற்றப்படவில்லை. உங்களுக்கு கணக்கு தெரியவில்லையா அல்லது உங்கள் நிர்வாகத்திற்கு கணக்கு தெரியவில்லையா?

தெரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். இல்லையேல் நாங்கள் கற்றுக்கொடுக்க வருகிறோம். அதை விட்டுவிட்டு இப்படி மக்களை ஏமாற்றுவது அழகல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர் நீங்கள் அதனை மறவாதீர்கள்..

உங்கள் பொய்களுக்கு மன்னிப்பு கேட்டு தயவுசெய்து, வாக்குறுதிகளை நிறைவேற்றும் வழியை பாருங்கள் மாண்புமிகு முதல்வரே...

இப்படி திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அனைத்தையும் குறிப்பிட்டு உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் முதல்வரே இல்லையேல் நாங்கள் கற்றுக் கொடுக்க வருகிறோம் அதை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றுவது அழகல்ல ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படி செய்யக்கூடாது என SG.சூர்யா வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News