Kathir News
Begin typing your search above and press return to search.

யோகி மாடல் VS திராவிட மாடல்.. தமிழ்நாட்டை ஒவர் டேக் பண்ணிய உத்திரபிரதேசம்..

யோகி மாடல் VS திராவிட மாடல்.. தமிழ்நாட்டை ஒவர் டேக் பண்ணிய உத்திரபிரதேசம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Dec 2023 1:36 AM GMT

தமிழ்நாட்டை முந்தி பொருளாதார வளர்ச்சியில் 2வது இடத்தைப் பிடித்து இருக்கிறது உத்தரப்பிரதேசம் மாநிலம். இனி வருங்காலத்தில் குறிப்பாக 2027 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் லட்சிய இலக்கை அடைவதற்கான முயற்சியிலும் உத்திரபிரதேச மாநில அரசாங்கம் களம் இறங்கி இருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை உத்தரப் பிரதேசம் வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. இந்த முடிவை குறித்து பிரபல ஆன்லைன் தளமான soic.in யில் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் தற்போது பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு, குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தை விஞ்சியுள்ளது.


இது குறித்து அதிகாரப்பூர்வமான வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, "உத்தரப் பிரதேசம் இப்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறிப்பிடத்தக்க 9.2% பங்கைக் கொண்டுள்ளது. 15.7 சதவீத பங்குகளுடன் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிராவிற்கு சற்று பின்னால் தன்னை நிலை நிறுத்துகிறது. இது முன்னர் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்த உத்தரப் பிரதேசத்திற்கு குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு (9.1%), குஜராத் (8.2%), மற்றும் மேற்கு வங்கம் (7.5%) போன்ற மாநிலங்களை விஞ்சியுள்ளது. கர்நாடகா (6.2%), ராஜஸ்தான் (5.5%), ஆந்திரப் பிரதேசம் (4.9%), மற்றும் மத்தியப் பிரதேசம் (4.6%) போன்ற மாநிலங்கள் உத்தரப் பிரதேசத்தை விட கணிசமாக பின்தங்கியுள்ளன.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், உத்தரப் பிரதேசம் கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆட்சிக் காலங்களில் இருந்த பல்வேறு குற்றங்கள் இப்போது ஒழிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு தொழில்துறை வேகமாக முன்னேறி வருகிறது. அது மட்டும் கிடையாது, உத்தரபிரதேசம் மாநிலம் தற்போது விரைவாக மற்றும் எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.


மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் முன்னேற்றங்கள் காரணமாக, ஜி.ஐ.எஸ் 2023 மூலம் மாநிலம் ₹ 40 லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளது. அவை விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும். தற்போது 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. வங்கிகளின் கடன் மற்றும் வைப்பு விகிதம் 42-43% லிருந்து 56% ஆக உயர்ந்துள்ளது, அதை 60% ஆக அதிகரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. உத்தரபிரதேசம் வருவாய் உபரி மாநிலமாக மாறியுள்ளது.


அதன் மக்கள் தொகையில் 56 சதவீதம் பேர் வேலை செய்கிறார்கள். எனவே உத்தர பிரதேசத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் சிறப்பான வழிகாட்டுதலின்படி பல்வேறு துறைகளில் சாதனைகளை அடைய செய்து இருக்கிறார். இந்த சாதனைகள் உத்திர பிரதேசத்தை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றுவது மட்டுமல்லாமல், மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவதற்கும் பங்களிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜக தலைமையிலான யோகி மாடல் தற்பொழுது உத்தரப் பிரதேசத்தை பொருளாதார வளர்ச்சிகளில் மட்டுமில்லாது பல்வேறு துறைகளிலும் முன்னேற்றிக் கொண்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News