காங்கிரஸ் Vs பா.ஜ.க ஆட்சியில் வந்த மருத்துவக் கல்லூரிகள்.. வெறும் 10 ஆண்டுகளில் சாதனை படைத்த மோடி அரசு..

விரைவில் தமிழ்நாட்டில் புதியதாக 6 மருத்துவ கல்லூரிகள்:
தமிழ்நாட்டில் தற்போது புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் 2024, மே 6-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டில் புதியதாக 6 மருத்துவ கல்லூரிகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பு மேலும் வலுவடைய உள்ளது. அதோடு, உயர் சிகிச்சைக்காக கிராமப்புற மக்கள், சென்னை போன்ற பெருநகரங்களை நோக்கி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் விரைவில் அமைக்க இருக்கும் தகவல் தமிழக கிராமப்புற மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்:
6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளன. பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் இரண்டாவது கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 35 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், மேலும் 6 கல்லூரிகள் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. இதுதவிர, மேலும் 2 அரசு பல்மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளும், 1 அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியும், 1 அரசு யூனானி மருத்துவக் கல்லூரியும், 1 அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும், 1 அரசு யோகா மருத்துவக் கல்லூரியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 8,500-ஐ தாண்டிவிட்டது:
தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,225 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,300 இடங்களும் இருக்கின்றன. மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை, 2011-ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சமாக இருந்தது. தற்போது சுமார் அது எட்டு கோடியை கடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளின் படி, தற்போது தமிழ்நாட்டில் சுமார் 8,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் வரை இருக்கலாம். ஆனால், தற்போதே அந்த எண்ணிக்கை 8,500-ஐ தாண்டிவிட்டது.
காங்கிரஸ் VS பா.ஜ.க அரசு கொண்டு வந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை:
இந்தியாவில் காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 387 மருத்துவ கல்லூரிகள், ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் 51,000 எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான இடங்களை கொண்டு வந்து இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் 319 மருத்துவக் கல்லூரிகள், 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் 56,000 எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான இடங்களை கொண்டு வந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் சாதித்து இருக்கிறது.
கடைசிக் குடிமகனுக்கும் நல்ல சுகாதார சேவை:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு 15 புதிய மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளது. மேலும் ஆறு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் அமைப்பதற்கான அனுமதியையும் மத்திய அரசு வழங்கி இருக்கிறது. அதோடு மருத்துவ படிப்புகளை ஏழை, மாணவர்களுக்கு உதவும் வழியில் பிராந்திய(தாய்) மொழியில் கொண்டு வந்ததும் மோடி அரசு தான். 2014-ல் மோடி பிரதமரான போது, "நாட்டின் கடைசிக் குடிமகனுக்கும் நல்ல சுகாதார சேவைகளை வழங்குவோம் என்று உறுதிமொழி எடுத்தார். அதன் விளைவு இன்று கடந்த 10 ஆண்டுகளில் 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளன".
Input & Image courtesy: News