1,000 கிமீ கடந்து சாதனை படைக்கும் இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு:பிரதமர் 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்!
By : Sushmitha
ரூ12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்கள்
ரூ12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் தொடக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் திட்டங்களின் முக்கிய கவனம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதும் பயணத்தை எளிதாக்குவதும் ஆகும் சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலிலும் பிரதமர் பயணம் மேற்கொண்டார்
தில்லி-மீரட் போக்குவரத்தில் ஏற்படும் மாற்றம்
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் இன்று தில்லி-என்சிஆர் இந்திய அரசிடமிருந்து குறிப்பிடத்தக்க பரிசைப் பெற்றுள்ளது என்றும் இந்தியாவின் நகர்ப்புற இயக்கம் மேலும் விரிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார் மேலும் நமோ பாரத் ரயிலில் சாஹிபாபாத்தில் இருந்து நியூ அசோக் நகர் வரை பகலில் பயணம் செய்ததை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி வளர்ச்சியடைந்த இந்திய நகரங்களில் பொதுப் போக்குவரத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வகையில் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் பல இளைஞர்களுடன் உரையாடியதாகவும் நமோ பாரத் திட்டம் நிறைவேறியதும் தில்லி-மீரட் பாதையில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்
2014 இல் 248 கிமீ இன்று 752 கிமீ
அது மட்டுமின்றி 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு 248 கிலோமீட்டர்கள் மட்டுமே என்றும் அது வெறும் ஐந்து நகரங்களில் மட்டுமே இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 752 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய மெட்ரோ பாதைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார் மேலும் இன்று நாடு முழுவதும் 21 நகரங்களில் மெட்ரோ சேவைகள் செயல்படுகின்றன தற்போது 1,000 கிலோமீட்டர் மெட்ரோ வழித்தடங்கள் விரைவான வளர்ச்சியில் உள்ளன பத்தாண்டுகளுக்கு முன்பு உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் சுமார் ரூ 2 லட்சம் கோடியாக இருந்தது அது இப்போது ரூ 11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்
பின்னணி
பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையேயான சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோமீட்டர் நீளமுள்ள தில்லி-காஸியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தை பிரதமர் திறந்து வைத்தார் சே இந்த தொடக்க விழாவின் மூலம் தில்லி தனது முதல் நமோ பாரத் இணைப்பைப் பெறுகிறது இது தில்லி மற்றும் மீரட் இடையேயான பயணத்தை கணிசமாக எளிதாக்கும் மேலும் இணையற்ற பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் அதிவேக மற்றும் வசதியான பயணம் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும்
தில்லி மெட்ரோவின் ஜனக்புரி முதல் கிருஷ்ணா பூங்கா வரையிலான நான்காம் கட்டம் வரையிலான 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார் தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் முதல் பகுதி இதுவாகும் மேற்கு தில்லியின் கிருஷ்ணா பூங்கா விகாஸ்புரியின் சில பகுதிகள் ஜனக்புரி போன்ற பகுதிகள் பயனடையும்