Kathir News
Begin typing your search above and press return to search.

ஆண்டின் மிக மோசமான நாள் கிறிஸ்துமஸ் - சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுவது என்ன.?

ஆண்டின் மிக மோசமான நாள் கிறிஸ்துமஸ் - சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுவது என்ன.?

ஆண்டின் மிக மோசமான நாள் கிறிஸ்துமஸ் - சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுவது என்ன.?

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  23 Dec 2020 6:30 AM GMT

முன்பு மின்சார விநியோகம் தடைபடும் போது இருள் நீக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மெழுகுவர்த்திகள் தற்போது ஆடம்பர மற்றும் அலங்காரப் பொருளாக மாறி விட்டன. அதிலும் இப்போது நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்கள் கூட மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் என்ற பெயரில் கிறிஸ்துமஸ் கொண்டாடத் தொடங்கிய பின்னர் பார்ட்டிகளிலும், பரிசுப் பொருளாகவும் வேறு பயன்படுத்தப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் வாங்கும் முதல் பொருள் மெழுகுவர்த்தியாகத் தான் இருக்கும். வீடுகளில் மட்டுமன்றி தேவாலயங்களிலும் எண்ணற்ற மெழுகுவர்த்திகள் கொளுத்தப்படும். அதற்கு இப்போது என்ன எண்கிறீர்களா? மெழுகுவர்த்தி ஏற்றுவதால் மாசு ஏற்படுகிறது என்பது தான். கிறிஸ்துமஸ் நாள் அன்று உலகம் முழுவதும் 300 கோடி மெழுகுவர்த்திகள் எரிக்கப்படுகின்றன.

பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் பாரபினைப் பயன்படுத்தித் தான் மெழுகுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. பாரபின் ஒரு துணைப் பொருளாகக் கிடைத்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாற உலக நாடுகள் முயற்சித்துக் கொண்டு இருக்கும் போது மெழுகுவர்த்திகளின் தேவை அதிகரிப்பது பெட்ரோலியத்தின் பயன்பாட்டையும் அதிகரிக்கிறது.

மெழுகுவர்த்தியை எரிக்கும் போது வெப்பமயமாதலை ஊக்குவிக்கும் greenhouse gas மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகிய வாயுக்களும் வெளியாகின்றன. நறுமண மெழுகுவர்த்திகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. பார்ட்டிகள் கொண்டாட்டங்கள் மட்டுமல்லாது தனிப்பட்ட விதத்தில் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய மெழுகுவர்த்திகளை பரிசுப் பொருளாக அளிக்கும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால் இவற்றில் கார்சினோஜெனிக் எனப்படும் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப் பொருட்களான பென்சீன், டொலுவீன் ஆகியவை உள்ளன. இவற்றை எரிப்பதால் ஹைட்ரோகார்பன்கள் வெளியாகின்றன. இந்த ஹைட்ரோகார்பன்களை வெளியே எடுக்கக் கூடாது என்று தான் நமது காவிரி டெல்டா விவசாயிகள் போராடினர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மெழுகுவர்த்தியை பேக்கேஜ் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி உள்ளிட்டவையும் மறுசுழற்சி செய்யப்படாமல் அப்படியே குப்பையில் வீசப்படுவதால் நில மாசுபாடு ஏற்படுகிறது. நறுமண மெழுகுவர்த்திகளை‌ எரிப்பதால் வெளிப்படும் வேதிப் பொருட்கள் ஆஸ்த்துமா மற்றும் எக்சீமா போன்ற தோல் வியாதிகளை ஏற்படுத்துகிறது.

மெழுகுவர்த்தியில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகளும், எரிப்பதால் வெளிவரும் கரியும் காற்றில் கலந்து நுரையீரலை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெளிநாடுகளில் அதிகம் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையான கிறிஸ்துமஸ் தினம் தான் ஆண்டிலேயே 'மாசு மிக்க நாள்', the most toxic day என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு மெழுகுவர்த்தியை எரிக்க சில நிமிடங்கள், அதிக பட்சம் சில மணி நேரங்கள் ஆகலாம். ஆனால் அதன் தாக்கம் 1000 ஆண்டுகளுக்கு தொடரும். தூக்கி எறியப்படும் மிச்சம் மீதி மெழுகுவர்த்திகள் 1000 ஆண்டானாலும் அப்படியே இருந்து நிலத்தை மாசுபடுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இந்தியாவில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள் சிறுபான்மையினர் தானே" என்று நினைப்பவர்களுக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு மறுநாள் இருந்ததைப் போலவே, கிறிஸ்துமஸ் அன்றும் காற்று மாசுபாடு 'மிக மோசம்', severe என்ற அளவில் இருந்தது.

References

https://www.earth.com/news/christmas-toxic-environmental-day-year/

https://www.openaccessgovernment.org/candles-head-to-landfill/56554/

https://www.google.com/amp/s/zeenews.india.com/india/delhis-polluted-air-on-christmas-almost-as-bad-as-day-after-diwali-2165835.html/amp

Next Story
கதிர் தொகுப்பு
Trending News