Kathir News
Begin typing your search above and press return to search.

10,000 சர்ச்சுகள் இலக்கு! இது வரை 11 லட்சம் பேர் மத மாற்றம் - அதிர்ச்சி தகவல்கள்!

10,000 சர்ச்சுகள் இலக்கு! இது வரை 11 லட்சம் பேர் மத மாற்றம் - அதிர்ச்சி தகவல்கள்!

10,000 சர்ச்சுகள் இலக்கு! இது வரை 11 லட்சம் பேர் மத மாற்றம் - அதிர்ச்சி தகவல்கள்!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  27 Feb 2021 10:29 AM GMT

மாரனாதா இன்டர்நேஷனல் என்ற மிஷனரி அமைப்பு இந்தியாவில் உள்ள அதன் கிளைக்கு கிட்டத்தட்ட ₹62 கோடி நிதி அளித்து இந்து மக்களை தீவிரமாக மதம் மாற்றி வரும்‌ அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டு நிதி மூலம் இந்தியாவில் நடக்கும் மத மாற்ற செயல்பாடுகளையும் அதில் நடக்கும் முறைகேடுகளையும் வெளிப்படுத்தி வரும் Legal Rights Observatory அமைப்பு மாரனாதா அமைப்பு குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

மாரனாதா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் டான் நோபிள் 1998ஆம் ஆண்டு இந்தியாவில் ஊழியம் செய்ய‌ வேண்டும் என்ற நோக்கத்துடன் ரான் வாட்ஸ் என்ற அட்வென்டிஸ்ட் பிரிவு மதபோதகரை சந்தித்துள்ளார். அப்போது ரான் வாட்ஸ் "எங்களுக்கு 10000 சரச்சுக்ளைக் கட்டிக் கொடுங்கள்" என்று நோபிளிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது நோபிளை அசந்து போகச் செய்து நிலையில், தான் பத்து லட்சம் பேரை மதம் மாற்ற விரும்புவதாகவும் அதற்கு 10,000 சர்ச்சுகள் தேவை என்றும் ரான் வாட்ஸ் விளக்கியுள்ளார்.

அப்போது தொடங்கிய மத மாற்றப் பணி இன்று வரை தொடர்கிறது. இடையில் செயல்பாடுகள் தீவிரமடைந்ததால் இந்தியாவில் ஒரு கிளையை நிறுவி அலுவலகத்தை அமைத்தது மாரனாதா இன்டர்நேஷனல் அமைப்பு. 22 ஆண்டுகள் ஆன போதும் மாரனாதா அமைப்பு இந்தியாவை விட்டபாடில்லை. இது வரை இந்த அமைப்பு வழங்கிய நன்கொடையில் இந்தியாவில் 2,000 சர்ச்சுகள் நிறுவப்பட்டுள்ளன.

10,000 சர்ச்சுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கு இன்னும் நிறைவேறாத போதும் 2,000 சர்ச்சுகள் இருக்கும் போதே அட்வென்டிஸ்ட் திருச்சபையினர் 11 லட்சம் பேரை மதம் மாற்றி விட்டனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மத மாற்றம் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக ஹரியானாவில் இரண்டு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட அட்வென்டிஸ்ட் திருச்சபை ஒன்று தற்போது 1500 பேர் இருப்பதாக தங்களது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்கள்.

அதே போன்று பழங்குடியினர் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாரனாதா அமைப்பு 46 சர்ச்சுகளை நிறுவியதாகவும் இப்போது அவை மேலும் 103 சர்ச்சுகளை நிறுவி இருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. ஆனால் சர்ச்சுகளை விடவும் மாரனாதா அமைப்பு இந்தியாவில் நிறுவிய பள்ளிகள் தான் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.

ஜார்க்கண்டில் மட்டும் இந்த அமைப்பு ஏழு பள்ளிகளை நிறுவி அதன் மூலம் 5000க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் 'மாற்றத்தை' ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளிகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தில் இருந்து விலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறுபான்மையினர் பள்ளி என்பதால் 50 லட்சம் வரை மத்திய அரசிடம் இருந்து நிதியும் பெறலாம்.

இன்னும் உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கும் இந்த கொரோனா சூழலிலும் இவர்கள் மதம் மாற்றுவதையோ, சர்ச் கட்டுவதையோ, பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதையோ நிறுத்தவில்லை. 'சமூக சேவைக்காக' என்று குறிப்பிட்டு FCRA மூலம் நிதி பெற்று விட்டு மத ரீதியான செயல்பாடுகளுக்கும் மத மாற்றத்துக்கும் பயன்படுத்தியதாக மாரனாதா இந்தியா அமைப்பு மீது மீது Legal Rights Observatory உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்து FCRA உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News