1500 பேர் ஒரே நேரத்தில் பகவத் கீதையை பாராயணம் செய்து அமெரிக்காவில் கின்னஸ் சாதனை
அமெரிக்காவில் 1500 மாணவர்கள் பகவத் கீதையை பாராயணம் செய்து சாதித்தது தற்போது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.
By : Mohan Raj
அமெரிக்காவில் 1500 மாணவர்கள் பகவத் கீதையை பாராயணம் செய்து சாதித்தது தற்போது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.
இந்து மத கலாச்சாரம் தற்பொழுது உலகின் பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் லண்டனில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் தான் தற்பொழுது அமெரிக்காவில் பகவத் கீதையை ஒரே நேரத்தில் 1500 மாணவர்கள் பாராயணம் செய்து புதிதாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாண தலைநகராக டால்க்ளாஸ் உள்ளது இங்கு கீதா சகஸ்ராலயா என்ற பெயரில் பகவத் கீதை பாராயணம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தான் பகவத் கீதையை சரளமாக படிக்கும் 700 பேருடன் 1500 மாணவர்கள் பங்கேற்றது பாராயணம் செய்தனர், இது கின்னஸ் சாதனையாக மாறியது பகவத்கீதை பாரணம் செய்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கிலிருந்து இந்த முயற்சி ஓராண்டாக மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.