சட்ட விரோத மதமாற்றங்களுக்கு 17 கோடி?- 'நார்த் ஈஸ்ட் நெட்ஒர்க் (NEN)' அமைப்பு மீது LRO புகார்! @LegalLro
By : Saffron Mom
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), அஸ்ஸாமை சேர்ந்த "நார்த் ஈஸ்ட் நெட்ஒர்க்" என்ற அமைப்பு 17 கோடி ரூபாயை வெளிநாட்டிலிருந்து நிதியாக பெற்றுள்ளது.
இந்த நன்கொடையாளர்களில் ஒருவரான Misereor என்ற ஜெர்மனியை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு, டெல்லி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு நிதி திரட்டிய HRLN என்ற வழக்கறிஞர் அமைப்புக்கு ஏற்கனவே நிதி வழங்கியர்கள் ஆவர். இது குறித்து LRO ஏற்கனவே கடந்த செப்டம்பரில் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
டெல்லி கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் காலிங் கோன்ஸ்லவ்ஸ் என்பவரின் HRLN வழக்கறிஞர் அமைப்பு(Human Rights Law Network), ஐரோப்பிய சர்ச்சுகளிடமிருந்து 50 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இந்த பணம் சட்டப்பூர்வமாக, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கலவரம் செய்தவர்கள்(Anti -CAA rioters ), ஷாகின் பாக்ஹ் 'போராளிகள்' ஆகியோருக்கு ஆதரவாக வாதாடப் பயன்படுத்தப்பட்டது. இதில் சாஹிரா சபூர் என்ற கர்ப்பிணியும் அடக்கம்.
இதற்காக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று இந்தியாவில் கலவரத்தை தூண்டி விட முயற்சிப்பதாக காலின் கைது செய்யப்பட வேண்டும் என்று LRO ஏற்கனவே கடந்த செப்டம்பரில் கேட்டுக்கொண்டது.
இவர்களுக்கு நிதி அளித்த முக்கியமான நான்கு ஐரோப்பிய கிறிஸ்தவ அமைப்புகளில் ஒன்றான இதே Misereor என்ற ஐரோப்பிய கத்தோலிக்க நிறுவனம்தான், இந்த "நார்த் ஈஸ்ட் நெட்ஒர்க்" டிற்கு நிதி வழங்கியுள்ளது.
மேலும் Misereor இந்திய-பிரெஞ்சு ரபேல் ஒப்பந்தத்தை தடுக்க முயற்சி செய்தது மட்டுமில்லாமல், NIA வின் தீவிரவாத குற்றம் சாட்டப்பட்ட ஸ்டான் ஸ்வாமிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது.
மற்றொரு நன்கொடையாளரான ஆக்சன் இன்டர்நேஷனல் 750 குடும்பங்களை ஒடிசாவில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றியதாக வெளிப்படையாக கொண்டாடினர். தங்களுடைய அனாதை இல்லத்தில் மதம் மாற்றப்பட்ட ஒரு சிறுவனின் பெயரையும் அறிவித்தனர்.
இது குறித்து LRO, உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.