Kathir News
Begin typing your search above and press return to search.

200 சர்ச்சுகள்! 17,000 பேர் மதமாற்றம்! வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தும் Bodo Baptist Church!

200 சர்ச்சுகள்! 17,000 பேர் மதமாற்றம்! வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தும் Bodo Baptist Church!

200 சர்ச்சுகள்! 17,000 பேர் மதமாற்றம்! வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தும் Bodo Baptist Church!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  17 Jan 2021 7:25 AM GMT

வெளிநாட்டு நிதியை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தும் NGOக்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்து வரும் Legal Rights Observatory (LRO) அமைப்பு, அசாமில் அமைந்துள்ள Boro Baptist Church Association (BBCA) என்ற கிறிஸ்தவ அமைப்பு வெளிநாட்டு நிதி மூலம் மத மாற்றம் செய்வதைக் கண்டுபிடித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நிதி பெற வழங்கப்படும் FCRA உரிமம் பெற்றுள்ள இந்த அமைப்பு, FCRA சட்ட விதிகளை மீறி நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. Australia and Compassion என்ற அடிப்படைவாத வெளிநாட்டு அமைப்பிடம் இருந்து நிதி பெற்று அதைப் பயன்படுத்தி போடோ இனத்தைச் சேர்ந்த 17,000 பூர்வகுடிகளை மதம் மாற்றியதாக தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இதற்காக ₹3.15 கோடி வெளிநாட்டு நிதி பெற்ற இந்த அமைப்பு அசாமில் 199 சர்ச்சுகளை நிறுவியுள்ளது. இதன் பொதுச்செயலாளர் மதபோதகர் அர்ஜுன் பசுமதரி நன்கொடை நிதியை அரசியல் செல்வாக்கை அடைய பய்னபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து இந்த அமைப்பைப்‌ பற்றி விரிவாக விசாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு LRO அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தைக் கொண்டாட என்று ₹35 லட்சம் நன்கொடை பெற்ற Boro Baptist Church Association அமைப்பு அதைப் பயன்படுத்தியதாகவே தெரியவில்லை. விழாக்கள் குறித்து புகைப்படங்கள் எதுவும் அவர்களது இணையதளத்திலோ சமூக ஊடக பக்கத்திலோ பதிவிடப்படவில்லை. எனவே அந்த ₹35 லட்ச ரூபாயை வேறு விதமாக பயன்படுத்தி இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

1927ஆம் ஆண்டு அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷனரி அமைப்பால் BBCA தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் Australian Baptist Missionary Society என்ற மற்றொரு மிஷனரி அமைப்பால் வளர்த்தெடுக்கப்பட்டது. அசாம் மாநிலத்தின் போடோலாந்து பகுதியில் உள்ள சிராங் மாவட்டத்தில் இந்த BBCA அமைந்துள்ளது. BBCA மிஷனரி அமைப்பு Baptist World Alliance, Global Interaction, Asian Pacific Baptist Federation, Seva Bharat, Missionaries Upholders Trust மற்றும் Tura Baptist Church உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுகிறது.

இதில் சேவா பாரத் அமைப்பின் மீது ஏற்கனவே புகார் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, ஒரு ஆண்டில் ₹18 கோடி ரூபாய் நிதி திரட்டி தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் ₹164 கோடி நிதி பெற்ற இந்த அமைப்புக்கு ஒரு இணையதள முகவரி கூட இல்லை.

Mission India-Michiganனில் இருந்து தான் பெரும்பான்மையான நிதி வந்துள்ளது. இதே அமைப்பு Letha Charitable Trust என்ற மற்றொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கும் FCRA வாயிலாக நிதி அனுப்பிக் கொண்டு உள்ளது. இந்த இரு அமைப்புகளும் DTK Hospitality & Tours Pvt. Ltd., Ashirwad Global Learning Centre, Ranga Reddy District, Hyderabad என்ற முகவரியில் தான் இயங்குகின்றன

இவற்றின் செயல்பாடுகள் என்ன என்பது பற்றி இந்த அமைப்புகள் வெளிப்படையாக எதுவும் குறிப்பிடுவதில்லை. ஆனால் நிதி அனுப்பும் Mission India-Michigan அமைப்பின் வருடாந்திர நிதியறிக்கையில் இருந்து அது என்னவாக இருக்க முடியும் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. டாக்டர்.சிரஞ்சீவி மற்றும் கமலா சிரஞ்சீவி என்பவர்கள் சேவா பாரத் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளனர்.

இவர்களுக்கு நன்கொடை அனுப்பும் Mission India-Michigan அமைப்பு, குழந்தைகளிடம் நற்செய்தி அறிவித்து அவர்கள் மூலம் அவர்களது பெற்றோரை அணுகுவது, படிப்பறிவு இல்லாத பெரியவர்களுக்கு பைபிள் மூலம் படிப்பு சொல்லிக் கொடுப்பது, சர்ச் பிளான்டிங் எனப்படும் புதுப்புது சர்ச்கள் நிறுவ இந்தியர்களுக்கு பயிற்சி அளிப்பது, அதற்கு தேவையான பொருளுதவி செய்வது ஆகிய பணிகளில் சேவா பாரத் மற்றும் Letha Charitable Trust ஈடுபடுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் இவ்வாறான செயல்பாடுகளுக்கு நிதி உதவி பெற Mission India-Michigan சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, உதவி கோருவோர் திருமணமானவராக இருத்தல் வேண்டும், ஒரு ஆண்டில் 200 பேரை மதம் மாற்ற வேண்டும், ஒரு ஆண்டில் 600 குடும்பங்களையாவது சந்திக்க(நற்செய்தி அறிவித்து மதமாற்ற முயற்சியில் ஈடுபடுவது) வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சேவா பாரத் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் கமலா சிரஞ்சீவி, வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவில் பெண்களுக்கு கொடுமை நடப்பதாக மிகைப்படுத்தப்பட்ட, தவறான தகவல்களை தெரிவிக்கிறார். இவ்வாறு கூட்டங்களில் பேசுவதையே உண்மை என்று மிஷனரி அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன. இது தான் இவர்களது நோக்கம்.

இத்தகைய பின்னணி கொண்ட அமைப்புடன் இணைந்து பணியாற்றும் BBCA மீதும் இப்போது LRO அமைப்பின் கழுகுப் பார்வை விழுந்துள்ளது. இரண்டு அமைப்புக்கள் குறித்தும் LRO அமைப்பு அளித்த புகார்களின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News