2022 ஈஷா மகா சிவராத்திரி: தமிழக மீடியாக்களால் கவர் செய்யப்படாத ஈஷா சிவன் பக்தர்கள்!
By : Thangavelu
கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றாக கூடி சிவனை வழிப்பட்டு வருகின்றனர். சத்குருவின் முன்னெடுப்பில் நடத்தப்படும் இந்த மகா சிவராத்திரி விழா மூலம் தான், நவீன மயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் மகா சிவராத்திரியின் மகத்துவம் பரவத் தொடங்கியுள்ளது.
உலகம் போற்றும் 'ஈஷா மகா சிவராத்திரி' விழாவை தமிழகத்தில் மட்டும் தமிழக மீடியாக்கள் பல பொய்களைப் பரப்பி தமிழக மக்களின் பார்வையை மாற்றி உள்ளனர்.
அதாவது ஈஷா மஹாசிவராத்திரி விழா என்பது, சத்குரு அவர்கள் செல்வந்தர்கள், வலதுசாரி அரசியல் புள்ளிகள் மற்றும் நடிகைகளுக்காக இந்த விழாவை நடத்துகிறார். என்பது போன்ற பிம்பத்தை தமிழக மீடியாக்கள் கட்டமைத்து வைத்துள்ளனர்.
அதே தமிழக மீடியாக்கள் ஈஷா வின் தீவிர சிவ பக்தர்களின் பக்தியை தமிழக மக்களிடம் வெளிக்காட்ட தயக்கம் காட்டுகின்றனர்.
நம் மனதை உருக்கும் பக்தி கொண்ட ஈஷா சிவ பக்தர்களை பற்றி இக் கட்டுரையில் காண்போம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா மையத்திற்கு சென்னையில் இருந்து பக்தர்கள் 'ஆதியோகி' தேரை இழுத்து வந்தனர். தேரை இழுத்து வந்தவர்களில் பெரும்பாலான பக்தர்கள் வயதானவர்களே. அவர்கள் சிவனை வழிப்படுவதற்காக விரதம் இருந்து மகா சிவராத்திரி தினத்தில் வருடம்தோறும் ஈஷா மையத்திற்கு வருகை தருவதாக கூறினர். இது பற்றி விஜயன் 64 என்ற வயதான சிவன் பக்தர் கூறியதாவது: சென்னையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி தேரை இழுத்துவர ஆரம்பித்து 27ம் தேதி கோவை ஈஷா மையத்தை வந்தடைந்தோம். இதற்காக 7 மாவட்டங்கள் 54 கிராமங்களை கடந்து வந்தோம்.
எனக்கு 64 வயதாகிறது நான் சத்குருவின் ஆசிர்வாதத்தில் இத்தனை கிலோ மீட்டராக நடந்து வருகின்றோம். இதுவரை 7 முறை ஈஷா மையத்திற்கு வந்து மகா சிவராத்திரியை கொண்டாடியுள்ளோம். ஈஷா மையத்திற்கு வருகை புரிந்து அதன் பின்னர் வெள்ளியங்கிரி மலைக்கு மேல் ஏறிச்சென்று சிவனின் ஆசியை பெற்று செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு அடுத்து நாகர்கோயிலில் இருந்து ஈஷா மையத்திற்கு ஒரு குடும்பம் தனியாக தேரை இழுத்து வந்திருந்தது. அதில் பெற்றோர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் இருந்தனர். அதில் வந்திருந்த சிறுவர்கள் கூறும்போது: நாங்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு குருபூஜை முடித்த பின்னர் தேரை இழுக்க ஆரம்பிப்போம். அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்போம். அதன் பின்னர் மீண்டும் தேரை இழுக்க ஆரம்பிப்போம் என்றார். மேலும், வெள்ளியங்கிரி மலைக்கு ஏறும்போது நாங்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஏறுவோம். கால் வலி என்று எதுவும் ஏற்படாது. சிவனின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு. இவ்வாறு சிறுவர்கள் கூறினர்.
நாகர்கோயில் நடராஜன் 57, கூறும்போது: நாங்கள் நாகர்கோயிலில் இருந்து சுமார் 42 நாட்கள் விரதம் இருந்து ஆட்டம், பாட்டத்துடன் ஈஷா மையத்திற்கு தேரை இழுத்து வருகின்றோம். அது மட்டுமின்றி வெள்ளியங்கிரி மலைக்கு இந்த வயதிலும் நான் ஏறி சிவனின் ஆசிர்வாதத்தை பெறுகின்றேன். மேலும் அவர் பேசும்போது, சத்குரு பெருவிழாவாக கொண்டாடுகிறார். இது போன்று கொண்டாடுவதால் ஆன்மீகம் அனைத்து மக்களுக்கும் சென்று சேருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இவர்களை போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விரதம் இருந்து ஈஷா மையத்திற்கு தேரை இழுத்து வருகின்றனர். மகா சிவராத்திரி அன்று ஈஷா மையத்திற்கு சென்றால் சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கிறது என பக்தர்கள் உணருகின்றனர்.
பல அற்பக் காரணங்களுக்காக தமிழக மண்ணின் ஆன்மாவான ஆன்மீகத்தை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பல கூட்டங்கள் திட்டங்களை தீட்டினாலும், சத்குருவால் தமிழக மக்கள் தங்களது மண்ணின் மகத்துவத்தை உணர்ந்து ஆன்மீகத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Source, Image Courtesy: Einstein & Agathiyar