Kathir News
Begin typing your search above and press return to search.

2024'ல் போட்டியா? அய்யோ ஆள விடுங்க சாமி! - தெறிக்கும் எம்.பி'க்கள், திண்டாடும் தி.மு.க!

2024ல் போட்டியா? அய்யோ ஆள விடுங்க சாமி! - தெறிக்கும் எம்.பிக்கள், திண்டாடும் தி.மு.க!

Mohan RajBy : Mohan Raj

  |  24 March 2023 6:43 AM GMT

திமுக கூட்டணியில் இந்த முறை சீட்டா அய்யய்யோ வேண்டாம் என தமிழகத்தில் நிறைய எம்பி வேட்பாளர்கள் தெரிந்து ஓடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.


கடந்த 2019 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தனர். எதிர்க்கட்சியாக திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்றவை போன்றவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர். அந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் ஒரு தொகுதியை தவிர 38 தொகுதிகளில் திமுக கூட்டணியே வென்றது. மத்தியில் பிரதமர் மோடி பெரும்பான்மையை பெற்று ஆட்சியைப் பிடித்திருந்தாலும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஒ.பி.ரவீந்திரநாத் தவிர வேறு யாரும் வெற்றி பெறவில்லை. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது, அதே நேரத்தில் பார்த்தீர்களா 'தமிழகம் மோடி எதிர்ப்பு அலையில் எந்த அளவிற்கு இருக்கிறது என? நாங்கள் 39 தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளோம், இது பெரியார் மண்' என ஜம்பமாக கூறி வந்தனர் திமுகவின் கூட்டணி கட்சிகள்.


அதனை தொடர்ந்து இன்னும் 12 மாதங்களில் நடைபெறவிருக்கும் 2024 தேர்தலிலும் போன முறை வெற்றி பெற்றது போல் இந்த முறை தமிழகம் புதுவை என சேர்த்து 40 தொகுதிகளும் நாமே வெற்றி பெற்று விடுவோம் என திமுக தரப்பில் இப்பொழுதே பேசி வருகின்றனர். ஆனால் கடந்த முறை எம்பி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்பிகள் இந்த முறை வாய்ப்பு கொடுத்தால் கூட கண்டிப்பாக போட்டியிட மாட்டார்கள் என்கின்ற ரீதியில் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து திமுக வட்டாரங்கள் என்ன கூறுகின்றனர் என்றால், 'கடந்த முறை லோக்சபா தேர்தலின் போது திமுக சார்பில் போட்டியிட்ட ஒரு சிலர் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து தேர்தல் நிதி என 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாகவும் அவற்றில் சிலர் பெரும் பணக்காரர்கள் என்பதால் நிதி கொடுப்பதில் சிக்கலில் இல்லாமல் பணம் கொடுத்துவிட்டனர், ஆனால் மற்றவர்கள் எப்படியாவது தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி விட வேண்டும் என்ற நிலையில் வெளியில் இருந்து கூட பணம் எல்லாம் வாங்கி கொடுத்துள்ளனர்.


அப்படி பணம் கொடுத்தவர்களின் நினைப்பு எம்பி ஆகிவிட்டால் ஆண்டுதோறும் மத்திய அரசு தரும் தொகுதி மேம்பாட்டு நிதி என பல நிதிகளை கையாளும் வாய்ப்பு கிடைக்கும் என்ற மனக்கணக்கு போட்டு அந்த ஐந்து கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர், இது மட்டுமில்லாமல் கே.வி பள்ளிகள் என அழைக்கப்படும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆண்டுதோறும் 10 சீட்டுகள் வரை எம்பிக்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு கிடைக்கும். இதன் வாயிலாக ஒரு சீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் என ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை நாம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் திட்டமிட்டனர். இது மட்டும் அல்லாமல் எம்பி ஆகிவிட்டால் டெல்லியில் செல்வாக்கை உருவாக்கி அதன் மூலம் சில பல வேலைகளை செய்து பணத்தை குவிக்கலாம் எனவும் சில எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிகிறது, இப்படி கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மனக்கோட்டை கட்டிய எம்.பிக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.


இரண்டு ஆண்டுகள் கொரோனோ என்பதால் எந்த ஒரு அரசியல் நடவடிக்கையும் இவர்களால் எடுக்க முடியவில்லை, மேலும் எம்பிக்களுக்கு வழங்கி வந்த தொகுதி மேம்பாட்டு நிதியை கூட ரத்து செய்தது மத்திய அரசு. கூடவே கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எம்பிக்கள் பரிந்துரையும் ரத்து அதிரடியாக ரத்து செய்தது மோடி அரசு, இதனால் எதிர்பார்த்த அளவு தொகை வரவில்லை மேலும் வாங்கிய பணத்தையும் சரிவர கொடுக்க முடியவில்லை இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் எம்பி தொகுதி கொடுத்தால் நம்மால் செலவு செய்ய முடியாது அப்படியே கொடுத்து வாங்கினாலும் இப்பொழுது தமிழகம் இருக்கும் சூழலில் பிரதமர் மோடியை எதிர்த்து நின்று ஜெய்ப்பது போன முறை போன்ற சுலபம் கிடையாது.

இந்த முறை பாஜக அசுர பலத்துடன் இறங்குகிறது எனவே சீட்டும் வாங்கி மேலும் கடன் வாங்கி செலவு செய்து தோற்கப்படுவதற்கு பதிலாக எம்.பி சீட்டு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என சிலர் இப்பொழுது யோசிக்க துவங்கி விட்டனர் என தகவல் தெரிவிக்கின்றன.


அதுவும் கூட்டணி கட்சிகளாக இருந்தால், கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணிகளாக இருந்தால் அவர்கள் சீட்டு வாங்குவது வேற கணக்கில் போய்விடும். ஆனால் நேரடியாக திமுக தரப்பில் சீட்டு கொடுத்து கண்டிப்பாக நாம் நின்றால் சீட்டு வாங்குவதுக்கு பணம் கொடுக்க வேண்டும், மேலும் நின்றால் தேர்தலில் ஜெயிக்க செலவு செய்ய பணம் வேண்டும், அதையும் மீறி நாம் ஜெயிக்க வேண்டும்! ஜெயித்தால் கூட அதனை எடுக்க முடியுமா என தெரியவில்லை எனவே இந்த முறை சீட்டு என்றால் கண்டிப்பாக நாம் வாங்கவே கூடாது' என இப்பொழுதே சில எம்பிக்கள் கணக்கு போட்டு வருவதால் வரும் 2024 தேர்தலில் திமுகவிற்கு எம்பி தொகுதிகள் போட்டியிட ஆள் கிடைப்பதே திண்டாட்டம் ஆகிவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


இப்படி திமுக தலைமை 40 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என கணக்குப்போட்டு அரசியல் பணிகளை செய்துவரும் நிலையில் எம்.பிக்களின் மனக்கணக்கு இப்படி அதற்க்கு நேர்மாறாக இருக்கிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News