Kathir News
Begin typing your search above and press return to search.

2024'ல் 3வது முறை மோடி பிரதமராக தீவிரமாக உழைக்கும் எதிர்கட்சிகள் - பரபர ரிப்போர்ட்!

2024ல் 3வது முறை மோடி பிரதமராக தீவிரமாக உழைக்கும் எதிர்கட்சிகள் - பரபர ரிப்போர்ட்!

Mohan RajBy : Mohan Raj

  |  7 March 2023 6:24 AM GMT

எதிர்க்கட்சிகளே மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியைப் பிடிக்க உதவி செய்யும் என அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

தற்பொழுதைய அரசியல் கள நிலவரங்கள் மூன்றாவது முறை பிரதமர் பதவியில் மோடியை மக்களுடன் சேர்ந்து எதிர்க்கட்சிகளே அமைய அமைக்கும் என சூழ்நிலை நிலவுகிறது. இன்னும் சரியாக 13 மாத கால இடைவெளியில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதன்முறையாக பிரதமராக பதவி ஏற்றார் அதற்கு முன்பு குஜராத் முதல்வராக இருந்த காரணத்தினால் குஜராத் மாநிலத்தை வறட்சி மாநிலத்தில் இருந்து மாற்றி செழுமையான மாநிலமாக கொண்டு வந்த காரணத்தினால் இந்தியா முழுவதும் மோடி தேவை என்ற மோடி அலை வீசியது.

அதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு மிகப் பெரும்பான்மையுடன் வரலாற்றில் இல்லாதவர்களுக்கு பாஜக ஆட்சியைப் பிடித்தது, அதனை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்த காரணத்தினால் இரண்டாவது முறையாகவும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குறிப்பாக ஐந்து ஆண்டுகளில் பணமதிப்பு இழப்பீடு நடவடிக்கை, நாட்டில் பொருளாதார வளர்ச்சியை சரியான முறையில் கொண்டு வர ஜிஎஸ்டியை அமல்படுத்துதல் இதுபோன்ற சிறந்த திட்டங்களை பிரதமர் கொண்டு வந்த காரணத்தினால் இவர்தான் இந்தியாவின் சிறந்த தலைவரி என மக்கள் 2019 ஆம் ஆண்டும் தேர்ந்தெடுத்தனர். அது வரையில் பிரதமர் மோடியை பற்றிய தவறாக மக்களிடம் ஒரு சிலரிடம் இருந்து வந்த எண்ணம் அப்படியே மாறிப்போனது.

இப்பொழுது மோடி என்றால் எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகிவிட்டார். எதிர்க்கட்சிகள் 10 பேர் சேர்ந்து மோடி மீது அவதூறு பரப்பினாலும் அது மோடிக்கு தான் சாதகமாக முடிகிறதே தவிர எதிர்க்கட்சிகளுக்கு பாதமாகத் தான் முடிகிறது. எனவே தற்பொழுது மோடி மீது அவதூறு பேசுவதை பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் நிறுத்திவிட்டனர், அதன் காரணமாகவே பிபிசி ஆவணப்படம், வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை இது போன்ற பிரச்சினைகளை முன்னெடுத்து பேசி வருகின்றனர். சமீப காலத்தில் பார்த்தீர்களா என்றால் மோடி மீது எந்த ஒரு எதிர்க்கட்சியும் வன்மத்தையோ, அவதூறையோ பரப்பாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

காரணம் அவர்கள் ஒவ்வொரு முறையும் மோடி மீது வன்மம் பரப்பும் போது அந்த கட்சிகளுக்கு தான் நஷ்டம் ஆகிறது தவிர பிரதமர் மோடிக்கு அது லாபம் ஆகிறது. எப்படியோ அவர்கள் மோடியை பற்றி பேசுகிறார்கள் என மக்கள் அதன் பின்னணியில் உள்ள உண்மையை தெரிந்து கொண்டு மோடியின் ஆதரவு மனநிலைக்கு மாறுகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு முறை 2014, 2019 என பிரதமர் பதவியில் அமர்ந்த மோடி தற்பொழுது நடைபெறவிருக்கும் 2024 தேர்தலில் பெரும்பான்மையுடன் பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பார் என அறிக்கைகள் கூறுகின்றன.

இதற்கு காரணமாகவே பிராந்திய கட்சிகள் எனப்படும் மாநிலக் கட்சிகள் உறுதுணையாக இருக்கும் என இப்பொழுது அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். குறிப்பாக ஆம் ஆத்மீ கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் மோடியின் 3ம் முறை பிரதமர் பதவிக்கு அஸ்திவாரமாக இருப்பார்கள் என தெரிகிறது.

ஒருபுறம் 'காங்கிரஸ் ஊழல் கட்சி. அவர்களுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. அடுத்த தேர்தலை தனியாகவே சந்திப்போம்' என, கெஜ்ரிவால் கூறுகிறார்.

மறுபுறம் மம்தா பானர்ஜியும், 'அடுத்த லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்; தனியாகவே தேர்தலை சந்திப்போம்' என கூறுகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் இது போன்ற மாநில கட்சிகள் அனைவரும் சேர்ந்து பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்ய முற்பட வேளையில் ஸ்டாலின் முந்திக்கொண்டு ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தார் அதுவே காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவாக போய்விட்டது. ஆனால் இந்த முறை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க போவது இல்லை.

மம்தா பானர்ஜி இப்பொழுது காங்கிரசையே பாஜகவின் பி டீம் எனக் கூறி வருகிறார். இந்த நிலையில் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மம்தாவின் ஆதரவு இல்லாமல் எதிர்க்கட்சிகள் தரப்பு கூட்டணி வலுவாக அமையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் டெல்லி பஞ்சாப் என இரு மாநிலங்களை கையில் வைத்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலோ திமுக போன்ற கட்சிகளுடன் சகஜமாக போனாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இன்னமும் சற்று தள்ளியே இருக்கிறார். இதன் காரணமாகவே இவரை எதிர்க்கட்சி வரிசையில் ஒருங்கிணைப்பதும் இவரை எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வைப்பதும் சற்று சிரமமாகத்தான் இருக்கும்.

மேலும் கம்யூனிஸ்டுகள் தற்பொழுது அதுவும் குறிப்பாக கேரளத்தில் காங்கிரசை எதிர்த்தே வருகின்றனர். கடந்த காலத்தில் ராகுல் காந்தியின் வயநாடு காங்கிரஸ் கட்சி அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, இப்படி ராகுல் காந்தியை ஏற்க கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்ப மாட்டார்கள் என்றே தெரிகிறது. அவ்வாறு விரும்பாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மூன்றாவது அணி உருவாவதற்கோ அல்லது மறைமுகமாக பாஜகவிற்கு உதவி செய்வதுதான் என்பது போன்ற அரசியல் நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

இப்படி பாஜக பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர வைக்க செய்யும் முயற்சியை விட எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து செய்யும் முயற்சியே பிரதமர் மோடியை நிச்சயம் 2024 மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைக்கும் என இப்பொழுது அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். நிலைமையும் அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது, ஆய்வு அறிக்கைகளும் அப்படித்தான் கூறுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News