Kathir News
Begin typing your search above and press return to search.

அதிர்ச்சி! ஒரே முகவரியில் 4 மிஷனரி NGOக்கள்! அமெரிக்காவில் இருந்து ₹224 கோடி நிதி!

அதிர்ச்சி! ஒரே முகவரியில் 4 மிஷனரி NGOக்கள்! அமெரிக்காவில் இருந்து ₹224 கோடி நிதி!

அதிர்ச்சி! ஒரே முகவரியில் 4 மிஷனரி NGOக்கள்! அமெரிக்காவில் இருந்து ₹224 கோடி நிதி!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  18 Jan 2021 8:03 AM GMT

சமூக சேவை என்ற போர்வையில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று அதை மத மாற்றம், இந்து மற்றும் இந்திய எதிர்ப்பு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் பல NGOக்களை Legal Rights Observatory அமைப்பு வெளிக் கொண்டு வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின் படி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு NGOக்கள் அமெரிக்காவில் இருந்து மத மாற்றத்துக்காக பெரிய அளவில் நிதி பெறுவது தெரிய வந்துள்ளது.

LRO தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த Grameen Nava Jagriti Yojana, Aadharshila Sansthan, Atma Vikas Sanstha, Christian Medical- Training Centre ஆகிய நான்கு அமைப்புக்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் FCRA மூலம் ₹222.76 கோடி நிதி பெற்றதாகவும், இதை மத மாற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாகத் தெரிய வந்ததால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது.

இந்த நான்கு அமைப்புகளுமே மத்திய பிரதேச மாநிலத்தின் தாமோ பகுதியில் இயங்குகின்றன. ஏன் இந்த நான்கு அமைப்புகளையும் ஒன்றாகக் குறிப்பிட வேண்டும் என்ற கேள்வி எழலாம். இவை அனைத்துமே Central India Christian Mission என்ற அமெரிக்க அமைப்பிடம் இருந்து நிதி பெறுவது தான் காரணம். இவற்றில் மூன்று அமைப்புகளின் நிர்வாகிகளும் ஒரே ஆட்கள் தான் என்பது மற்றொரு காரணம்.

ராஜ்கமல் டேவிட் லால் என்ற மதபோதகரும் அவரது மனைவி ஷீலா லாலும் Grameen Nava Jagriti Yojana அல்லது Nava Jagruti Education Societyயை நிர்வகிக்கிறார்கள். இவர்களது குடும்பமே மிஷனரி செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் Mid India Christian Mission என்ற பெயரில் வேறு ஒரு மிஷனரி அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

ரஜ்னீஷ் மோரிஸ் நியூட்டன், காதிர் யூசுப், ஃபிராங்க் ஹாரிசன் ஆகிய மூவரோடு ஜீவன் மசி என்பவரும் முன் குறிப்பிட்ட நான்கு அமைப்புகளில் மூன்றிற்கு நிர்வாகிகளாக இருக்கின்றனர். வழக்கம் போல சுகாதாரம், குடிநீர் வசதி, கல்வி, வேலைவாய்ப்பு, மனித உரிமைகள் என்று தாங்கள் சமூக சேவையில் ஈடுபடுவதாக இந்த அமைப்புகள் கூறிக் கொள்கின்றன. ஆனால் இவற்றுக்கு நிதி அளிக்கும் Central India Christian Missionன் நோக்கம் வேறாக இருக்கிறது.

Dr. Lal with the Central India Christian Mission recently shared these pictures on his FB.

We visited in 2002 to teach...

Posted by Alentar International Ministries on Thursday, 17 December 2020

Central India Christian Mission தனது இணையதளத்தில் பின்வரும் விஷயங்களை தமது நோக்கமாகவும் பணிகளாகவும் குறிப்பிடுகிறது. இந்த அமைப்பு இந்தியாவைக் குறி வைத்தாலும் பொத்தாம் பொதுவாக தென்கிழக்கு ஆசியாவில் பணிபுரிவதாகக் குறிப்பிடுகிறது. குறிக்கோள்: ஆன்மீக ரீதியாக இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு நற்செய்தியைக் கேட்காதவர்களே இல்லை என்ற சூழல் ஏற்படும் வரை 'நற்செய்தி' எனும் வெளிச்சத்தைக் கொண்டு செல்வது.

தங்களது பணிகள் அனைத்துமே இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்று வெளிப்படையாகவே இந்த அமைப்பு தங்களது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக மத போதகர்களை தயார்படுத்தும் தலையாய பணியை ஆற்றி வருவதாகவும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் Educate Equip Empower என்று ஒரு மந்திரம் வைத்திருக்கிறார்கள். இவர்களது பைபிள் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவருக்கு முழுக்க முழுக்க உதவித்தொகை அளித்தால் அவர் 1000 பேருக்கு நற்செய்தியைச் சொல்லுவார், 200 பேரை மதம் மாற்றுவார், 4 புதிய சர்ச்சுகளை நிறுவுவார்(Church Planting) என்பது Educate.

ஒரு Church Planter, மத போதகருக்கு நிதி உதவி செய்தால் அவர் 4000 பேருக்கு நற்செய்தியை அறிவிப்பார், அதில் 800 பேரை மதம் மாற்றுவார், அவர்களுக்கென்று 4 புதிய சர்ச்சுகளை தோற்றுவிப்பார் என்பது Equip. Empower என்பது சிறு குழந்தைகளை நல்ல கல்வி, உணவு, உறைவிடம் தருகிறோம் என்று பெற்றோரிடம் இருந்து பிரித்து வந்து அவர்களை Educate தந்திரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு 500 குழந்தைகளை இப்படி வளர்த்தெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று இவர்களது கண்கள் பளபளக்கின்றன.

இந்தியாவில் ஆறு குழந்தைகள் காப்பகங்களை நடத்தி வரும் CICM இதற்காக அமெரிக்காவில் மாதம் $ 200, அதாவது கிட்டத்தட்ட ₹14,000 என்ற அளவில் நிதி வசூலிக்கிறது.வெளிப்பார்வைக்கு மொபைல் கிளினிக் தருகிறோம், குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லித் தருகிறோம், பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு தருகிறோம் என்று காட்டிக் கொண்டு வசதி வாய்ப்புகளையும் பணத்தையும் காட்டி அப்பாவிகளை மதம் மாற்றும் பணியில் தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. எனவே LROவின் புகாரின் மேல் நடவடிக்கை எடுத்து மத்திய அரசு இந்த அமைப்புகளை இழுத்து மூடுவது உத்தமம்.

References

fcraonline.nic.in

https://ngolist.net/aadharshila-sansthan/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News