Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிநாட்டு மத மாற்று சக்திகளுக்கு துணைபோகும் 'Share the World Ministries' அமைப்பு - திடுக்கிடும் தகவல்கள்!

வெளிநாட்டு மத மாற்று சக்திகளுக்கு துணைபோகும் Share the World Ministries அமைப்பு  - திடுக்கிடும் தகவல்கள்!

Saffron MomBy : Saffron Mom

  |  15 July 2021 10:50 AM GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), "ஷேர் தி வேர்ல்ட் மினிஸ்டரிஸ்" (Share the World Ministries) என்ற அமைப்பு, சட்டவிரோதமான மதமாற்றங்களை செய்வதற்கு பெயர் போன சர்வதேச எவாஞ்சலிஸ்ட் அமைப்புகளான Sister concern one, The Pillar & Ground Of The Truth Baptist Church Ministries ஆகியவற்றிற்கு பினாமி போல செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இவைகளிடமிருந்து 46 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக விசர்ரணை கோரி உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக LRO குறிப்பிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News