52 வயசுக்கு உண்டான மெச்சூரிட்டியே இல்லையே - உளறிவைத்த ராகுல், தலையில் அடித்துக்கொள்ளும் காங்கிரஸ்
By : Mohan Raj
'52 வயசுல எனக்கு தெளிவு வந்திருக்கு பாத்தீங்களா, விளையாட்டு பிள்ளையாவே இருந்து இருக்கேன் என ராகுல்காந்தி புலம்பிய விஷயங்கள் எல்லாம் தற்பொழுது இந்திய அரசியல் ஹாட் டாபிக்காக பார்க்கப்படுகிறது.
நேரு குடும்பத்தின் தற்போதைய வாரிசாக நிற்கும் ராகுல் காந்திக்கு 52 வயதாகிறது, நேரு குடும்பத்தின் கடைசி பிரதமர் என்ற பெருமையை ராஜீவ் காந்தி பெற்றார், 1990களில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பிறகு ராஜீவ் காந்தியின் மனைவி மற்றும் வாரிசுகள் இருவரும் காங்கிரஸ் பொறுப்பை ஏற்றனர். சோனியா காந்தி காங்கிரஸ் பொறுப்பை ஏற்ற சமயம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் சிறுவர்களாக இருந்தனர். அப்பொழுது முதல் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார் சோனியா காந்தி.
2006'ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் சோனியா காந்தி பிரதமராக முயற்சி செய்தது நடக்காமல் போனது, ஆனால் அப்போதிலிருந்து ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று நினைப்புடன் காங்கிரஸ் தரப்பு அனைத்து முயற்சியும் எடுத்து வந்தது. ஆனால் ராகுல் காந்தியை எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது அரசியல் விமர்சகர்களும் 'பப்பு' என விமர்சித்து வந்தனர். காரணம் ராகுல் காந்தி விளையாட்டு பிள்ளைத்தனமாக எப்பொழுதும் இருப்பார், அவர் ஒரு ராஜ குடும்பத்தில் பிறந்த பிள்ளை என்பதால் அவரின் நடவடிக்கைகள் மற்றும் அவரின் செயல்கள் அனைத்துமே ஒரு விளையாட்டுத்தனமாகவே இருக்கும்.
இவ்வளவும் பிரியங்கா காந்திக்கு இருக்கும் முதிர்ச்சி கூட ராகுல் காந்திக்கு கிடையாது என அரசியல் விமர்சகர்களால் அவ்வப்போது குறிப்பிடப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான வீடியோக்கள் அனைத்தும் இணையங்களில் வைரல். தற்போது சோனியா காந்தி கிட்டத்தட்ட அரசியலில் ஓய்வை அறிவித்துவிட்டார், இனி என்னால் பாஜகவை எடுத்து போரிட முடியாது! ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளில் எந்த அரசின் மீதாவது ஒரு சிறு வெறுப்பு மக்களுக்கு ஏற்படுவது நியாயம் ஆனால் பாஜக அரசு வருடத்திற்கு வருடம் வளர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் என்னால் இதற்கு மேல் போரிட முடியாது என தனது இயலாமையை ஒப்புக்கொண்டு இருந்து வரும் பாரத ஜோடோ யாத்திரை முடிவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா காந்தி.
இதனால் ராகுல் காந்தி தற்பொழுது காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பார், வரும் தேர்தலை பிரதமர் போட்டியாளராக வருவார் என்ற நம்பிக்கையும் இதன் மூலம் காங்கிரசாருக்கு போய்விட்டது. காரணம் சோனியா காந்தி பதவியில் இருந்து மட்டுமல்ல தீவிர அரசியலில் இருந்து விலகி விட்டார். ராகுல் காந்தி நடத்திய ஜோடோ யாத்திரையோ பெரிய அளவில் யாருக்கும் கை கொடுக்கவில்லை! மாறாக ஜோடோ யாத்திரையினால் கட்சிக்குள் விரிசல் விழுந்ததுதான் மிச்சம்.
தற்பொழுது மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்று உள்ளார். இன்னும் தேர்தலுக்கு ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் காங்கிரஸ் தீவிர அரசியலில் இருந்து சோனியா விலகுவதும், மல்லிகார்ஜுன காருக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பதும் எப்படியும் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரசை தயங்கும் என தெரிகிறது. ஏனெனில் கடந்த இரு தேர்தலுக்காக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் தோல்வியை தழுவிய குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 52 வயதாகிறது இப்பதான் எனக்கு அனுபவமே வந்திருக்கிறது என ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமாக பேசியதுதான் பேசு பொருள் ஆகியுள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு நடைபெற்றது. இதில் இறுதி நாளான நேற்று ராகுல் காந்தி பேசினார். அப்போது, "1997 தேர்தலுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன். ஒரு நாள் நாங்கள் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேறுவதாக அம்மா கூறினார். நான் அம்மாவிடம், ஏன் நாம் செல்ல வேண்டும்... என்ன நடக்கிறது எனக் கேட்டேன். அப்போதுதான் `நாம் தங்கியிருந்தது நமது வீடல்ல, அரசு வீடு. அதனால் நாம் சென்றாக வேண்டும்’ என அம்மா சொன்னார். இப்போது எனக்கு 52 வயதாகிறது, இன்னும் எனக்கென ஒரு வீடு இல்லை. அலகாபாத்தில் நாங்கள் வைத்திருக்கும் குடும்ப வீடு எங்களுடையது அல்ல' என கூறினார்.
இந்த விவகாரம் ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தான் தங்கியிருக்கும் வீடு பற்றி 52 வயது வரை தெரியாமல் இருக்கிறேன் என ராகுல் கூறியதிலிருந்தே ராகுலின் முதிர்ச்சி எந்த அளவிற்கு இருக்கும் என தெரிகிறது என்று தேசிய அளவில் விமர்சனங்கள் எழ துவங்கிவிட்டன. ராகுல் காந்தி 52 வயதானாலும் இன்னும் வளரவே இல்லை என இப்பொழுது அரசியல் விமர்சனங்கள் கிளம்பிவிட்டன.