12,000 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் சீன ஸ்மார்ட் போன்களுக்கு தடையா - பரவி வரும் தகவலின் உண்மை என்ன?
ரூபாய் 12000'க்கும் குறைவான சீன ஸ்மார்ட்போன்களுக்கு தடையா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
By : Mohan Raj
ரூபாய் 12000'க்கும் குறைவான சீன ஸ்மார்ட்போன்களுக்கு தடையா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 12 ஆயிரத்துக்கும் குறைவான ஸ்மார்ட் ஃபோன்களை இந்தியா தடை செய்ய போவதாக தகவல் வெளியானது.
இந்திய சந்தையில் சீன செல்போன் நிறுவனங்களான விவோ, ஒப்போ, ரியல் மீ, ஷாவ்மி போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு செல்போன்கள் மூலம் ஆக்கிரமித்துள்ளன. இந்த நிலையில் சமீபகாலமாக சீன ஸ்மார்ட்போன்களின் வர்த்தக பரிவர்த்தனைகளை மத்திய அரசு கண்காணித்தது இதில் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கு காட்டாமல் மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக சீன ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற தகவல் பரவியது, இதனை தொடர்ந்து இந்த தகவல் உண்மை இல்லை எனவும் மத்திய அரசு மறுத்துள்ளது. மேலும் இது குறித்து மத்திய இணை அமைச்சர் ராஜு சந்திரசேகர் விளக்கம் தெரிவிக்கையில், 'வெளிநாட்டு பிராண்டுகளை இந்தியா சந்தையில் இருந்து நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசின் இலக்கு' என்றார்.
அதே சமயம் அந்நிய பிராண்டுகளுக்கு சந்தையில் உரிய இடம் கிடைத்து அவற்றுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் சந்தையில் விலை மதிப்பில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அதில் அரசு தலையிட்டு முறைப்படுத்தப்படும் என்றார்.