Kathir News
Begin typing your search above and press return to search.

தொழில்துறையை ஊக்குவிக்க வரவிருக்கும் நில சீர்திருத்த சட்டங்கள்! மத்திய அரசின் அதிரடி!

தொழில்துறையை ஊக்குவிக்க வரவிருக்கும் நில சீர்திருத்த சட்டங்கள்! மத்திய அரசின் அதிரடி!

Saffron MomBy : Saffron Mom

  |  3 March 2021 2:47 AM GMT

நாற்பது ஆண்டுகளாக இந்தியாவின் நிதி தலைமையகமான மும்பையின் நவீன மெட்ரோத் திட்டம் தடைபட்டு வருகிறது. இந்த தாமதம் 4.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளைக் கொண்டு வருவதையும் தாமதப்படுத்தியுள்ளது. நிலச் சிக்கல்களால் தடைபட்ட இந்திய மெகா திட்டம் இது ஒன்று மட்டும் அல்ல; 17 பில்லியன் டாலர் புல்லட் ரயில், 12 பில்லியன் டாலர் எஃகு திட்டம் மற்றும் 700க்கும் மேற்பட்ட சாலை திட்டங்கள் இவற்றில் அடங்கும்.

பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அகற்றி, உள்ளூர் உற்பத்தியை உயர்த்தவும், மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலீடுகளை கட்டவிழ்த்து விட முயல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சீனாவிலிருந்து விநியோகச் சங்கிலிகளை வெளியேற்றி, இந்தியாவில் அவற்றை அமைக்க நிறுவனங்களுக்கு இவை உதவி புரியும்.

இதற்காக நாட்டின் திட்டமிடல் அமைப்பு 'ஒரு புதிய மாதிரி மசோதாவை' உருவாக்கியுள்ளது, இது நிலத்தின் உரிமையாளரை துல்லியமாக பதிவு செய்ய மாநிலங்கள் உத்தரவாதம் அளிக்கும் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும். இது ஆங்கிலேயர் ஆட்சி கால சட்டங்களை மாற்றியமைக்கும். மாநிலங்கள் அனைத்து நிலப் பதிவுகளையும் கணினிமயமாக்க வேண்டும், நில உரிமையாளர்களின் விவரங்களை அந்த டிஜிட்டல் பதிவுகளுடன் இணைக்க வேண்டும் மற்றும் மூன்று ஆண்டுகளுக்குள் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் தீர்க்க தீர்ப்பாயங்களை நிறுவ வேண்டும்.

"இந்த முறை அமல்படுத்தப்பட்டால் வாழ்க்கை எளிதாகிவிடும்" என்று முன்மொழியப்பட்ட சட்டத்தை உருவாக்கிய அரசாங்கக் குழுவின் தலைவர் வினோத் அகர்வால் ப்ளூம்பெர்க் பத்திரிகைக்கு கூறினார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முதல் தென் கொரியா மற்றும் தாய்லாந்து வரை 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இதேபோன்ற முறை உள்ளதாக இவர் கூறுகிறார்.

பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துகிறது எனவே மத்தியில் சட்டத்தை எளிதில் நிறைவேற்ற முடியும் என்றாலும், அதன் வெற்றி, மாநிலங்களில் மாதிரி மசோதாவை அடிப்படையாகக் கொண்டு சட்டங்களை பின்பற்ற வைப்பதில் உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு சில மாநிலங்களில் வலுத்த எதிர்ப்புகளும் போராட்டங்களும், அனைத்தும் சுமூகமாக நடக்காது என்பதைக் காட்டுகிறது.

2015 ஆம் ஆண்டில், விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக இதே போன்ற ஒரு சீர்திருத்தத்தை செயல்படுத்த முடியாமல் மத்திய அரசு பின்வாங்கியது.

நாட்டின் மிகப் பெரிய வணிகக் குழுக்களில் ஒன்றான இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை அசோசியேட்டட் சேம்பர்ஸின் பொதுச் செயலாளர் தீபக் சூத் கருத்துப்படி, இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் தெளிவான நிலப் பட்டங்களுடன் (உரிமையாளர்) அதிக உறுதியுடன் இருக்க முடியும், இது உள்கட்டமைப்பு மற்றும் ரியால்டி துறைகளில் அதிக முதலீட்டை ஊக்குவிக்கும்.

வேளாண் நிலங்கள் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பாதியை உள்ளடக்கியது மற்றும் 60% க்கும் அதிகமான இந்தியர்கள் இதை பயன்படுத்துகின்றனர். சராசரி வேளாண் நிலத்தின் அளவு சுமார் 1 ஹெக்டேர் (2.5 ஏக்கர்) - இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவு என தரவு காட்டுகிறது.

சீனாவுடன் பதட்டங்கள் வளரும் இவ்வேளையில், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து அதிக பிளெக்சிபிள் வாய்ந்த விநியோகச் சங்கிலிகளைக் கட்டியெழுப்பும்போது அதிக உற்பத்தியை ஈர்க்க உதவும். இந்திய அரசாங்கம் சமீபத்தில் இந்தியாவுக்கு வர விரும்பும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தது. இது பொருளாதாரத்தில் உற்பத்தி பங்கை 15%லிருந்து 25% ஆக உயர்த்துவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

டிஜிட்டல் இந்தியா லேண்ட் ரெக்கார்ட்ஸ் நவீனமயமாக்கல் திட்ட டாஷ்போர்டு 90.1% கிராமங்களில் நிலப் பதிவுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாகக் காட்டினாலும், பல பதிவுகள் முறையாக புதுப்பிக்கப்படவில்லை - முதலீட்டாளர்கள் நிலத்தை கையகப்படுத்த பல தரப்பினருடன் சமாளிக்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள் மற்றும் பெரும்பாலும் லஞ்சத்திற்கான கோரிக்கைகளை எதிர்கொள்கின்றனர்.

புதிய சட்டம் அந்த பதிவை நில உரிமையாளரின் டிஜிட்டல் அடையாளத்துடன் இணைக்க வேண்டும், மேலும் முதலீட்டாளர்களை உரிமையாளருடன் நேரடியாக உரையாட அனுமதிக்கலாம், இது இடைத்தரகர்கள் மற்றும் கீழ் மட்ட அதிகாரத்துவங்களை குறைத்து அதன் மூலம் தாமதங்கள் மற்றும் ஊழல்களைக் குறைக்கும்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் தொடர்பானது என்று உலக வங்கி மதிப்பிடுகிறது. இந்தியாவில் சுமார் 800 பிரச்சினைகள், 7.3 மில்லியன் மக்களை பாதிக்கின்றன மற்றும் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளை அச்சுறுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் குழுவான 'நில மோதல் கண்காணிப்பு' மதிப்பிடுகிறது.

நில மோதல்கள் சிமென்ட், எஃகு, சுரங்க மற்றும் மின் துறைகளில் முதலீடுகளை நிறுத்தியுள்ளன. தென் கொரியாவின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பாளரான போஸ்கோ, உள்ளூர் தகராறுகள் மற்றும் குத்தகை சிக்கல்களால் பத்தாண்டுகள் தாமதமாகிவிட்டதால், 2017 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட 12 பில்லியன் டாலர் எஃகு வளாகத்தை ஒடிசாவில் ரத்து செய்தது.

மேற்கு இந்தியாவில் 17 பில்லியன் டாலர் புல்லட் ரயில் இணைப்பைக் கட்டும் மோடி அரசாங்கத்தின் திட்டங்களை முடக்கியுள்ள நிலப்பிரச்சனையை நாட்டின் உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது, அதே நேரத்தில் தெற்கு நகரங்களான பெங்களூரு மற்றும் மைசூருவை இணைக்க 120 பில்லியன் ரூபாய் திட்டம் நிலுவையில் உள்ளது.

நில மோதல்கள் காரணமாக 2.71 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள 773 தேசிய சாலை திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சரியாகச் செய்தால், முன்மொழியப்பட்ட சட்டம் மறுக்கமுடியாத உரிமையை உறுதி செய்யும், ஆன்லைன் நில பரிவர்த்தனைகளை சாத்தியமாக்கும் மற்றும் உரிமையாளர்களுக்கு வங்கிக் கடனை எளிதில் கிடைப்பதை உறுதி செய்யும் என்று மத்திய நில வளத்துறையின் கூடுதல் செயலாளர் ஹுகும் சிங் மீனா கூறுகிறார். ஆனால், தற்போதைய டிஜிட்டல் உள்கட்டமைப்பு புதிய அமைப்பைக் கையாள முடியுமா என்பது உட்பட, கடுமையான தடைகள் உள்ளன.

"நாங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நகர்கிறோம்," என்று மீனா ஒரு பேட்டியில் கூறினார். எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே இச்சட்டத்தின் விளைவுகள் இருக்கும் என்றும் கூறினார்.With Inputs From: Bloomberg, The Mint

Cover Image Credit: The Bloomberg

Next Story
கதிர் தொகுப்பு
Trending News