Kathir News
Begin typing your search above and press return to search.

கல்வியில் கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு நிதியின் தாக்கம் - ஒரு சிறப்புப் பார்வை.!

கல்வியில் கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு நிதியின் தாக்கம் - ஒரு சிறப்புப் பார்வை.!

கல்வியில் கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு நிதியின் தாக்கம் - ஒரு சிறப்புப் பார்வை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2020 12:43 PM GMT

மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் FCRA மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது பற்றி தற்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. மதமாற்ற செயல்பாடுகள் மீதான அதன் தாக்கம் பற்றியும் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

ஆனால் மதமாற்றும் சக்திகள் இந்த நிதியை 4/14 என்ற முறையில், அதாவது 4 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறி வைத்து மதம் மாற்ற எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை.

மிஷினரிகள் இந்த வயதுடைய குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைக்கும் கல்வித் துறையில் ஏகபோக உரிமையை கொண்டு தங்கள் கவனத்தை அவர்கள் மீது செலுத்தி மதம் மாற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிறைவேற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். ரேயான் இன்டர்நேஷனல், மவுண்ட் கார்மல், செயின்ட் சேவியர்ஸ் போன்ற நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கான டாப் கிளாஸ் பள்ளிகளில் இருந்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களுடன் கூடிய பள்ளிகள் வரை அவர்கள் 4 முதல் 14 வயதுடைய குழந்தைகளை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அனைத்து வழிகளையும் பின்பற்றுகின்றனர்.

அவர்களின் பார்வையில் கல்வி என்பது பைபிள் மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களை கற்பித்து அதில் ஊன்றச் செய்வது. அனாதை இல்லங்களை ஊழியத்தில் ஈடுபட ஆட்களை சேர்க்கும் வழியாகவும், 'மதச்சார்பற்ற' பாடத்திட்டங்கள் மூலம் சனாதன கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக துடைத்தெறியும் தந்திரத்தையும் கிறிஸ்தவ பள்ளிகள் மறைமுகமாக செயல்படுத்தி வருகின்றன.

மேற்கூறிய செயல்களை மேலும் எளிதாக்குவதற்கு அவர்கள் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தைக்(Free and Compulsory Right to Education Act) கொண்டு வந்ததோடு அல்லாமல் அதை தீவிரமாக செயல்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். இந்த சட்டம் கல்வியில் வெளிநாட்டு நிதியின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இது கல்வி கற்பதற்கான உரிமை(Right to Education) என்று கூறப்பட்டாலும் உண்மையில் கல்வி கற்பிப்பதற்கான உரிமையாகவே(Right to Educate) செயல்பாட்டில் இருக்கிறது. ஏனெனில் கல்வித்துறையில் கிறிஸ்தவ சமூகத்தின் ஏகபோகத்தை ஊக்குவிக்கும் வகையில் இதன் விதிகள் அமைந்துள்ளன.

கல்வி உரிமைச் சட்டத்தை ஆதரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 25% கட்டணமில்லா ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பற்றிய தகவல்களை பரப்புவதோடு நில்லாமல் சிறுபான்மை அல்லாத சமூகத்தால், அதாவது இந்துக்களால் நடத்தப்படும் பள்ளிகளை மூடுவதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. கல்வி உரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கல்வியில் FCRAஇன் தாக்கத்தை இந்த வலைதளத்தில் காணலாம்.

இந்த 4/14 சாளரத்தின் முக்கியத்துவம் என்ன? அது ஏன் கல்வி மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும்? சிகா ஆர்ல்ஸ் என்ற மிஷனரி ஒருவர் தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "அந்த சமூகத்தினர் தங்களது குழந்தைகளுக்காக தரமான கான்வென்ட் கல்வி வழங்க எங்களை சம்மதிக்க வைத்தார்கள். "கிறிஸ்தவர்கள் நீங்கள் நல்ல கல்வி வழங்குவதில் சிறந்து விளங்குகிறீர்கள்" என்று கூறி அவர்களுக்கு சேவையாற்ற எங்களை அழைத்தார்கள். "

"இது சமூகத்துக்குள் ஊடுருவி கிறிஸ்தவர் அல்லாதோரிடம் கிறிஸ்தவ மத போதனைகளைப் புகுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நான் கருதினேன். மாதாந்திர பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் பெருமளவில் பெற்றோர் குழுமினார்கள். இந்த கிராமத்தின், நகரத்தின் வருங்கால குடிமக்களான குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதில் எங்களுடன் இணைந்து அவர்கள் எவ்வாறு பங்காற்ற வேண்டும் என்று வழிகாட்டுவதன் மூலம் அவர்களது சிந்தனை முறையை நாங்கள் வடிவமைத்தோம்."

"பத்து, இருபது ஆண்டுகளில் நற்செய்தி இவர்கள் மீது எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எண்ணி நான் பூரிப்படைந்தேன். குழந்தைகள் கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளை கற்பார்கள். (கடவுளுடைய) வார்த்தையின் உண்மையை அவர்கள் உணர்வார்கள். அது அவர்களுக்கு விடுதலையை அளிக்கும். அவர்களது பெற்றோரும் மனந்திறப்பார்கள். மிஷனரி மற்றும் மதமாற்ற செயல்பாடுகளுக்கான எதிர்ப்பும் குறையும்".

இங்கு 'விடுதலை' என்பது என்ன? குழந்தைகளை அவர்களது பெற்றோர் கட்டியா வைத்திருக்கிறார்கள்? இல்லை. இங்கு 'விடுதலை' என்பது இந்து மதத்தில் இருந்து விலகி கிறிஸ்தவ மதத்தைத் தழுவவுதைக் குறிக்கும்.

இப்போது கல்வியில் நேரடியாக FCRAவின் தாக்கம் என்ன என்று பார்ப்போம். உதாரணத்துக்கு வெளிநாட்டு நிதி பெறும் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளை எடுத்துக் கொள்வோம். Tirunelveli Diocesan Trust Association தான் திருநெல்வேலி ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ FCRA உரிமம் பெற்ற அமைப்பு. திருநெல்வேலி திருச்சபை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களையும் (தற்போது தெண்காசியையும்) உள்ளடக்கி 300க்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்துகிறது. அடுத்ததாக மைலாப்பூர்-மதராஸ் திருச்சபை அதிக அளவிலான பள்ளிகளை நடத்துகிறது.

Diocese

No. of Schools No. of Colleges & Training institutes

FCRA

Chengalpattu 164 21 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075820260R&Final_St=1&c=h
Coimbatore 10 4 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075850062R&Final_St=1&c=h
Kottar 89 10 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075890004R&Final_St=1&c=h
Mylapore (Chennai) 220 7 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075900245R&Final_St=1&c=h
Madurai 54 8 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075940043R&Final_St=1&c=h
Tirunelveli 352 10 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=076030023R&Final_St=1&c=h
Salem 126 27 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=076000011R&Final_St=1&c=h
Thanjavur 171 15 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075960028R&Final_St=1&c=h
Trichy 57 38 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=076040009R&Final_St=1&c=h
Sivaganga 180 9 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075930024R&Final_St=1&c=h
Vellore 176 38 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075980063R&Final_St=1&c=h
Dharmapuri 54 5 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075870043R&Final_St=1&c=h
Dindigul 89 11 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075890341R&Final_St=1&c=h
Ooty 41 33 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=075970001R&Final_St=1&c=h
Palayamkottai 2 2 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=076030018R&Final_St=1&c=h
Cuddalore 196 23 https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF.aspx?fileno=285130006R&Final_St=1&c=h

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த Cuomo foundation என்ற அமைப்பு சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மைலாப்பூர் திருச்சபையால் நிர்வகிக்கப்படும் புனித சார்லஸ் உயர்நிலைப் பள்ளியில் விடுதிகள் கட்டிடம் கட்டுவதற்கென்று 2004 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் நிதி உதவி செய்திருக்கிறது. இதே அமைப்பு 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்குப் பின் சாந்தோம் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களில் The Cathedral என்ற பெயரில் இலவச தொடக்கப்பள்ளிகள் கட்டவும் நிதி உதவி அளித்திருக்கிறது.

இந்த அமைப்பு தமிழகத்தில் மட்டும் 7 பள்ளிகளைக் கட்டித் தந்திருக்கிறது. இவை அனைத்துமே திருச்சபையால் தான் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றில் ஏழாவதாக மாம்பாக்கத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட பள்ளி Indian Green Building Councilலின் தேசிய அளவிலான பிளாட்டினம் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் Cuomo foundation அமைப்பின் நிறுவனர்கள் தங்கள் அமைப்பின் இந்திய பயனாளர் ஒருவரை போப்புடன் சந்திக்க வைக்கும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்கள் என்பது.

அடுத்ததாக கல்வி உதவித் தொகை மூலம் அந்நிய நிதி எவ்வாறு கல்வித் துறையில் விளையாடுகிறது என்று பார்க்கலாம். பாண்டிச்சேரி திருச்சபையின் இணையதள பக்கத்தில் 'கல்வி ஊழியத்தின் மூலம் நமது திருச்சபையின் மதமாற்ற செயல்பாடுகளை நிறைவேற்றி இருக்கிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு திருச்சபைக்கும், கத்தோலிக்க, பிராட்டஸ்டன்ட், பெந்தகொஸ்தே, சிரிய-மலபார் என அனைத்து பிரிவுகளும், Educational ministry என்ற பெயரில் கல்வித் துறையில் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றன.

பாண்டிச்சேரி கடலூர் திருச்சபையின் பேராயரின் கல்வி நிதிக்கு லண்டனிலிருந்து LWA- Little Way Association, ஜெர்மனியிலிருந்து Kindermission ஆகிய அமைப்புகளும் வெளிநாடுகளில் வசிக்கும் பேராயரின் நெருங்கிய நண்பர்களும் நன்கொடை அளிக்கின்றனர். முன்னர் குறிப்பிட்ட Cuomo foundation அமைப்பு கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்து செயல்படுத்தும் பள்ளிக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2 கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்துகிறது. இவற்றில் ஒன்று தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைகழகம் வரையிலானது; மற்றொன்று பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கானது.

கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகள் சிறுபான்மையின அந்தஸ்து பெற்று தொடங்கப்பட்டாலும் அனைத்து மத குழந்தைகளையும் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் உதவித்தொகை போன்ற சிறப்பு கவனம் வழங்கும் விஷயங்களில் கிறிஸ்தவ குழந்தைகளுக்கான தேவை நிறைவுற்ற பின்னரே பிற குழந்தைகளுக்கு அளிப்பது வழக்கம். இது திருச்சபை மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் தனிப்பட்ட உரிமை என்ற போதும் ஏழைகளும் நலிவுற்றவர்களும் தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னுரிமையை பெற கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

உதாரணமாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியை எடுத்துக்கொள்ளலாம். இங்கு நீட் தேர்வுக்கு எதிராக இந்த கல்லூரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கல்லூரியில் 100 இடங்களில் 74 இடங்கள் கல்லூரியுடன் தொடர்புள்ள இந்தியா முழுவதும் பரவியுள்ள பல்வேறு மிஷனரி அமைப்புகளின் பரிந்துரைக் கடிதத்தின் அடிப்படையில் நிரப்பப்பட்டன.

இவ்வாறு இடங்களை நிரப்பும் முன் பல தேர்வுகள் வைக்கப்படுவதாகவும் இறுதியாக நேர்முகத் தேர்வின் போது பைபிளில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் சரியாக பதில் அளிக்கும் பட்சத்தில் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மருத்துவக் கனவுடன் இருக்கும் பல மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் படிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. இங்கு கல்வி தரமாக இருப்பதாலும் கட்டணம் குறைவாக இருப்பதாலும் நம் குழந்தைக்கு ஒரு இடம் கிடைக்காதா என்று பெற்றோர்கள்‌ தவிக்கின்றனர்.

சிறந்த கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை என்பது ஒருபுறமிருக்க இந்தக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்காக தாய்மதம் நீங்கி கிறிஸ்தவ மதத்தை தழுவுவதும் இந்தக் கல்லூரியில் படிப்பவர்கள் ஜார்க்கண்ட் போன்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு மிஷனரி செயல்பாடுகளில் ஈடுபடத் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

அடுத்ததாக அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் வாயிலாக மதமாற்றத்திலும் கல்வியிலும் வெளிநாட்டு நிதியின் தாக்கம் என்ன என்பதை பார்ப்போம். தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலம் என்று மாரில் அடிக்காத குறையாக பீற்றிக் கொள்ளும் பகுத்தறிவுவாதிகள் நிறைந்த மாநிலத்தில் 'இந்தியாவிலேயே அதிக அளவு அனாதை இல்லங்கள் இருப்பது ஏன்?' என்ற கேள்வி இன்னும் எழாமல் இருப்பது, 'பகுத்தறிவின்' ஆழத்தைக் காட்டுகிறது.

உண்மையான பகுத்தறிவுவாதிகளுக்கு நிஜமாகவே இத்தனை அனாதை இல்லங்களை நடத்துவதற்கான தேவை இங்கு உள்ளதா என்ற சந்தேகம் எழும். ஆனால் இதனால் பாதிப்படையும் சமூகமும் சரி, இதற்கென்று உலகம் முழுக்க உள்ள நாடுகளில் இருந்து FCRA மூலம் நன்கொடை அனுப்பி வைக்கும் கொடையாளர்களும் சரி, இதைப்பற்றி எண்ணிப் பார்ப்பதாக தெரியவில்லை.

கடந்த ஆண்டு நடந்த சம்பவம் இது. Back2Back Holistic Home என்ற‌ பெயரில் இயங்கி வந்த 'அனாதைகள் இல்லத்தில்' ஒரு 14 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த பெண்ணுக்கு தாய் இருப்பது ஊடக செய்திகள் மூலம் தெரிய வந்தது. இந்த 'அனாதைகள் இல்லத்துக்கு' வெளிநாடுகளில் இருந்து FCRA மூலமாக நிதி பெறப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் வந்த நிதியைப் பயன்படுத்தி அனாதை இல்லம்/விடுதி மற்றும் பள்ளிகளைக் கட்டி பெற்றோர் இருக்கும் குழந்தைகளைக் கூட அனாதைகள் என்று காட்டி வந்திருக்கிறார்கள்.

இதற்கான அவசியம் என்ன? குழந்தைகள் பெற்றோருடன் இருப்பது தானே இயற்கை. அப்படி இல்லாவிட்டாலும் நலிவுற்ற குழந்தைக்கு உதவுங்கள் என்று கல்விக்கு உதவி கேட்கலாமே? அனாதை என்று கூறுவது ஏன்? கிறிஸ்துவின் அரவணைப்பிற்குள் அடங்கவில்லை என்பதாலா? 'விடுதலை' போல் இதற்கும் வேறு அர்த்தம் இருக்கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.

இது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட டியூஷன் சொல்லித் தருகிறேன் என்று ஜவ்வாது மலை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை ஒரு பாரதியார் அவரது சகோதரியின் உதவியுடன் கடத்திச் சென்றிருக்கிறார். மோசே மினிஸ்ட்ரி சம்பவம் மற்றொரு எடுத்துக்காட்டு.

இலவச உணவு, உடை, உறைவிடம் தருவதாகக் கூறி கல்வியின் பெயரால் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து அவர்களைப் பயன்படுத்தி ஆடம்பர வாழ்வு வாழ வெளிநாட்டினரிடம் பிச்சை எடுப்பதோடு அல்லாமல், அவர்களது வாழ்வைச் சீரழித்து விட்டு வெளிநாட்டு நிதி மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி தப்பிச் செல்லும் நிகழ்வுகள் வாடிக்கையாகி விட்டன. இதற்கும் மோசே மினிஸ்ட்ரி நிகழ்வு சிறந்த உதாரணம்.

கேரளாவில் கத்தோலிக்க திருச்சபை நடத்தும் கம்ப்யூட்டர் வகுப்பில் படிக்க வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ஒரு குழந்தைக்கு தாயாக்கி சிறுமியின் தந்தையையே தான் கற்பழித்ததாக ஒப்புக் கொள்ள வைத்த பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரியின்‌ கதையும் சிறந்த உதாரணம். இவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வை திருச்சபையில் உள்ள அனைவரும், கன்னியாஸ்திரிகள் உட்பட, மூடி மறைத்தது குறிப்பிடத்தக்கது. பாதிரியார் ராபின் திருச்சபை நடத்தும் பள்ளிக்கு முதல்வராக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகையவர்களிடம் தான் தரமான கல்விக்கு ஆசைப்பட்டு நமது குழந்தைகளை ஒப்டைக்கிறோம். இத்தகையவர்களுக்குத் தான் FCRA வரப்பிரசாதமாக அமைகிறது. நிலைமை எந்த அளவுக்கு மோசம் என்றால் இத்தகைய பள்ளி ஒன்றை மூடக் கூடாது என்று பெற்றோர் பேராயரிடம் கோரிக்கை விடுத்து போராட்டம் செய்யும் அளவுக்கு.

கல்வியில் FCRA மூலம் வரும் வெளிநாட்டு நிதியின் தாக்கம் இத்தோடு முடிவதில்லை. கோடைக்கால வகுப்புகள், பைபிள் வகுப்புகள், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்டவை பற்றி பிரச்சாரம் செய்யும் FCRA-NGOக்கள் என்று பல வழிகளில் கிறிஸ்தவ அமைப்புகள் குழந்தைகளுக்கு குறி வைக்கின்றன. எனவே FCRA மூலம் இந்தியாவுக்குள் நிதி வருவதை அனுமதிப்பதும், கல்வித் துறையில் ஏகபோக உரிமையை அனுபவிக்கும் கிறிஸ்தவ பள்ளிகளை கண்டு கொள்ளாமல் விடுவதும் இந்து கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.

Thanks to : https://www.hindupost.in/law-policy/fcra-impact-on-education/

Reference

http://archdioceseofmadrasmylapore.in/history

http://www.apostolicnunciatureindia.com/Default.aspx

https://issuu.com/cuomofoundation/docs/rapport_2017_gb_4d9ef514743dcb

http://www.elenacuomo.com/meeting-holiness-pope-francis-maria-elena-coumo/

https://m.timesofindia.com/city/chennai/cmc-gets-100-exemption/amp_articleshow/69696782.cms

Next Story
கதிர் தொகுப்பு
Trending News