Kathir News
Begin typing your search above and press return to search.

அவதூறுகளுக்கு முடிவுரை : காட்டை அழித்து கட்டப்பட்டதா ஆதியோகி? வனத்துறையின் அதிகாரப்பூர்வ விளக்கம்!

அவதூறுகளுக்கு முடிவுரை : காட்டை அழித்து கட்டப்பட்டதா ஆதியோகி?  வனத்துறையின் அதிகாரப்பூர்வ விளக்கம்!

DhivakarBy : Dhivakar

  |  5 Dec 2021 12:56 PM GMT

"வனப்பகுதியில் ஈஷா எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை, கோவை வனப்பகுதியில் வரையறுக்கப்பட்ட யானை வழித்தடம் என்பதே இல்லை" என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு வனத்துறை அளித்துள்ள பதில், ஈஷா யோகா மையம் மீது எழுப்பப்பட்ட அவதூறுகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது.


கோயம்புத்தூர் ஈஷா யோகா மையம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் யோகக் கலை பயிற்றுவிப்பதன் மூலம் தன் ஆன்மீக பங்களிப்பை அளித்து வருகிறது. ஈஷா கோயம்புத்தூரில் தொடங்கியது முதலே சத்குருவின் யோகக் கலை பயிற்சி முறையும் அவரது போதனைகளும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சு வருகிறது. மக்களின் மேன்மையை மட்டும் கருத்தில் கொள்ளாமல்,



ஈஷா பசுமை கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் நாட்டின் மண் வளம், இயற்கை வளம் மற்றும் இயற்கை விவசாய முறையை, சாதாரண விவசாயிடம் சென்றடைய வைப்பது என 20 ஆண்டுகளாக பல தளங்களில் ஈஷா சேவையாற்றி வருகிறது. இதன் நற்பெயரை கெடுக்கும் வகையில் பல சந்தர்ப்பங்களில், பல சந்தர்பவாதிகளால் பல அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது.


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்ட கும்பல், தமிழக மக்களிடம் சத்குருவும் அவரது ஈஷா'வும் சென்றடையக் கூடாது என்பதற்காக ஒரு ஆதாரமற்ற அவதூறை இந்த ஆன்மீக மையத்தின் மீது பரப்பியது, "ஈஷா யோகா மையம் வனப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்பதும், ஈஷா யோகா மையத்தின் பெருமை ஆதியோகி சிலை யானை வழித்தடத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்டது" என்பதே அந்த அவதூறு.


சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் பல தருணங்களில் பல இடங்களில் இந்த அவதூறுகளுக்கு தக்க பதிலடி அளித்துள்ளார்.



இருப்பினும் பொய்யர்கள் தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் மீது அவதூறுகளை பரப்பி தான் வருகின்றன. இச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொய்யர்களின் கருத்தாக்கங்களுக்கு முடிவுரை எழுதும் வகையில் ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது.

மேற்கூறிய விமர்சனங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகளாக வனத்துறையிடம் ஒருவர் கேட்டுள்ளார், அவர் எழுப்பிய கேள்விகளும் வனத்துறையின் பதில்கள் பின்வருமாறு.

கேள்வி : ஈஷா வனப்பகுதியில் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதா?

பதில் : வனப்பகுதியில் ஈஷா எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை.

கேள்வி : வனப்பகுதியில் ஈஷா தனது கட்டிடங்களை கட்டி உள்ளதா?

பதில் : வனப்பகுதியில் ஈஷாவின் கட்டிடங்கள் எதுவும் கட்டப்படவில்லை.




கேள்வி : ஆதியோகி சிலை அமைந்துள்ள, அதனைச் சுற்றியுள்ள இடங்கள் வனப்பகுதியில் வருகின்றதா?

பதில் : மேற்கூறிய பதில்களால் இந்த கேள்வி எழுவதற்கான தேவையில்லை.

கேள்வி : ஈஷா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானை வழித்தடம் உள்ளதா?

பதில் : கோவை வனப்பகுதியில் வரையறுக்கப்பட்ட யானை வழித்தடம் என்பது இல்லை.




கேள்வி : ஈஷாவின் அருகில் உள்ள யானை வழித்தட விபரங்கள் வேண்டுகிறோம்.

பதில் : கோவை வனப்பகுதியில் வரையறுக்கப்பட்ட யானை வழித்தடம் என்பது இல்லை.

கேள்வி : ஈஷாவின் அருகில் யானைகள் வாழ்விடம் உள்ளதா?

பதில் : இல்லை.

கேள்வி : யானைகள் வாழ்விடத்தில் ஈஷாவின் கட்டுமானங்கள் உள்ளதா?

பதில் : இல்லை.

கேள்வி : ஈஷாவிற்கு சொந்தமான இடங்கள் ஏதேனும் யானை வாழ்விடங்களை ஆக்கிரமித்து உள்ளதா ?

பதில் : இல்லை.


அரசின் பதில்கள் ஈஷா மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது.

ஈஷா மீதும் சத்குரு அவர்கள் மீதும் தொடர்ந்து பூசப்படும் அவதூறுகள், ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் மீது தொடர்ச்சியாக இழிவுபடுத்தும் முயற்சியின் நீட்சியே என்பதை நாம் அனைவரும் அறியவேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News