Kathir News
Begin typing your search above and press return to search.

உள்நாட்டுப் போரின் விளிம்பில் ஆப்கானிஸ்தான்? என்ன செய்யப்போகிறது இந்தியா?

அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் அங்கே வன்முறை வெடித்து மறுபடியும் உள்நாட்டுப் போர் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவுகின்றது.

உள்நாட்டுப் போரின் விளிம்பில் ஆப்கானிஸ்தான்? என்ன செய்யப்போகிறது இந்தியா?

Saffron MomBy : Saffron Mom

  |  9 July 2021 7:27 AM GMT

பல்லாண்டுகளாக பலவித அந்நிய சக்திகளின் ஊடுருவல்கள் மற்றும் அதனால் உண்டான போர்கள், சொந்த மண்ணிலேயே உருவான தீவிரவாதம், தலிபான்கள் ஆகிய பல காரணிகளால் ஆப்கானிஸ்தான் வன்முறை மிகுந்த இடுகாடாக மாறி இருக்கிறது.

அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் அங்கே வன்முறை வெடித்து மறுபடியும் உள்நாட்டுப் போர் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவுகின்றது.


அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, ரஷ்யா, துருக்கி என பல்வேறு நாடுகள் அமெரிக்க வெளியேற்றத்திற்கு பின்னர் இருக்கும் ஆப்கானிஸ்தான் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஆர்வத்தையும் பங்களிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றன.

இதில் இந்தியாவின் பங்கு என்ன? இந்தியாதான் போரினால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு உதவிகள் வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளது.


ஆப்கானிஸ்தான் பார்லிமென்டில் தொடங்கி பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், அணைகள் என பலவற்றை கட்டியெழுப்ப இந்தியா பெரும் உதவி புரிந்து வருகிறது. இதனால் இந்தியாவிற்கு அங்கே நல்ல பெயரும் கிட்டியுள்ளது.

ஆனால் இந்த நல்ல பணிகளால் உண்டான நல்ல பெயர் ஆப்கானிஸ்தான் அரசியல் விவகாரங்களில் இந்தியாவிற்கு கருத்து சொல்ல பெரிய வாய்ப்பை ஒன்றும் அளித்து விடவில்லை. இதில் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை எதிர்பார்ப்பதும் அந்த அளவுக்கு சாத்தியமில்லை.


இவ்விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு முற்றிலுமாக இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் நினைப்பதும் வெளிப்படையான ரகசியம் தான். இந்தியாவின் முதலீடு, நல்லெண்ணம் ஆகியவற்றை பெறுவதற்கு எந்தவித நிதி வளங்களும் இல்லாத காரணத்தினால் பாகிஸ்தான் ராணுவம் தங்கள் சார்பாக பினாமி ராணுவத்தையும் உருவாக்கி வைத்துள்ளது. தலிபான்களுடன் உறவை வளர்த்துள்ளது. தலிபான்கள் 50 சதவிகித ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்துகின்றனர்.

வருங்காலத்தில் இந்திய படையெடுப்பிற்கு எதிராக மிகப்பெரிய புகலிடமாக ஆப்கானிஸ்தான் விளங்கும் என்று பாகிஸ்தான் ராணுவம் உறுதியாக நம்புகிறது. எனவே ஆப்கான் ராணுவத்திற்கு ஆயுதங்களோ அல்லது பயிற்சியோ வழங்கும் இந்தியாவின் முயற்சி பாகிஸ்தானால் கடுமையாக எதிர்க்கப்படும். பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அங்கு இருக்கும் பல போராட்டக்காரர்களுக்கு இந்தியா உதவி வருவதாக எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் குற்றம்சாட்டி வருகிறது.


ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் தாங்கள் எப்படி நடக்க வேண்டும் என்ற வலுவான திசை இல்லாமல் தடுமாறுகிறார்கள். அவர்களுக்கென்று சரியான நிதி நிலைமை இல்லை. அவர்களால் அந்த அளவு ஆட்சி செய்யவும் இயலாது. இந்த இடத்தில் இந்தியா கண்டிப்பாக அவர்களுக்கு உதவி செய்ய முடியும். ஆனால் அதற்கு அதற்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் வருங்காலத்தை வடிவமைக்கும் கருவியாக இந்தியா அமையாது என்பதும் ஒருவகையில் உண்மை.

ஒருவேளை இந்தியா இம்முறை தங்கள் முயற்சிகளுக்கு அதிகப்படியான பலன்களை பெற முடியுமா? பாகிஸ்தானிடம் அமெரிக்காவின் பொறுமை கரைந்து கொண்டிருக்கிறது. சீனா ஆப்கானிஸ்தானில் தங்களுடைய பங்களிப்பை விரிவுபடுத்த விரும்புகிறார்கள். தங்களுடைய பொருளாதாரத் திட்டத்தை (CPEC) தாழ்வாரத்தை அங்கேயும் விரிவுபடுத்த விரும்புகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யாவும் ஒரு பார்வை வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் மட்டுமே தங்களுடைய கால் தடத்தை ஆப்கானிஸ்தானில் விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறது, இந்தியாவையும் ஓரங்கட்ட நினைக்கிறது.

ரஷ்யாவும் ஈரானும் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் நுழைந்து அங்கு இருக்கும் மினரல் செல்வங்களை பெற முயற்சிப்பார்கள் வெளிப்படையான விஷயம். இந்த விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து ஒத்துழைக்க முடியுமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்தியா ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்து வரும் இரண்டு பில்லியன் டாலர்களை பங்களாதேஷ், ஸ்ரீலங்கா,ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் இடம் முதலீடு செய்ய முடிந்தால், ஏற்கனவே சீனாவின் அணியில் சென்று விட்டது போல் இருக்கும் இவர்கள் இந்தியா பக்கம் சாய்வார்களா? ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டுப்போரில் இந்தியாவின் பங்களிப்பை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News