Kathir News
Begin typing your search above and press return to search.

வேளாண் சட்டம்: நீதிமன்றம் அமைத்த கமிட்டியில் இருக்கும் நால்வர் யார்? எப்படிப்பட்டவர்கள்?

வேளாண் சட்டம்: நீதிமன்றம் அமைத்த கமிட்டியில் இருக்கும் நால்வர் யார்? எப்படிப்பட்டவர்கள்?

வேளாண் சட்டம்: நீதிமன்றம் அமைத்த கமிட்டியில் இருக்கும் நால்வர் யார்? எப்படிப்பட்டவர்கள்?

Saffron MomBy : Saffron Mom

  |  14 Jan 2021 6:39 AM GMT

உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைத்தது. மேலும் மத்திய அரசிற்கும் விவசாய சட்டத்தை எதிர்த்து போராடி வரும், குறிப்பிட்ட சில மாநிலங்களை சேர்ந்த அரசியல் காரணங்களுக்காக போராடும் போராட்டக்காரர்களும் இணைந்து ஒரு தீர்வு காண நான்கு பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது.

இந்த நான்கு பேர் கொண்ட கமிட்டியில் பேனலில் பிரமோத் குமார் ஜோஷி, அசோக் குலட்டி, அனில் காணவாட், மற்றும் பூபிந்தர் சிங் மன் ஆகியோர் அடக்கம். அரசாங்கம் இந்த கமிட்டியை அமைத்ததை வரவேற்றாலும், பல போராட்ட சங்க தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த கமிட்டியை சேர்ந்தவர்கள் புதிய சட்டங்களுக்கு ஆதரவாக பலமுறை வெளிப்படையாக பேசி இருப்பதாக கூறினார்கள். கமிட்டி தன்னுடைய முதல் சந்திப்பை ஜனவரி 22ல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டக்காரர்களிடம் இருந்தும் அரசாங்கத்திடமிருந்து தகவல்களை பெற்றுக்கொண்டு இரண்டு மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் தனது கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தை முன்னேற வேண்டுமானால் பஞ்சாபைச் சேர்ந்த அந்த போராட்டக்காரர்கள் கமிட்டியை சந்திக்க தயாராக இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் தங்களுக்கு வழக்குகளை சட்டங்களை திரும்ப பெற வேண்டும் வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்த கமிட்டியில் இருக்கும் நான்கு பேரை பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

1. அசோக் குலட்டி

வேளாண் செலவு மற்றும் விலை குறித்த கமிஷனின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் மிகவும் மதிக்கப்படும் வேளாண் பொருளாதார நிபுணர். விவசாயம் மற்றும் பண்ணை தொழில் சம்பந்தமான பிரச்சினைகளை குறித்து பல ஆண்டுகளாக எழுதி வருகிறார். இவர் புதிய வேளாண் சட்டங்களை வலுவாக ஆதரிக்கிறார். இத்தகைய சட்டங்கள் பல காலத்திற்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பினார். இவர் பிரதமரின் பொருளாதார அறிவுரை கவுன்சிலில், அடல் பிகாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் ஒரு உறுப்பினராக இருந்தார். இவர் ஐசிஐசிஐ வங்கி கார்ப்பரேஷனில், விவசாய நிதி கார்ப்பரேஷனில் போர்ட் உறுப்பினராக இருந்திருக்கிறார். 2015இல் பத்மஸ்ரீ பட்டத்தை பெற்றார்.

2. ப்ரோமோத் குமார் ஜோஷி

வேளாண் பொருளாதார நிபுணர். ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் பொருளாதார நிபுணரும், தெற்காசியாவின் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும் ஆன இவர் அரசாங்கத்தின் விவசாய கொள்கைகளை பலமாக ஆதரிக்கிறார்.

பினான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் டிசம்பர் 15ஆம் தேதி எழுதிய கட்டுரை மிகவும் பிரபலமானது. அவர் குறிப்பிடுகையில், போராட்டக்காரர்கள் ஒவ்வொரு சமாதானப் பேச்சுவார்த்தையின் போதும் தங்களுக்கு தேவையான விஷயங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஆரம்பத்தில் விவசாயிகளை, விவசாய சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது குற்றம் சாட்டினார்கள். ஆனால் இது நியாயமான கூற்று அல்ல. கடந்த 20 வருடங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜோஷி பல மதிப்பு மிக்க பதவிகளில் அமர்ந்திருக்கிறார். அதில் தேசிய வேளாண் ஆராய்ச்சி பயிற்சி மையத்தின் இயக்குனர் பதவியும் அடக்கம். பலவிதமான விருதுகளையும் பெற்றிருக்கும் அவர் அவருடைய நிபுணத்துவம் சந்தை, தொழில்நுட்ப கொள்கைகள் மற்றும் நிறுவன பொருளாதாரம் ஆகியவற்றை தாண்டி செல்கிறது.

3. அனில் கானவாட்

விவசாய தலைவர். ஷெட்கரி சங்காதனா என்ற விவசாய சங்கத்தின் தலைவராக உள்ளார்.. மகாராஷ்டிராவை அடித்தளமாக கொண்ட இந்த அமைப்பின் விவசாய குழுக்கள் இந்த வேளாண் சட்டத்தை பெரிதும் ஆதரிக்கின்றன. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் டிசம்பர் மாதத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து அந்த சட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கினர். இந்த சட்டத்திற்கு ஆதரவாக இருந்தாலும் சில உறுதிகளை அவர் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறார்.

4. பூபந்திர் சிங் மன்

விவசாய தலைவர். BKU (மன்) என்ற அமைப்பின் தேசிய தலைவர் ஆவார். இது பாரதிய விவசாய சங்கத்தில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். ராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினரான இவர், இந்த வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார் ஆனால் சில திருத்தங்களுடன் .மேலும் அவர் குறைந்தபட்ச ஆதரவு விலை எக்காரணத்தை கொண்டும் நீக்கிவிட பட மாட்டாது என்று எழுத்து பூர்வமான உறுதியை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறார். 1960களில் விவசாய நண்பர்கள் என்ற ஒரு அமைப்பை துணை நிறுவனராக இவர் ஆரம்பித்தார். மேலும் இவர் அனைத்திந்திய விவசாய ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். இது மாநிலங்கள் தாண்டி பல்வேறு விவசாய குழுக்களுக்கு ஒரு பொதுவான சந்தையை அளிக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News