Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்விஸ் வங்கியில் மேலும் ஒரு கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் பட்டியல் வெளியானது - அடுத்த அதிரடி என்ன?

ஸ்விஸ் வங்கியில் கருப்புப்பணம் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான நபர்களின் தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் அரச அடுத்தபடியாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஸ்விஸ் வங்கியில் மேலும் ஒரு கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் பட்டியல் வெளியானது - அடுத்த அதிரடி என்ன?
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Oct 2022 2:33 PM GMT

ஸ்விஸ் வங்கியில் கருப்புப்பணம் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான நபர்களின் தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் அரச அடுத்தபடியாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை சேமித்து வைத்திருப்பதாகவும் இவை அனைத்துமே கணக்கில் வராத கருப்பு பணம் எனவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்திய அரசு கருப்பு பணத்தை மீட்பதற்கு பலவிதமான நடவடிக்கைகளையும் பல காலமாக எடுத்துவருகிறது, குறிப்பாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த முதல் கருப்புப்பணம் மீட்பதை குறிக்கோளாகவே கொண்டு செயல்பட்டுவருகிறார்.

இந்த நிலையில் மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்தது முதல் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளை தொடர்புகொண்டு கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வாங்க பெரும் முயற்சி எடுத்துவருகிறது. ஏற்கனவே பலமுறை சுவிட்சர்லாந்து பண்டமாற்று முறை போல் தகவல் பரிமாற்றம் மூலம் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை வெளியிடுவதாக கூறி 74 நாடுகளிடம் தெரிவித்து தகவல்களை அளித்து வந்தது.

ஆனால் குறிப்பிட்ட 27 நாடுகளுக்கு எந்த விதமான தகவலையும் சுவிட்சர்லாந்து வெளியிடவில்லை தற்போது ஒரு வழியாக ஸ்விட்சர்லாந்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் அதிகமான இந்தியர்கள் பெயர் உள்ள நான்காவது பட்டியல் வெளியானது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர தானியங்கி தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகள் 34 லட்சம் கணக்குகள் பற்றிய விவரங்களை 101 நாடுகளுடன் பகிர்ந்துள்ளது.

இதில் தனிநபர், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் கணக்குகளும் அடங்கும். ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்துள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 121 நாடுகளைச் சேர்ந்த நபர்களின் கணக்குகளை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்காண்டுகளாக கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கணக்குகள் வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி வருவதால் இந்தியா இந்த 121 நாடுகளில் முக்கியமான நாடாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த கணக்குகளை பற்றி வேறு எந்த தகவலும் வெளியிடவில்லை அவ்வாறு வெளியிட்டால் அது தகவல் பரிமாற்றத்தின் விதிமுறைகளை மீறுவதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இது பாதிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள், பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர், தீவிரவாத இயக்கத்திற்கு உதவி செய்துள்ளனர் என்பதை பற்றிய விவரங்களை பெறுவதற்கு இந்த தகவல் பெரிய அளவில் உதவியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எவ்வளவு தான் முறையாக வரி செலுத்தினாலும் கணக்கில் வராத பணம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகத்தான் இருக்கிறது.

விரைவில் வரி ஏய்ப்பு மட்டுமின்றி நாட்டின் தீவிரவாத செயல் போன்றவைகளில் ஈடுபடுபவர்கள் அதிகம் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News