Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் அமித்ஷா'வை ஒரு மணி நேரம் சந்தித்த அண்ணாமலை - 'நான் இருக்கேன் இறங்கி விளையாடு' என தட்டி கொடுத்து அனுப்பிய அமித்ஷா

சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் பேசி தமிழக அரசியல் களத்தில் தான் எடுக்க போகும் நடவடிக்கைகளுக்கு

டெல்லியில் அமித்ஷாவை ஒரு மணி நேரம் சந்தித்த அண்ணாமலை - நான் இருக்கேன் இறங்கி விளையாடு என தட்டி கொடுத்து அனுப்பிய அமித்ஷா
X

Mohan RajBy : Mohan Raj

  |  23 Jan 2023 12:55 AM GMT

சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் பேசி தமிழக அரசியல் களத்தில் தான் எடுக்க போகும் நடவடிக்கைகளுக்கு க்ரீன் சிக்னல் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அரசியல் களம் தற்பொழுது மாறி வருகிறது, இதுவரை அதிமுக - திமுக என இருந்த நிலை தற்பொழுது சற்று மாறி திமுக ஆளும் அரசாகவும் அதன் தவறுகளை முதன்மையாக சுட்டிக்காட்டும் அரசாக பாஜக மாறி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு யார் போட்டியிடுவார்கள் என்ற பரபரப்பு அரசியல் உலகில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 2024 தேர்தலில் குறைந்தபட்சம் 25 எம்பிக்களை தமிழகத்தில் இருந்து அனுப்ப வேண்டும் என்ற ஆணித்தரமான முடிவில் உள்ளார். இந்த பரபரப்பான சூழலில் பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது!

கடந்த வாரம் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது, அக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லி சென்ற அண்ணாமலை மத்திய அமைச்சர் அமைச்சராக சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியதாக பாஜக தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் குறிப்பாக தமிழக தற்போதைய அரசியல் கள நிலவரம், அடுத்த கட்டமாக தமிழக பாஜகவை எடுத்துச் செல்வது, தமிழக பாஜகவின் தற்போதைய கட்டமைப்பு குறித்த பல முக்கிய தகவல்களை இதில் பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைத்துள்ளார்.

அந்த ஒரு மணி நேரத்தில் அண்ணாமலை தற்போதைய தமிழக பாஜகவின் நிலை, தற்போதைய தமிழக அரசியல் களத்தில் எடுக்கவேண்டிய முடிவுகள், தமிழக பாஜக அடுத்து எடுத்து வைக்க போகும் அடிகள், யாரெல்லாம் கட்சியில் பொறுப்பு! யாரெல்லாம் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள், கட்சியில் உள்ள கருப்பு ஆடுகள் யார்? மேலும் கூட்டணி கட்சிகளின் நிலவரம் என்ன? தமிழக மக்களின் மன ஓட்டங்கள் என்ன? என ஒரு ரகசிய அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

இதையெல்லாம் கவனிப்பாக கேட்டுக் கொண்ட அமித்ஷா அண்ணாமலைக்கு கூறிய முடிவுகளுக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாக தெரிகிறது. அண்ணாமலை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தேசிய அளவில் பாஜக தலைவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் எனவும் மேலும் இன்னும் ஏதேனும் தேசிய பாஜகவில் இருந்து உதவிகள் தேவைப்பட்டால் அதனையும் செய்ய தயார் எனவும் அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு முக்கிய விஷயமாக தமிழகம் எப்படியும் கைக்குள் வரவேண்டும் அதற்கு இதுதான் சரியான காலம் மற்றும் நேரம் என அமித்ஷா அண்ணாமலையை தட்டிக் கொடுத்து அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

அந்த விறுவிறுப்பில் தமிழகம் வந்த அண்ணாமலையும் முதற்கட்டமாக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி மாநில நிர்வாகிகள் மத்தியில் பரபரவென செய்ய வேண்டிய வேலைகள் குறித்து எடுத்து கூறியுள்ளார். அதே செயற்குழு கூட்டத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நடைபயணம் துவங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த நடை பயணத்தில் மக்களை நேரடியாக சந்திக்கவும், திமுக செய்யும் தவறுகளையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஒருபுறம் நடை பயணம் இருக்கையில் மறுபுறம் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பூத் ஏஜென்ட் மற்றும் பூத் பார்வையாளர்களை சராசரியாக நியமித்து வரவும் நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல் கட்சிக்குள் இன்னும் உழைப்பவர்களை மேலே கொண்டு வந்து அவர்களுக்கு பதவி அளிக்கவும் மற்ற கட்சிகளுடன் இணைந்து இணக்கமாக செல்லும் கருப்பு ஆடுகளை நீக்கவும் அண்ணாமலை ரகசிய திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் கட்சி வளர வேண்டும் என்றால் களத்தில் கட்சி வளர்ப்பது மட்டுமின்றி கட்சியில் உள்ள பிற்போக்கு சிந்தையாளர்களை ஓரம் கட்டுவது தான் கட்சி வளர்ச்சிக்கு முக்கியம் என்பதில் அண்ணாமலை தெளிவாக இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை போடும் கணக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணி சார்பில் 25 எம்பிக்கள் செல்வது உறுதி அவ்வாறு 25 எம்பிக்கள் செல்லும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பொறுப்பு தமிழகத்தில் 5 பேருக்காவது கண்டிப்பாக கிடைக்கும் என எப்பொழுது பாஜக கமலாலய வட்டாரத்தில் பேச்சு அடிக்கிறது அடிபடுகிறது. அப்படி ஐந்து எம்பிக்கள் கிடைக்கும் பட்சத்தில் தமிழக பாஜக அடுத்த இலக்காக 2024 தேர்தலை நோக்கி நகரும் எனவும் தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News