Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலையின் அதிரடியால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் போலி பாஸ்போர்ட் விவகாரம் - களமிறங்கும் என்.ஐ.ஏ

அண்ணாமலையின் அதிரடியால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் போலி பாஸ்போர்ட் விவகாரம் - களமிறங்கும் என்.ஐ.ஏ
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2022 2:35 AM GMT

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கவர்னர் ரவிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மதுரை அவனியாபுரத்தில் போலி ஆவணங்கள் வாயிலாக 200க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட காலகட்டத்தில், மதுரை போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவியில் இருந்தார்.

கமிஷனரின் தலையீடு இல்லாமல் போலி ஆவணங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது. இதன் வாயிலாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.மதுரை கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம், இப்போது உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக உள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் டேவிட்சன் பெயர் சேர்க்கப்பட்டது.இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்புமாறு தமிழக உள்துறை செயலரிடம் இருந்து டேவிட்சனுக்கு கடிதம் அனுப்பப்பட்டதோடு, இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும்ஏற்படவில்லை.டேவிட்சனின் திட்ட மிட்ட தாமதத்தால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம்.எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கவர்னர் ரவியை வரும் 21ல் நேரில் சந்தித்து புகார் அளிக்கவும் அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார். கவர்னர் ரவியை, 21ல் அண்ணாமலை சந்தித்து புகார் மனு அளித்த பின், பாஸ்போர்ட் விவகாரத்தை என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்க அமித் ஷா முடிவு செய்துள்ளதாக உள்துறை வட்டாரங்கள்தெரிவித்தன.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News